Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Thursday, November 09, 2006

அஞ்சலி

கரை தாண்டி இருந்தும் சகோதர
முறை தானே அவர்கள்
உறவின் செய்திகளை
"உலகச் செய்தி"யில் படிக்கையில்
உறுத்தத்தான் செய்கிறது

கணிணியில் கேட்டுக் கொண்டிருந்த
காதல் பாட்டு கசக்கிறது
ஈழத்தின் இழப்புகளைக் கேட்டு

நிறுத்திவிட்டு அழுகிறேன்
நிசப்தத்தில்...

(ஒரு இந்தியத் தமிழனாய் இருந்து
என்னால் இந்த இரங்கல்தான் தர முடிகிறது :-( .
40 பேரைக் கொன்ற இந்த செய்கைக்கும் ஒரு
காரணம் சொல்லாமலா போவார்கள் அந்த அரக்கர்கள்)

2 Comments:

  • நேற்று பிபிஸி பார்த்துக்கொண்டிருந்தபோது, பாலஸ்தீனத்தில் ஷெல்லடித்து 18ற்கு மேற்ப்பட்டவர்கள் (பெண்கள், குழந்தைகள் அதிகம்) அநியாயச் சாவு என்று கூறிக்கொண்டிருந்தார்கள். இதுகுறித்து என்ன சொல்கின்றீர்கள் என்று இஸ்ரேலிய அரசுக்கு பேசவல்ல ஒரு பெண்ணிடம் கெட்டபோது, 'விசாரிக்கவேண்டும், ஆனால் பாலஸ்தீனியர்களை நம்பமுடியாது...' என்று அலட்டத் தொடங்கியபோது, இரத்த்க் கொதிப்பு வந்து திட்டிவிட்டு channelஐ மாற்றியிருந்தேன். இப்படி வெளிப்படையாக நடந்ததை படம்பிடித்துக்காட்டிக்கூட முழுபூசணிக்காயை மறைப்பது போல முழு உலகிற்கு மறைக்கின்றபோது... ஈழத்தில் நடந்ததற்கு இலங்கை அரசு இது குறித்து என்ன சொல்லும்....? யோசித்துப் பார்க்கவே தேவையில்லை :-(.

    By Blogger இளங்கோ-டிசே, at 12:22 PM, November 09, 2006  

  • 1983 போல் ஒரே நாளில் ஆயிரம் கொலைகள் செய்தால் மற்ற நாடுகளுக்கு பதில் சொல்ல வேண்டுமென்று தினம் 10-20 என்று சிறிது சிறிதாக தவணை முறையில் இன-அழிப்பை நடத்துகிறார்கள் :-(

    By Blogger Kans, at 12:36 PM, November 09, 2006  

Post a Comment

<< Home