Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Tuesday, November 07, 2006

சினிமா - S.J. சூரியா செய்யும் அசிங்கம்

சினிமா நம் பொழுதுபோக்கின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. நமக்கு மூன்று முதல்வர்களை தந்திருக்கிறது. ஆனால் அதன் தரம் எந்த அளவில் இருக்கிறது? மணிரத்னம், பாரதிராஜா போன்றவர்கள் கூட சதையை காட்ட ஒரிரு காட்சிகள் வைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். திறமையில் அடுத்த நிலையில் இருக்கும் சிலரது சினிமாக்கள், சதையை மட்டுமே நம்பி படமெடுக்கிறார்கள். இதில் ரசிகர்கள் கேட்கிறார்கள் என்று பழி திருப்பிகிறார்கள்.

முகமே பார்க்க சகிக்காத டைரக்டர் சூர்யா, அவன் படத்தில் கதாநாயகிகளை ஆடையுரித்து படத்தை ஓட்டுகிறான். வேர்வை நாற்றத்தை Deodorant போட்டு மறைப்பதைப் போல். (அவன் அழகுக் குறைவு என்பதால் அவனைத் திட்டவில்லை, அவனை திட்ட வேண்டுமென்று அழகைக் குறை கூறகிறேன்). இதில் ஜாதி/அரசியல் சார்பாக சசிகலாவின் மனைவி... ஸாரி... கணவன் நடராஜனிடம் சரணடைந்து ஸென்சார் போர்டை ஏமாற்றுவது வேறு. இவன்களுக்கெல்லாம் திறமைக்கு பஞ்சம் வந்ததால் படத்தில் சதையை போட்டு படம் ஓட்டுகிறார்கள்.

அடுத்து, யதார்த்தை காட்டுகிறோமென்று ஒரு சப்பைக் கட்டு.
இவன்களின் படத்தைப் பார்த்து ஸெக்ஸையும், காதலையும் குழப்பிக் கொள்வதற்கு பேசாமல் Porn பார்த்து உண்மையையாவது தெரிந்து கொள்ளலாம். ஏன் ஸெக்ஸ் சம்பந்தப்பட்ட யதார்த்தங்கள் தான் இந்த மாமாக்களின் கண்களுக்குத் தெரிகிறாதா? மக்களின் எத்தனையோ துன்பங்களும் யதார்த்தம்தானே? அவற்றை காட்ட வேண்டியதுதானே?

திடீரென்று ஏன் இந்தப் புலம்பல்?
இன்று ஒரு பள்ளியின் வாசல் அருகே மிக மிக Revealing ஆன போஸ்டர் பார்த்ததால் :-( .....

Shitttt....

(Title ல் S.J. சூரியா என்று மாற்றியுள்ளேன் )

10 Comments:

  • Please add his intials (S.J) before his. other wise it wud be mistaken as peralagan surya

    By Blogger வினையூக்கி, at 10:02 AM, November 07, 2006  

  • மாற்றிவிட்டேன் திரு. வினையூக்கி.
    (உங்கள் பெயர் நன்றாக உள்ளது)

    By Blogger Kans, at 10:09 AM, November 07, 2006  

  • So nice of you. Thank you kans. Once again thanks your comment // (உங்கள் பெயர் நன்றாக உள்ளது)
    //

    By Blogger வினையூக்கி, at 10:10 AM, November 07, 2006  

  • please re-publsh your blog again. From thamizmanam it is not directly linking to your this post.

    By Blogger வினையூக்கி, at 10:17 AM, November 07, 2006  

  • did that too.
    thanks for pointing to it !

    By Blogger Kans, at 10:42 AM, November 07, 2006  

  • நாம் இதில் செய்யக் கூடிய விஷயம் எளிதானது, இது போன்ற செக்ஸ் மேனியாக் களின் படத்தை புறக்கணிப்பதுதான் அது.இதுவரை நான் சூர்யாவின் படத்தில் ஒன்றைத்தான் பார்த்திருக்கிறேன். இனிமேல் பார்ப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றேன்.இது என்னுடைய சுதந்திரம் என்றால் அப்படி படம் எடுப்பது அவர் சுதந்திரம். இப்படிதான் சினிமா எடுக்க வேண்டும் என்று நாம் கூற எந்த உரிமையும் இல்லை.

    By Blogger வேந்தன், at 12:16 AM, November 08, 2006  

  • திரு.வேந்தன் , நீங்கள் சொல்வது சரி.
    ஆனால் புறக்கணிக்கும் மனப் பக்குவம்
    அந்த பள்ளி மாணவர்களுக்கு இருக்குமா? இப்படி படமெடுப்பது அவன் சுதந்திரமென்று இளம் வயது மாணவர்கள் தடம் மாறுவதைக் கண்டும் நம் கண்களை மூடிகொள்ள வேண்டுமா? அந்த போஸ்டரை பள்ளியின் அருகே வைக்காதவரை அவன் செய்கைகளை ஒன்றும் சொல்லப்போவதில்லை. அவன் இப்படி பொது இடத்தில் விளம்பரம் செய்யும் பொழுது, அதை விமர்சிக்கும் உரிமை
    நமக்கு உண்டல்லவா?

    By Blogger Kans, at 4:49 AM, November 08, 2006  

  • உண்மைதான். சூர்யாவின் புது படத்தின் போஸ்டர்களை நானும் பார்த்தேன்.சூர்யாவின் கிர்யேட்டிவிட்டி படத்திற்கு படம் முன்னேறிவருகிற(!) மாதிரி தெரிகிறது.ஆனால் இன்றைய தலைமுறை கெடுவதற்கு சினிமாவை விட மோசமான காரணிகள் நிறைய இருக்கின்றன.உலகமயமாக்கலும், ஏகப்பட்ட குப்பைகளை வீட்டிற்கு உள்ளேயே கொண்டுவந்து கொட்டும்போது அதை தவறாக குழந்தைகள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமானால் அதை பெற்றோர் தான் செய்யவேண்டும்.சூர்யா போன்ற வக்கிரபுத்தியாளர்களை தடுப்பது கடினம்.

    By Blogger வேந்தன், at 6:32 AM, November 08, 2006  

  • சூப்பர் பதிவு கண்ஸ்,

    அருமையான கருத்து. எஸ்.ஜே.சூர்யா மாதிரி சில்லறை பொறுக்கிகள் புறக்கணிக்கப்படவேண்டியவர்கள்.

    என்னுடைய பழைய பதிவு ஒன்று:

    http://muthuvintamil.blogspot.com/2006/01/blog-post_16.html

    By Blogger Muthu, at 7:07 AM, November 08, 2006  

  • வருகைக்கும் கருத்துரைத்தமைக்கும் நன்றி திரு.வேந்தன் மற்றும் திரு.முத்து-தமிழினி அவர்களே.

    By Blogger Kans, at 8:56 AM, November 08, 2006  

Post a Comment

<< Home