Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Wednesday, November 22, 2006

ஜாதி - குறுகிய மனங்களின் தர்க்கம்

எனக்கும் என் நண்பர்களுக்கும் ஜாதியைப் பற்றி காரசாரமாக விவாதங்கள் நடக்கும்.நான் ஜாதிகள் கூடாது அனைவரும் சமம் என்று பேசினால், சில ஆட்கள் கேட்கும் முதல் கேள்வி "நீ ஜாதிகுள்ளே தான் கல்யாணம் பண்ணுவியா?" . கேட்டுவிட்டு ஏதோ மடக்கிவிட்டதாக புளங்காகிதம் வேறு. என் நெருங்கிய நண்பரே என்னைக் கேட்டதுண்டு.

ஜாதி என்பது சமுதாய அளவில் பார்க்கையில் பல கொடுமைகள் புரியும் ஒரு பழக்கம். அது பிறப்பின் அடிப்படையில் ஒருவனுக்கு வாய்ப்புகள்/மரியாதை மறுக்கப்படுதல்.

ஒருவனின் திருமணம் என்பது சொந்த விவகாரம். எத்தனையோ நண்பர்கள் முற்போக்கு எண்ணமுடையவர்களாக இருந்தாலும் கல்யாணத்தை பெற்றோர்கள் கையில் விட்டு விடுவார்கள். (சொந்த முயற்சியில் ஒன்னும் பலிக்காமல் போயிருக்கலாம் :-) ) அதனால் அவர்களுக்கு திருமணம் அவர்களின் ஜாதியிலேயே அமையும். அதற்காக அவர்கள் சமுதாய அளவில் ஜாதியை எதிர்க்கக் கூடாதா என்ன?
இப்படி குறுகிய மனதுடன் தர்க்கம் செய்பவர்களுக்கு என்ன பதில் சொல்லலாம்?

61 Comments:

  • வீட்டிலேயே ஜாதியை எதிர்க்க முடியாதவனால் சமுதாய அளவில் எதிர்த்து என்னத்த கிழிக்க போகிறான். இதை குறிகிய மனங்களின் தர்க்கம் என்பது வீண் வாதம்.

    எதிலோ ஏறி எதையோ பிடிக்க முடியாதவன், எங்கேயோ ஏறி வைகுந்தம் போகும் கதை இது.

    வீட்டை திருத்த பாருங்க சார். அப்புறம் சமூகத்தை பத்தி யோசிக்கலாம்.

    நல்லாகீதே உங்க நியாயம்.

    By Blogger மாயவரத்தான், at 5:51 AM, November 22, 2006  

  • Charity begins at home.

    கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போகப்போறானாக்கும்! மாயவரத்தான் fill up the blanks ல் கொடுத்த பழமொழி.

    By Blogger வஜ்ரா, at 6:02 AM, November 22, 2006  

  • மாயவரத்தான், ஏன் இத்தனை ஆவேசம்?

    நான் என் ஜாதியிலே திருமணம் செய்திருக்கலாம் ஆனால் நான் அனைவரையும் சமமாக பார்ப்பது என்ன தவறு? அதுவுமின்றி, பெற்றோர்கள் ஒன்றும் ஜடப் பொருட்கள் அல்ல.
    அவர்கள் மனதினைப் புண்படுத்த இயலாமல் அவர்கள் காட்டும் வழியில் செல்பவர்கள் எத்தனையோ பேர்.

    ஜாதி ஏற்றத்தாழ்வு பார்க்கும் ஒருவன், என் மனைவி என் ஜாதி என்பதாலேயே நான் கூறும்
    சமத்துவக் கருத்தை புறக்கணிப்பது குறுகிய மன்முடைய செயல்.

    இதை விட என்னால் தெளிவாக விளக்க முடியவில்லை.

    By Blogger Kans, at 6:08 AM, November 22, 2006  

  • வருகைக்கு நன்றி திரு. மாயவரத்தான் மற்றும் திரு. வஜ்ரா.

    By Blogger Kans, at 6:11 AM, November 22, 2006  

  • ஜாதி இல்லை என்று சொல்லுபவர்கள் மாற்று ஜாதியைப் பார்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டுமா?

    காமெடியா இருக்கே?

    நாங்க தான் ஜாதி இல்லைன்னு சொல்றோமே... அப்புறம் என்ன சொந்த ஜாதி, மாற்று ஜாதி வெங்காயமெல்லாம் :-)))))))

    By Blogger லக்கிலுக், at 6:26 AM, November 22, 2006  

  • ஜாதி ஒழிப்பு என்பது மிக லாங் டெர்மில் சாத்தியமாகலாம் இதை முழுமையாகச் ச்யல்படுத்தும் போது:

    ஒவ்வொரு தனிமனிதனாலும் தன் வீட்டிலே முழுமையாக அமல்படுத்தப் படுகையில், ஒவ்வொரு வீட்டினின்றும் இது சாத்தியப்படுத்தப்பட்டபடியே முச்சந்தியில் மேடையேறி சமூகநீதி பேசும்படி செய்ய வேண்டும்.

    சாதிசார் அரசியலை முற்றிலுமாகச் சார்ந்து வாழ்ந்தவாறே சாதியை எப்படி ஒழிக்கமுடியும் சார்?

    By Blogger Hariharan # 03985177737685368452, at 6:28 AM, November 22, 2006  

  • திரு Hariharan, ஜாதியால் சமுதாயத்தில் இருக்கும் கெட்டத் தாக்கங்களை "ஜாதி விட்டு திருமணம் செய்யாதவர்கள்" எதிர்க்கக் கூடாதா?

    சமத்துவம் பேச "ஜாதி விட்டு திருமணம் செய்வதை" ஒரு compulsory condition என்று சொல்ல வருகிறீர்களா?

    By Blogger Kans, at 6:43 AM, November 22, 2006  

  • திரு luckylook,

    //நாங்க தான் ஜாதி இல்லைன்னு சொல்றோமே... அப்புறம் என்ன சொந்த ஜாதி, மாற்று ஜாதி வெங்காயமெல்லாம் :-))))))) //

    எப்படி சார் இப்படியெல்லாம் Escape Clause கண்டுபிடிகிறீங்க???

    By Blogger Kans, at 6:46 AM, November 22, 2006  

  • //சமத்துவம் பேச "ஜாதி விட்டு திருமணம் செய்வதை" ஒரு compulsory condition என்று சொல்ல வருகிறீர்களா?//

    ஜாதிவிட்டுத் திருமணம் செய்வது மட்டுமே இன்றிருக்கும் ஜாதீயத்தை அகற்றிவிடாது!

    இன்றிருப்பதான சாதிசார் அரசியல் என்ற வளையத்திற்குள் போனதால் சில ஜாதி மேலேறுவது சில ஜாதி கீழிறங்குவது என்பது மாறி மாறி வரும். ஜாதியற்ற சமத்துவம் என்பது கண்டிப்பாக வராது!

    By Blogger Hariharan # 03985177737685368452, at 6:58 AM, November 22, 2006  

  • பேசுவதை எல்லாம் மட்டும் தான் செய்யவேண்டும் என்றால் ஹரிஹரன், மாயவரத்தான் போன்றவர்கள் மனசாட்சியை தொட்டு சொல்லட்டும்.

    அவர்கள் பேசுவதை மட்டும் தான் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்களா?

    ஜாதி வேண்டாம் என்று சொன்ன பாரதியாரும் அவர் சாதி பெண்ணை தானே மணந்திருந்தார். அவரை ஏன் ஜாதி வேண்டாம் என்று பேசினார் என்று இந்த கும்மிகள் கேட்பார்களா?

    By Blogger லக்கிலுக், at 7:02 AM, November 22, 2006  

  • ////நாங்க தான் ஜாதி இல்லைன்னு சொல்றோமே... அப்புறம் என்ன சொந்த ஜாதி, மாற்று ஜாதி வெங்காயமெல்லாம் :-))))))) //

    எப்படி சார் இப்படியெல்லாம் Escape Clause கண்டுபிடிகிறீங்க???//

    மீண்டும் பதிவின் தொடக்கத்திற்கே வந்திருக்கிறீர்கள். கலப்பு திருமணம் = ஜாதி ஒழிப்பு என்பது முதல் தர ஜல்லி. பிறக்கும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் இருந்து மற்றொரு ஜாதி தொடரும் (இட ஒதுக்கீட்டிற்கு தகுதி வாய்ந்த ஜாதி எதுவோ அது). ஜாதிகளை ஒழிக்க முடியாது என்ற நிதர்சனத்தை உணர்ந்து, அனைவரும் ஒன்று பட்டு வாழ வழிகளை செயல்படுத்தினாலே போதும்.

    By Blogger Krishna (#24094743), at 7:19 AM, November 22, 2006  

  • //
    என் மனைவி என் ஜாதி என்பதாலேயே நான் கூறும்
    சமத்துவக் கருத்தை புறக்கணிப்பது குறுகிய மன்முடைய செயல்.
    //

    இப்படிச் சொல்லியிருக்கவேண்டும் ஆனால் நீங்கள் சொன்னது.


    //
    நான் ஜாதிகள் கூடாது அனைவரும் சமம் என்று பேசினால், சில ஆட்கள் கேட்கும் முதல் கேள்வி "நீ ஜாதிகுள்ளே தான் கல்யாணம் பண்ணுவியா?" . கேட்டுவிட்டு ஏதோ மடக்கிவிட்டதாக புளங்காகிதம் வேறு.
    //

    பேசுவது யார்வேண்டுமானாலும் செய்யலாம். செயலில் காட்டுவது தன் வீட்டில், தானே ஆரம்பிப்பது தான் முதல் படி.

    கல்யாணம் என்பது எல்லோரும் செய்யும் ஒன்று. சாதி என்றால் முதலில் தோன்றுவதும் அதே. ஆகவே அப்படிக் கேட்கின்றனர்.

    ஏன், உங்கள் வீட்டு செப்டிக் டேங் சுத்தம் செய்யவரும் கார்பரேஷன் தொழிலாளியை வீட்டின் ஹாலில் அனுமதிப்பீர்களா என்று கேட்கலாம்.

    அவருக்குத் தண்ணீர் கொடுப்பதற்கு எந்த சொம்பை பயன் படுத்துவீர்கள் என்று கேட்கலாம்.

    சமத்துவம் என்பது பேசலாம். அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்யும் முன்னர் தான் கடைபிடிக்கவேண்டும் என்பதைச் சொல்லத்தான் அந்த கேள்வி வருகிறது.

    அதை குறுகிய எண்ணம் என்று சொல்ல முடியாது. Logical question என்று தான் சொல்ல முடியும்.

    By Blogger வஜ்ரா, at 7:22 AM, November 22, 2006  

  • //இன்றிருப்பதான சாதிசார் அரசியல் என்ற வளையத்திற்குள் போனதால் சில ஜாதி மேலேறுவது சில ஜாதி கீழிறங்குவது என்பது மாறி மாறி வரும். //
    திரு.Hariharan, ஜாதிகள் என்பது irrelevant ஆகும் நாளில் இந்த ஏற்ற-இறக்கங்கள் நிற்கும். அப்படி irrelevant ஆக மாற முட்டுக்கட்டையாக நிற்கும் ஆட்கள், சமத்துவம் பேசும் ஆட்களின் கருத்துக்களை எதிர் கொள்ளாமல், அவர்களின் சொந்த விஷயங்களில் கேள்வி கேட்டு தப்பிப்பது அநாகரீகம் என்பது என் கருத்து.

    மனிதனை மனிதனாக பார்க்க விடாமல் தடுப்பது ஜாதீயம். ஆனால் மனிதனை மனிதனாக பார்க்கவும், அவனை சமாக நடத்தவும் நான் ஜாதி விட்டு திருமணம் செய்திருக்க வேண்டியதில்லை. சிலக் குடும்பங்களில் மருமகளோ, மருமகனோ வேறு -ஆனால் உயர்ந்த ஜாதி என்று திருமணத்திற்கு சம்மதம் சொல்லிய பெற்றோர்களை நான் அறிவேன். அது சமத்துவமா? இல்லையே. அந்த அனுமதி கூட ஜாதியதின் அசிங்க முகம்தானே?

    By Blogger Kans, at 7:23 AM, November 22, 2006  

  • //பெற்றோர்கள் ஒன்றும் ஜடப் பொருட்கள் அல்ல.
    அவர்கள் மனதினைப் புண்படுத்த இயலாமல் அவர்கள் காட்டும் வழியில் செல்பவர்கள் எத்தனையோ பேர்//

    இதெல்லாம் டூ மச் சார். ஜாதிப்பற்று இருப்பதினால் தான் பெற்றோர்கள் தங்கள் ஜாதிப் பெண்ணையோ / பையனையோ பார்த்து திருமணம் செய்கிறார்கள்.

    அவர்கள் ஜடப் பொருட்கள் அல்ல என்று மரியாதை கொடுக்கும் நீங்கள், அடுத்தவரின் பெற்றோர் ஜாதி பார்க்கும் போது மட்டும் எதிர்ப்பேன் என்பது என்ன வகை லாஜிக்?!

    By Blogger மாயவரத்தான், at 7:25 AM, November 22, 2006  

  • /சமத்துவம் பேசும் ஆட்களின் கருத்துக்களை எதிர் கொள்ளாமல், அவர்களின் சொந்த விஷயங்களில் கேள்வி கேட்டு தப்பிப்பது அநாகரீகம் என்பது என் கருத்து//

    சமத்துவம் பேசும் ஆட்களால் ஒரு பிரயோஜனமுமில்லை என்பது தன்னுடைய சொந்த விஷயம், பெற்றோர் பார்த்தது என்று எஸ்கேப் ஆவதிலிருந்தே தெரிகிறது.

    உங்களுக்கு உங்கள் பெற்றோர் உங்கள் ஜாதியிலேயே பார்த்து வைத்து செய்த திருமணம் எப்படி சொந்த விஷயமோ அப்படி தானே அய்யா அடுத்தவருக்கு அவர் ஜாதியின் மீது பிடிப்பு வைத்திருப்பதும் சொந்த விஷயமாகும்!

    ஜாதியே இல்லை, நான் ஜாதி பார்க்க மாட்டேன், என்னுடைய குடும்பத்தினரும் அப்படி தான். நான் அவர்களை அப்படி மாற்றி விட்டேன். அதனால் ஊருக்கு உபதேசம் செய்ய நான் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்... அது கரெக்ட். அதை விட்டு விட்டு என்னுடைய வீட்டில் நடந்தது என்னுடைய சொந்த விஷயம், ஆனால் அடுத்தவன் வீட்டில் நடப்பது அவனது சொந்த விஷயம் இல்லை என்று வீண்வாதம் செய்வது அயோக்கியத்தனம் என்று சொல்லலாம் அல்லவா?

    By Blogger மாயவரத்தான், at 7:28 AM, November 22, 2006  

  • Vajra
    ========
    //
    என் மனைவி என் ஜாதி என்பதாலேயே நான் கூறும்
    சமத்துவக் கருத்தை புறக்கணிப்பது குறுகிய மன்முடைய செயல்.
    //

    இப்படிச் சொல்லியிருக்கவேண்டும் ஆனால் நீங்கள் சொன்னது.


    //
    நான் ஜாதிகள் கூடாது அனைவரும் சமம் என்று பேசினால், சில ஆட்கள் கேட்கும் முதல் கேள்வி "நீ ஜாதிகுள்ளே தான் கல்யாணம் பண்ணுவியா?" . கேட்டுவிட்டு ஏதோ மடக்கிவிட்டதாக புளங்காகிதம் வேறு.
    //
    ============

    மேலுள்ள என்னுடைய கருத்துக்களுக்கு
    வித்தியாசம் ஏதுமில்லை என்றே நான் எண்ணுகிறேன்.

    By Blogger Kans, at 7:34 AM, November 22, 2006  

  • தற்போதைய அரசியல் முறை இருக்கும் வரை ஜாதியை ஒழிக்க முடியாது. கல்வியறிவு பெற்றவர்கள் ஓரளவு இந்த விடயத்தில் முதிர்ச்சியடைந்திருப்பர் என நினைத்திருந்தேன். தமிழ் மணத்தில் புழங்க ஆரம்பத்திலிருந்து அது முற்றிலும் தவறு என உணர்ந்து கொண்டேன். ஆகவே நம் நாட்டிற்கு ஜாதி ஒழிய ஒரே வழி - சர்வாதிகாரம். கட்டாயக் கடைபிடிப்பு. ஜாதி மட்டும் இல்லை - நம் அடிப்படை வாழ்கைமுறைகளிலும் மாற சர்வாதிகாரம் ஒன்றே வழி. (குப்பை போடுதல், எச்சில் துப்புதல், பொது இடத்தில் சிறுநீர் கழித்தல், அடிப்படை சுகாதாரம், கடமையுணர்ச்சி, சாலை பழக்கங்கள் - இப்படி எல்லாவற்றிற்குமே இது பொருந்தும்).

    By Blogger Krishna (#24094743), at 7:38 AM, November 22, 2006  

  • //ஜாதிகள் என்பது irrelevant ஆகும் நாளில் இந்த ஏற்ற-இறக்கங்கள் நிற்கும். அப்படி irrelevant ஆக மாற முட்டுக்கட்டையாக நிற்கும் ஆட்கள், சமத்துவம் பேசும் ஆட்களின் கருத்துக்களை எதிர் கொள்ளாமல், அவர்களின் சொந்த விஷயங்களில் கேள்வி கேட்டு தப்பிப்பது அநாகரீகம் என்பது என் கருத்து.//

    சாதியின் தாக்கத்தை இறக்க இரு வழிகள்.

    1. தான் பிறந்த உயர் சாதியோடு அதிகம் இணைத்துப் பெருமையடித்து அடுத்தசாதியை இழிவுபடுத்தி, அடக்கி ஆதிக்கம் செலுத்துவதை தனிநபராக உயர் சாதியில் பிறந்தவர்கள் அக்கறையோடும் பொறுப்புணர்வோடும் இருக்கவேண்டும். உயர்சாதி என்பது ஓபிசி/எம்பிசி இவர்களையும் உள்ளடக்கியது.

    2. அரசு மற்றும் அரசியலில் சாதி எந்த விதமாகவும் உள்ளே வரவே கூடாது.

    இதில் இரண்டாவது அனைத்து தனிமனிதர்களின் கைகளில் இல்லை. எனவே முதலாவது முழுமனதுடன் தனிமனிதர்கள் முயலவேண்டும்.
    அட்லீஸ்ட் ஹிப்போக்ரேஸியை முற்றிலும் நிறுத்தலாமே? பழி பரஸ்பரம் சாடுவதால் தீர்வு ஏற்படுமா?

    By Blogger Hariharan # 03985177737685368452, at 7:41 AM, November 22, 2006  

  • //ஆகவே நம் நாட்டிற்கு ஜாதி ஒழிய ஒரே வழி - சர்வாதிகாரம். கட்டாயக் கடைபிடிப்பு.//
    எதைக் கட்டாயமாக்க சொல்கிறீர்கள்?
    ஒருத்தரின் ஒழுக்கத்தை திருத்த கட்டாயப்படுத்தலாம், திருமணத்திற்கு அது பொருந்துமா?

    By Blogger Kans, at 7:43 AM, November 22, 2006  

  • Hariharan,
    //2. அரசு மற்றும் அரசியலில் சாதி எந்த விதமாகவும் உள்ளே வரவே கூடாது.//

    பல ஆயிரம் ஆண்டுகளாக disadvantageous நிலையில் இருந்தவர்களை, பல ஆயிரம் ஆண்டுகளாக advantageous நிலையில் இருந்தவர்களோடு மோத சொல்வது நியாயமல்லவே?

    By Blogger Kans, at 7:46 AM, November 22, 2006  

  • //பேசுவதை எல்லாம் மட்டும் தான் செய்யவேண்டும் என்றால் ஹரிஹரன், மாயவரத்தான் போன்றவர்கள் மனசாட்சியை தொட்டு சொல்லட்டும்.

    அவர்கள் பேசுவதை மட்டும் தான் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்களா//

    லக்கி,

    நான் என்னளவில் உயர்சாதித் திமிர் என்று அடுத்த மனிதனிடம் எதையும் திணிப்பதில்லை.

    I treat others the way I would like to be treated!

    Treat Human as human ever human

    இதனைச் செய்ய முதலில் மனம் வேண்டும். சமூகநீதி என பொதுவாழ்வுக்கு வந்து முழங்குபவர் முழுமனதோடு செய்யும் கலப்புத்திருமணம் இதற்கு முன்னோடியாக Leadership by example என்று நாயகனை வழிபடும் நமது சமூகத்திற்கு வழிகாட்டுதலாக அமையலாம்!

    By Blogger Hariharan # 03985177737685368452, at 7:49 AM, November 22, 2006  

  • நம் புரிதலில் பெரிய இடைவெளி உள்ளதாக உணர்கிறேன். அதனால் நான் திரும்ப எனது நிலையை சொல்கிறேன்:
    ===================================
    ஜாதீயம் என்பது தன் ஜாதி உயர்ந்தது மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று எண்ணுதல்.
    அதனை அழித்து, அனைவரையும் சமமாக நினைத்தல், நடத்தல், கோயிலுக்குள் அனுமதித்தல், நமது வீட்டிற்குள் அனுமதிப்பது,
    நமக்கு நிகராக நடத்துவது என்பவை சமத்துவம். இதனைச் சொல்ல/செய்ய ஒரு சாமானியனான நான் கலப்புத் திருமணம் செய்திருக்க வேண்டியதில்லை.

    By Blogger Kans, at 7:51 AM, November 22, 2006  

  • //பல ஆயிரம் ஆண்டுகளாக disadvantageous நிலையில் இருந்தவர்களை, பல ஆயிரம் ஆண்டுகளாக advantageous நிலையில் இருந்தவர்களோடு மோத சொல்வது நியாயமல்லவே?//

    சில நூறு ஆண்டுகளான ஆங்கில அடிமைக்காலத்தில் வலிந்து திணிக்கப்பட்ட divide and rule என்ற வெள்ளையனின் காலத்தில் பாகுபேதம் என்ற அளவில் உண்மையிருக்கிறது.

    பல ஆயிரம் ஆண்டுகள் என்பெதெல்லாம் இன்று அரசியல் செய்வோரது பிழைப்புவாதம்.

    advantageous நிலையில் அன்றும் இன்றும் இருப்பவர்கள் இன்றைக்கு வெளியே மன்னர் குலம் அரச குலம் என்று உயர்ஜாதிப் பெருமை பேசி சலுகைக்காக மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக அரசு கெஜெட்டில் செல்வாக்கினால் இருப்பவர்களே

    By Blogger Hariharan # 03985177737685368452, at 7:56 AM, November 22, 2006  

  • நம் புரிதலில் பெரிய இடைவெளி உள்ளதாக உணர்கிறேன். அதனால் நான் திரும்ப எனது நிலையை சொல்கிறேன்:
    ===================================
    ஜாதீயம் என்பது தன் ஜாதி உயர்ந்தது மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று எண்ணுதல்.
    அதனை அழித்து, அனைவரையும் சமமாக நினைத்தல், நடத்தல், கோயிலுக்குள் அனுமதித்தல், நமது வீட்டிற்குள் அனுமதிப்பது,
    நமக்கு நிகராக நடத்துவது என்பவை சமத்துவம். இதனைச் சொல்ல/செய்ய ஒரு சாமானியனான நான் கலப்புத் திருமணம் செய்திருக்க வேண்டியதில்லை.
    நான் கலப்பு திருமணம் செய்யாததால் மட்டுமே, என் சமத்துவக் கருத்தை எதிர்க்க ஜாதி வெறியர்களுக்கு உரிமையில்லை.

    By Blogger Kans, at 7:58 AM, November 22, 2006  

  • //பல ஆயிரம் ஆண்டுகளாக disadvantageous நிலையில் இருந்தவர்களை, பல ஆயிரம் ஆண்டுகளாக advantageous நிலையில் இருந்தவர்களோடு மோத சொல்வது நியாயமல்லவே? //

    இந்த எண்ணம் ஒன்றே போதும் - நாம் உருப்படாமல் போவதற்கு. யார் இங்கே மோதச் சொன்னார்கள்? ஏன் அனைவரும் சேர்ந்து வாழும் வழிமுறைகளை ஆராயக் கூடாது? உங்கள் வாதம் முழுவதுமே, குழு உணர்ச்சி, தன் குழுக்காகப் போராடுதல் (யாரை எதிர்த்து என்ற வினா இயல்பாகவே எழுகிறது) போன்றவற்றை பின்பற்றியிருப்பது ஒரு ஆரோக்கியமான போக்காகத் தெரியவில்லை. நாம் அனைவரும் நமக்குள்ளே போராடிக் கொண்டே இருக்க வேண்டும்? பிறகு எப்படி முன்னேறுவது? ஆங்கிலேயரோ, மொகலாயரோ வந்து மீண்டும் நம்மை அடிமைப் படுத்தும் வரையா? ஜாதி நம்மைப் பிரிக்கிறது என்பது இன்றைய கால கட்டத்தில் அபத்தமாக இருக்க வேண்டும் - அப்படி இல்லாதது வருத்தமளிக்கிறது.

    By Blogger Krishna (#24094743), at 7:58 AM, November 22, 2006  

  • என்ன லக்கியாரே, நீங்களுமா?

    நாங்கள் பேசுவதை செய்கிறோமா என்பது பிரச்னையல்ல.

    என்னால் செய்ய முடியாததை, செய்ய இயலாததை, ஊருக்கு உபதேசம் செய்வது கிடையாது.

    இப்போ புரியுதா?!

    By Blogger மாயவரத்தான், at 7:58 AM, November 22, 2006  

  • எல்லாரையும் சமமாக மதித்தல் என்ற விவகாரத்திலேயே கலப்புத் திருமணமும் வந்து விடும் சார். உங்கள் வீட்டில் அந்த எல்லாரையும் சமமாக மதித்தல் என்ற விஷயத்தை வலியுறுத்தினீர்களேயானால், அவர்கள் கலப்புத் திருமணம் செய்து வைப்பார்களே?! அப்படி அவர்கள் உங்கள் ஜாதியிலேயே தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று சொல்லுவதிலேயே உங்கள் வீட்டிலேயே அந்த எல்லாரையும் சமமாக நடத்துதல் என்ற விவகாரம் செல்லுபடியாகவில்லை என்று தானே அர்த்தம். அப்படி உங்கள் வீட்டில் உள்ள நான்கைந்து பேரையே உங்கள் போக்குக்கு கொண்டு வர முடியாத உங்களால் ஊருக்கு எப்படி உபதேசம் செய்ய முடியும்?

    காரணங்களை அடிக்கிக் கொண்டுபோனால் ஒவ்வொருவருவருக்கும் ஒவ்வொன்று கிடைக்கும். உங்களுக்கு பெற்றோர் என்பது போல அடுத்தவனுக்கு ஆயிரம் காரணம் கிட்டும்.

    By Blogger மாயவரத்தான், at 8:02 AM, November 22, 2006  

  • //இந்த எண்ணம் ஒன்றே போதும் - நாம் உருப்படாமல் போவதற்கு. யார் இங்கே மோதச் சொன்னார்கள்? ஏன் அனைவரும் சேர்ந்து வாழும் வழிமுறைகளை ஆராயக் கூடாது?//

    நல்ல கருத்து திரு.Krishna, இந்தக் கருத்தை "அனைவரும் அர்ச்சகராகலாம்" என்ற சட்டத்தை எதிர்ப்பவர்களிடம் சொல்ல வேண்டும். அந்த சட்டத்தை போட்டவரை பாராட்ட வேண்டும் :-), சரியா?
    Discussuion திசை மாறுகிறதோ?

    By Blogger Kans, at 8:06 AM, November 22, 2006  

  • மாயவரத்தான்:
    //எல்லாரையும் சமமாக மதித்தல் என்ற விவகாரத்திலேயே கலப்புத் திருமணமும் வந்து விடும் சார். உங்கள் வீட்டில் அந்த எல்லாரையும் சமமாக மதித்தல் என்ற விஷயத்தை வலியுறுத்தினீர்களேயானால், அவர்கள் கலப்புத் திருமணம் செய்து வைப்பார்களே?! //

    நம் பெற்றோர் காலத்தோடு போகட்டுமே இது? இதனைக் காரணம் காட்டி சமத்துவமே கூடாது என்பீர்களா?

    By Blogger Kans, at 8:10 AM, November 22, 2006  

  • //அனைவரும் அர்ச்சகராகலாம்//
    இது இங்கு தேவையில்லாதது என நினைக்கிறேன். ஜாதி சார்ந்த சில தொழில்கள் என்றுமே இருந்திருக்கின்றன. இதனால் நாட்டிற்கு எந்த விதத்தில் கேடு - இதைக் கொண்டு வந்ததால் என்ன பயன் - இப்போது இது தேவையா? ஆகிய கேள்விகளே என் மனதில் எழுகின்றன. இது இப்போது சரி செய்யப்பட வேண்டிய மிக அவசியத் தேவை அல்ல என்பதையும் மறுக்க இயலவில்லை. ஒரு குழுவிற்கு எதிரான போக்காகவே இது பார்க்கப்படுகிறது - பெருவாரியான நம்பிக்கை உடையவர்களால்.

    என்னுடைய சொந்தக் கருத்து - இந்த விஷயத்தில் - no impact. கோவிலுக்கு போவது இறைவனை தரிசிப்பதற்காக. அர்ச்சகரின் பூணூலைப் பார்க்க அல்ல.

    இன்று கூட ஒரு செய்தி வந்துள்ளது - ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தின் நேர் எதிரே பெரியாரின் சிலை எழுப்பப்பட்டிருப்பதைப் பற்றி. இதற்கான அனுமதி 1973-ல் அளிக்கப்பட்டதாம். இன்றைய கால கட்டத்தில் இதனுடைய தேவை என்ன என்பது எனக்குப் புரியவில்லை.

    இத்தகைய செய்கைகள் எல்லாமே நம்மிடையே துவேஷத்தை வளர்த்து குளிர் காய நினைக்கும் அரசியல்வாதிகளுடையது. குழு மனப் பான்மையுடனே நாம் வாழ்ந்து வருவதால் நாமே நம்மைப் புதைத்துக் கொள்ள ஏற்படுத்தும் கல்லறைகள்.

    By Blogger Krishna (#24094743), at 8:19 AM, November 22, 2006  

  • //ஜாதி சார்ந்த சில தொழில்கள் என்றுமே இருந்திருக்கின்றன.//

    திரு. Krishna, இருந்திருக்கலாம்.
    ஆனால், இனியும் இருக்க வேண்டுமா?
    அதனை மாற்றுவதுதான் ஜாதி ஒழிப்பின் முக்கிய ஆரம்பம்.

    By Blogger Kans, at 8:48 AM, November 22, 2006  

  • அட வீணாப்போனவங்களா எல்லாரும் ஜாதி விட்டு ஜாதிதாண்டா கல்யானம் பன்னிக்கனும் இல்லனா நாறிப்போகும்

    புரியலயா? ஆண்ஜாதி(ஆண்) பென் ஜாதியத்தான்(பென்) கல்யானம் பன்னிக்கனும் சரியா

    By Blogger இறையடியான், at 9:30 AM, November 22, 2006  

  • "திரு. Krishna, இருந்திருக்கலாம்.
    ஆனால், இனியும் இருக்க வேண்டுமா?
    அதனை மாற்றுவதுதான் ஜாதி ஒழிப்பின் முக்கிய ஆரம்பம்."

    சரி, இருக்கட்டும். அது அவரவர் தத்தம் நிலையில் இருந்து தீர்மானிக்கும் விஷயம்.

    1935 என் மாமாவின் முதல் பெண் பிறந்த போது, அப்பெண்ணின் கல்யாணம் வரும் சமயத்திலாவது ஜாதகம், சீர் செனத்தி, சாதி எல்லாம் இருக்காது என்று எதிர்ப்பார்ப்பதாக என் மாமா கூறினார் என்று என் அன்னை சொன்னார்.

    அதே பெண்ணுக்கு 1960-ல் கல்யாணம் நடந்த போதும் எல்லாம் அப்படியே இருந்தன, 1990-ல் அப்பெண்ணின் மகளின் கல்யாணம் நடந்த போதும் அப்படியே இருந்தன.

    சமீபத்தில் நடந்த லக்கிலுக் மற்றும் Kans கல்யாணங்களிலும் அப்படியே எல்லாம் இருந்தன.

    என்னமோ போங்கள். நாட்டில் பேச எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது சாதியை பிடித்துக் கொண்டு ஏன் தொங்க வேண்டும்? அது அப்படியேத்தான் இருக்கும்.

    அதே சமயம் சாதி ஒழிய வேண்டும் என்று பேசுபவன் பணக்காரனாக இருந்தாலும் அவன் சாதிக்கு இட ஒதுக்கீடு இருந்தால் அதன் தன் பிள்ளைகளுக்குத் தள்ளிக் கொண்டு போகாமல் இருக்கப் போகிறானா என்ன?

    தம்மைப் பொருத்தவரை எல்லாம் பார்த்து பார்த்து தன் சாதியிலேயே சீர், வரதட்சணை எல்லாம் வாங்கிக் கொண்டு திருமணம் செய்தவர்கள் சாதி ஒழிப்பு பற்றிப் பேசினால் முதலில் இந்தக் கேள்விக்குத் தயாராக வேண்டும். கோபப்பட்டால் பிரயோசனம் இல்லை.

    இதே மாதிரித்தான் 1940-களில் பொருந்தாத் திருமணங்களுக்கு எதிராக தி.க. செய்த ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை தாங்கிய பெரியாரே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டு எல்லோரையும் சங்கடத்தில் ஆழ்த்தினார். அந்தப் போராட்டமும் அதன் பிறகு அவசரம் அவசரமாகக் கைவிடப்பட்டது என்பதும் தெரிந்ததுதானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    By Blogger dondu(#11168674346665545885), at 9:36 AM, November 22, 2006  

  • // அட வீணாப்போனவங்களா எல்லாரும் ஜாதி விட்டு ஜாதிதாண்டா கல்யானம் பன்னிக்கனும் இல்லனா நாறிப்போகும்

    புரியலயா? ஆண்ஜாதி(ஆண்) பென் ஜாதியத்தான்(பென்) கல்யானம் பன்னிக்கனும் சரியா //

    இறையடியான் அண்ணே! இது எங்களுக்கு தோன்றாமல் போச்சே...

    By Blogger Kans, at 9:39 AM, November 22, 2006  

  • வருகைக்கு நன்றி திரு Dondu.

    //சமீபத்தில் நடந்த லக்கிலுக் மற்றும் Kans கல்யாணங்களிலும் அப்படியே எல்லாம் இருந்தன.//

    Kans இன்னும் கல்யாணமாகாத கன்னிப் பையன் :-( . என்னை காலத்திற்கும் Bachelor ஆக்க நினைக்கும் Dondu வின் இந்த
    Statement'ஐ நான் வன்மையாக கண்டிக்கிறேன் :-))

    கொஞ்சம் சீரியசாக பேசுவோம்:
    //என்னமோ போங்கள். நாட்டில் பேச எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது சாதியை பிடித்துக் கொண்டு ஏன் தொங்க வேண்டும்? அது அப்படியேத்தான் இருக்கும்.//

    இல்லை, இந்தியாவில் படிப்பும், exposure உம் பரவினால் ஜாதிகள் ஒழியும் என்று எனக்கு நம்பிக்கை உண்டு.

    //தம்மைப் பொருத்தவரை எல்லாம் பார்த்து பார்த்து தன் சாதியிலேயே சீர், வரதட்சணை எல்லாம் வாங்கிக் கொண்டு திருமணம் செய்தவர்கள் சாதி ஒழிப்பு பற்றிப் பேசினால் முதலில் இந்தக் கேள்விக்குத் தயாராக வேண்டும். கோபப்பட்டால் பிரயோசனம் இல்லை.//

    வழிமொழிகிறேன்...
    பொதுவாக மாற்றங்கள் இரு வகை.
    Abrupt ஆக சில வழக்கங்கள் ஒழியும்.
    சில, சிறிது சிறிதாக மாறும். ஜாதி இரண்டாம் வகை. அப்படி மாறிக்கொண்டிருக்கையில் அதனை தடுக்கும்/பின்னேற்றும் (reverse) செயல்களை நாம் செய்யக்கூடாது.


    //பெரியாரே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டு எல்லோரையும் சங்கடத்தில் ஆழ்த்தினார். //
    பெரியார் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். ஒரு 7,8 வயது சிறுவர்/சிறுமிக்கு திருமணம் செய்வதை எதிர்த்தார்.
    பெரியாருக்கு இரண்டாம் திருமணம் நடக்கையில் அவருடைய மனைவிக்கு வயது 30. அது குழந்தைத் திருமணமா?

    By Blogger Kans, at 9:59 AM, November 22, 2006  

  • குழந்தைத் திருமணம் வேறு, பொருந்தாத் திருமணம் வேறு. இரண்டாவதில் மணமகனுக்கும் மணமகளுக்கும் ரொம்ப வயது வித்தியாசம் இருக்கும். பெண்ணுக்கு 20 வயதிருக்குக்கும். அவளை அறுபது வயதுக்காரருக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் தாரமாகக் கட்டிக் கொடுப்பார்கள். அதைதான் தி.க.வினர் எதிர்த்தனர். பெரியார் எல்லா ஆதரவாளர்கள் முகத்திலும் கரியைப் பூசினார்.

    நீங்கள் அதை இங்கு பூசி மொழுக இயலாது. எல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    By Blogger dondu(#11168674346665545885), at 10:19 AM, November 22, 2006  

  • //நீங்கள் அதை இங்கு பூசி மொழுக இயலாது. எல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.//

    ஐயா, பெரியாரைத் தாங்கவில்லை.
    இவற்றிற்கு கட்சி சார்பற்ற links தர இயலுமா? கண்டிப்பாக பார்க்கிறேன்.
    இத்தலைமுறையை சேர்ந்த எனக்கு அவரைப் பற்றி மேலும் தெரிய அவை வேண்டும்.

    By Blogger Kans, at 10:30 AM, November 22, 2006  

  • //பெண்ணுக்கு 20 வயதிருக்குக்கும். அவளை அறுபது வயதுக்காரருக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் தாரமாகக் கட்டிக் கொடுப்பார்கள். அதைதான் தி.க.வினர் எதிர்த்தனர்.//

    திரு.Dondu;
    நான் ஏற்கனவே திருமணம் என்பது சொந்த விஷயம் என்று சொல்லியிருக்கிறேன். ஒரு பெண்ணின் சம்மதத்தோடு இது நடந்தால் இதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதை எதிர்க்க
    தி.க விற்கோ, எந்தக் கட்சிக்கோ உரிமையில்லை. ஆனால் பணபலத்தில் ஒரு முதியவர் ஒருப் பெண்ணை அடைய நினைத்தால் அதை எதிர்க்கலாம். தி.க வினர் எதனை எதிர்த்தனர் என்று கொஞசம் தெளிவாக சொல்லுங்களேன்.

    By Blogger Kans, at 10:38 AM, November 22, 2006  

  • வாங்க நெருப்பு சிவா,
    குத்தோ குத்துனு குத்தியிருக்கீங்க...

    //நாங்க பெரியாரோட எல்லா கருத்தையும் அவரோட பொருந்தா (??) கல்யாணத்த வச்சு மட்டும்தான் பார்ப்போம். //

    இதுதான் இன்றும் நடக்கிறது.
    சொல்லும் கருத்தைப் பார்க்காமல்
    சொன்னவனின் "Personal Life" ஐ விமர்சிப்பது. பெரியார், கருணாநிதி மற்றும் பலருக்கு :-) இதுதான் நடக்கிறது.

    By Blogger Kans, at 11:30 PM, November 22, 2006  

  • //இதுதான் இன்றும் நடக்கிறது.
    சொல்லும் கருத்தைப் பார்க்காமல்
    சொன்னவனின் "Personal Life" ஐ விமர்சிப்பது. பெரியார், கருணாநிதி மற்றும் பலருக்கு :-) இதுதான் நடக்கிறது.//

    ஹலோ இதேதான் மேல ஒருத்தரு பண்ணிருக்காரு..
    எதாவது பின்னூட்டம் போடரதுக்கு முன்னாடி யோசிப்பா..

    அப்பறம் வாயைகுடுத்து மாட்டிக்காத..

    By Blogger நாடோடி, at 11:56 PM, November 22, 2006  

  • //சமீபத்தில் நடந்த லக்கிலுக் மற்றும் Kans கல்யாணங்களிலும் அப்படியே எல்லாம் இருந்தன.//

    டோண்டு சார்

    ஆனால் மிக சமீபத்தில் அடுத்த 20 அல்லது 25 வருடங்களில் நடக்கப்போகும் லக்கிலுக்கின் வாரிசுகளின் திருமணம் கலப்புத்திருமணமாக இருக்கலாம்... அதை செய்யக்கூடிய மனப்பக்குவம் லக்கிலுக்குக்கு இருக்கிறது.

    நான் குற்றம் காண்பது எனது முந்தைய தலைமுறைகளின் மீது தான்.... நீங்களும் எனக்கு முந்தைய தலைமுறை தான்.....

    By Blogger லக்கிலுக், at 12:03 AM, November 23, 2006  

  • விடாது கருப்பு அவர்களின் பின்னூட்டம்: (I have edited it to a large extent ):

    சாதி வேண்டவே வேண்டாம் என்று சொன்னால் ஒரு தலித்துக்கு கோபம் வராது. மலைவாழ் மக்களுக்கு கோபம் வராது. மற்ற எல்லா திராவிடர்களுக்கும் கோபம் வராது. ஆனால் இந்த பிராமிணர்கள் மட்டும் வானுக்கும் பூமிக்குமா குதிப்பார்கள்!

    இத்தனை தலைமுறை தாண்டிய பிராமிணர்கள் இந்த 21ம் நூற்றாண்டிலும் சாதி வேண்டும் என்கிறார்களே.

    ==========================

    By Blogger Kans, at 12:17 AM, November 23, 2006  

  • வருக விடாது கருப்பு.
    உங்கள் பின்னூட்டதில் எனக்கு முழு உடன்பாடு கிடையாது. எனக்குத் தெரிந்து எத்தனையோ பிராமணர்கள் ஜாதி உணர்வின்றி பழகுகிறார்கள்.
    எத்தனையோ பிராமிணரல்லாதோர் ஜாதி உணர்வோடு இருக்கிறார்கள்.
    "ஜாதி - குறுகிய மனங்களின் தர்க்கம்" என்னும் இந்தப் பதிவு ஒரு குறிப்பிட்ட Community ஐ நோக்கியல்ல.

    By Blogger Kans, at 12:18 AM, November 23, 2006  

  • வருக நாடோடி,
    எனக்கு புரியவில்லை.
    ஆனால் அவரவர் கருத்துக்கு அவரவரே பொறுப்பு.
    :-)

    By Blogger Kans, at 12:24 AM, November 23, 2006  

  • "ஆனால் மிக சமீபத்தில் அடுத்த 20 அல்லது 25 வருடங்களில் நடக்கப்போகும் லக்கிலுக்கின் வாரிசுகளின் திருமணம் கலப்புத்திருமணமாக இருக்கலாம்... "
    அதானே, அப்போது வந்து இப்பதிவர்கள் வந்து பார்க்கவா போகிறார்கள்?

    செய்ய வேண்டிய நேரத்தில் கோட்டை விட்டு விட்டு பெற்றோர்கள் மேல் பழியைப் போடுவதுதானே நடக்கிறது. 25 ஆண்டுகளுக்கு அப்புறமும் மனைவி, மற்ற உறவினர்கள் மேல் அதே பழியைப் போட்டால் போயிற்று.

    கான்ஸ் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறிவிட்டாரே, அவராவது என்ன செய்கிறார் என்று பார்ப்போமா.

    வரதட்சணையை எதிர்த்து, கலப்பு திருமணத்தை ஆதரித்து, பட்டி மன்றங்களில் பேசிய வாலிபன் ஒருவன்,

    தன் திருமண சமயத்தில் மட்டும் அப்பா அம்மாவுக்கு அடங்கிய பிள்ளையானான். :)))))

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    By Blogger dondu(#11168674346665545885), at 12:55 AM, November 23, 2006  

  • //வருக நாடோடி,
    எனக்கு புரியவில்லை.//

    நெருப்பு சிவாவோட பின்னூட்டத்த கொஞ்சம் நேரம் கொடுத்து படித்து பார்க்கவும்.

    By Blogger நாடோடி, at 1:07 AM, November 23, 2006  

  • Dondu, நீங்கள் பதிவின் சாராம்சத்தை புரிந்துகொள்ளவில்லை. காதல் திருமணம் இயல்பாய் நடப்பது.
    எனக்கு கலப்பு திருமணம் நடக்கலாம், நடக்காமல் போகலாம்.
    reiterating my point: கலப்புத் திருமணம் மட்டுமே சமத்துவம் அல்ல.
    சிலக் குடும்பங்களில் மருமகளோ, மருமகனோ வேறு -ஆனால் உயர்ந்த ஜாதி என்று திருமணத்திற்கு சம்மதம் சொல்லிய பெற்றோர்களை நான் அறிவேன். அது சமத்துவமா? இல்லையே. அந்த அனுமதி கூட ஜாதியதின் அசிங்க முகம்தானே?
    அனைவரையும் சமமாக நினைத்தல், நடத்தல், கோயிலுக்குள் அனுமதித்தல், நமது வீட்டிற்குள் அனுமதிப்பது,
    நமக்கு நிகராக நடத்துவது என்பவை சமத்துவம். இதனைச் சொல்ல/செய்ய ஒரு சாமானியனான நான் கலப்புத் திருமணம் செய்திருக்க வேண்டியதில்லை. ஒருத் தலைவன் வேண்டுமானால் "Living as example" ஆகலாம்.

    இந்த ஒரு கலப்புத் திருமண point ஐ வைத்துக் கொண்டு சில சாதி வெறியர்கள் தங்களுடைய கீழ் செயல்களை நியாயபடுத்த முடியாது.

    By Blogger Kans, at 1:15 AM, November 23, 2006  

  • This comment has been removed by a blog administrator.

    By Blogger Kans, at 1:20 AM, November 23, 2006  

  • நாடோடி,
    //நாங்க பெரியாரோட எல்லா கருத்தையும் அவரோட பொருந்தா (??) கல்யாணத்த வச்சு மட்டும்தான் பார்ப்போம். // -- இதை Sarcastic ஆக சொல்லியுள்ளார்.

    மற்றபடி நெருப்பு சிவா யாருடைய "Personal life" பற்றி பேசியுள்ளார்?

    By Blogger Kans, at 1:24 AM, November 23, 2006  

  • "காதல் திருமணம் இயல்பாய் நடப்பது.
    எனக்கு கலப்பு திருமணம் நடக்கலாம், நடக்காமல் போகலாம்.
    reiterating my point: கலப்புத் திருமணம் மட்டுமே சமத்துவம் அல்ல."
    "ஒருத் தலைவன் வேண்டுமானால் "Living as example" ஆகலாம்."

    ரொம்ப சுய சௌகரியத்துக்கு அமைத்துக் கொண்ட பாயிண்ட்கள். ஏன் குடும்பத்தினரிடம் பேசி உங்கள் ஜாதியை விட தாழ்ந்ததாகக் கருதப்படும் சாதியில் பெண் தேடச் சொல்வதுதானே. காதல் திருமணமாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயமா? முயற்சி செய்யும் தைரியம் உண்டா? அதைத்தான் மாயவரத்தான் கேட்கிறார்.

    சரி அது உங்கள் இஷ்டம் என்று கூறலாம். மற்றவர்களுக்கும் அதே மாதிரி இஷ்டம் எல்லாம் உண்டுதானே. அதையும் கேட்பது மாயவரத்தான். நானும் அவற்றையே கேட்கிறேன்.

    சீர் செனத்தியை மற்றவர்கள் திருமணத்தில் எதிர்ப்பவன் தன் திருமணத்தில் மட்டும் அப்பா அம்மா சொல்லைப் பாவிக்கும் சத்புத்திரனாகி விடுகிறான்.

    நானா உங்கள் பாயிண்டைப் புரிந்து கொள்ளவில்லை? ஒரு கருத்துக்கு வாதாடும் நீங்கள் எதிர்க்கருத்துக்களும் சமாளித்துத்தான் ஆகவேண்டும்.

    நான் சொன்ன பாயிண்ட் ரொம்ப க்ளியர். சாதி என்பது அவரவர் ரத்தத்துடன் ஊறியது. அது போக வேண்டுமானால் ஏதேனும் மாற்று வேண்டும். நான் கூறுவது நிலைமையை உள்ளபடி கூறுவது. இதுவே உங்களை சங்கடப்படுத்தினால் எப்படி ஸ்வாமி?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    By Blogger dondu(#11168674346665545885), at 9:38 AM, November 24, 2006  

  • திரு.Dondu அவர்களே, சமத்துவமென்பது திருமணத்தில் மட்டுமே உள்ளது என்பது போல் உள்ளது உங்கள்/மாயவரத்தான் வாதம். அந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்து ஒருவரை எடை போட கூடாது என்பது என் வாதம். நீங்கள் இட்டுள்ள இந்தப் பின்னூட்டம் கூட திருமணத்தை பற்றி மட்டுமே பேசுகிறது.

    //சீர் செனத்தியை மற்றவர்கள் திருமணத்தில் எதிர்ப்பவன் தன் திருமணத்தில் மட்டும் அப்பா அம்மா சொல்லைப் பாவிக்கும் சத்புத்திரனாகி விடுகிறான்.//
    இந்தப் பதிவில் சீர் வரதட்சணைப் பற்றி பேசவில்லை. அவைகளை மிக கடுமையாக எதிர்ப்பவன் நான்.


    //நான் சொன்ன பாயிண்ட் ரொம்ப க்ளியர். சாதி என்பது அவரவர் ரத்தத்துடன் ஊறியது. அது போக வேண்டுமானால் ஏதேனும் மாற்று வேண்டும்.//
    இதை மறுக்கிறேன். படிப்பும், சிறிது பெருந்தன்மையும் இருந்தால் போதும்.
    ஆதிக்க உணர்வை ஒழிக்க வேண்டும்.


    //"காதல் திருமணம் இயல்பாய் நடப்பது.
    எனக்கு கலப்பு திருமணம் நடக்கலாம், நடக்காமல் போகலாம்.
    reiterating my point: கலப்புத் திருமணம் மட்டுமே சமத்துவம் அல்ல."
    "ஒருத் தலைவன் வேண்டுமானால் "Living as example" ஆகலாம்."

    ரொம்ப சுய சௌகரியத்துக்கு அமைத்துக் கொண்ட பாயிண்ட்கள். //

    என்னுடைய அடுத்த பதிவான "அரைத்த மாவு" ஐ படியுங்கள். என் நிலையை தெளிவாக விளக்கியுள்ளேன். (விளம்பரம் போலிருந்தால் மன்னிக்கவும்)

    By Blogger Kans, at 9:57 AM, November 24, 2006  

  • //அந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்து ஒருவரை எடை போட கூடாது என்பது என் வாதம்.//

    இது எல்லா இடத்திலேயேயும் பொருந்துமே.
    ஏன் நீங்க அவங்க மேலே வைக்கிற குற்றசாட்டிற்கு,வாதத்திற்கு.

    எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அதற்கா பார்க்கிற எல்லோரையும் கடவுளை நம்பக்கூடாது என்று நான் சொல்ல முடியுமா?. அப்படி சொன்னால் என் அளவில், சுற்றளவில் நான் முட்டாளாகிவிடுவேன். ஏன்னெனில் அவர்கள் அடுத்து கேட்கும் வாதம் உன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கடவுள் நம்மிக்கை உண்டா இல்லையா?.

    நாம் நம்மளவில் நம் கொள்கைகளோடு இருப்போம்.

    By Blogger நாடோடி, at 10:55 AM, November 24, 2006  

  • This comment has been removed by a blog administrator.

    By Blogger Kans, at 11:09 AM, November 24, 2006  

  • //நாம் நம்மளவில் நம் கொள்கைகளோடு இருப்போம். //

    உங்கள் கொள்கை உங்களோடு நிறுத்தினால் நான் உங்களை கண்டுகொள்ள மாட்டேன். ஆனால் உங்கள் கொள்கை என்னையும், நான் வாழும் சமுதாயத்தை பாதிக்கும்போது அதை விமர்சிக்கும் உரிமை எனக்கு உண்டு. ஜாதி என்று சொல்லி, "நீ கீழானாவன் நான் மேலானவன்" என்னும் ஒரு தத்துவத்தை உங்கள் Avantageக்காக என் மேல் திணிக்க முயலும் போது உங்களை விமர்சிக்கும் உரிமை எனக்கு உண்டு.

    By Blogger Kans, at 11:16 AM, November 24, 2006  

  • //அப்புறம், மற்றொரு விஷயமாக -
    இப்போதைக்கு உருப்படியான வேறு வேலையை பார்ப்பது உத்தமம் என்பதை வேறு எப்படி சொல்வது என்பதற்கு வலைப்பூ அகராதியில் ஏதேனும் பிரத்யேக சொற்றொடர் இருந்தால், நெருப்புக்கு அணுப்பி வைக்கவும்.//

    :-))

    நெருப்பு சிவா,
    முற்றும் ஏற்கனவே போட்டுவிட்டேன்
    (என்னுடைய "அரைத்த மாவு" பதிவில்)

    By Blogger Kans, at 11:18 AM, November 24, 2006  

  • "உங்கள் கொள்கை உங்களோடு நிறுத்தினால் நான் உங்களை கண்டுகொள்ள மாட்டேன். ஆனால் உங்கள் கொள்கை என்னையும், நான் வாழும் சமுதாயத்தை பாதிக்கும்போது அதை விமர்சிக்கும் உரிமை எனக்கு உண்டு."
    அதேதான் உங்களுக்கும். நீங்கள் சாதி பார்க்காமல் இருங்கள் (உங்கள் திருமணத்தைத் தவிர), ஆனால் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறேன் என்று வந்தால் அப்படித்தான் எதிர்க்கேள்வி கேட்பார்கள். சாதியோ வேறென்னவோ அது அவரவர் சொந்த விஷயம். ஒருவன் தன் சாதியில் பற்றுடையவனாக இருப்பானேயானின் அவன் மற்ற சாதியை இழிவுபடுத்துகிறான் என்று எப்படி அனுமானம் செய்கிறீர்கள்?

    நீங்கள் பொதுவில் ஒரு கருத்து கூறினால் எதிர்க்கருத்தாளர்கள் வந்து கும்முவார்கள். கூடாது என்றால் கமெண்ட் பெட்டியை மூடுவதுதான் நலம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    By Blogger dondu(#11168674346665545885), at 12:14 PM, November 24, 2006  

  • //ஒருவன் தன் சாதியில் பற்றுடையவனாக இருப்பானேயானின்அவன் மற்ற சாதியை இழிவுபடுத்துகிறான் என்று எப்படி அனுமானம் செய்கிறீர்கள்?
    //

    நீங்கள் உங்கள் ஜாதியில் பற்று உடையவன் என்றால் என்ன்?
    ஒரு Interview panelல் உங்கள் ஜாதியயை சேர்ந்தவர்க்கு முன்னுரிமை தருவீர்களா? உங்களுடைய ஜாதிப்பற்று வெளியாள் ஒருவனுடைய Opportunity ஐ பாதிக்காது என்று உறுதியளிக்க முடியுமா?

    இத்தனைக் காலம் சமுதாயத்தை சீரழித்த ஜாதிகள் அழிய வேண்டும்.
    அதற்காக சிறிது சிறிதாக முயற்சிகள் நடக்கையில் ஜாதிகளை தூக்கிப் பிடிப்பதால் அது மேலும் நிலைத்து நிற்கிறது.



    //மற்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறேன் என்று வந்தால் அப்படித்தான் எதிர்க்கேள்வி கேட்பார்கள். //

    கேட்கின்ற கேள்வி சொல்லும் கருத்தை புரிந்து கொள்ளவா, இல்லை "மூடிய என் மனதை திறக்காதே" என்று கூறுகிறதா என்பது இங்கு பார்க்க வேண்டும்.

    //நீங்கள் பொதுவில் ஒரு கருத்து கூறினால் எதிர்க்கருத்தாளர்கள் வந்து கும்முவார்கள்.//
    கும்மியதாக நான் நினைக்கவில்லை.
    அவர்களின் மனதின் மேலும் இருளான பாகங்களை காட்டியதாகத்தான் நான் நினைக்கிறேன்.

    // கூடாது என்றால் கமெண்ட் பெட்டியை மூடுவதுதான் நலம்.//
    நான் யாரையும் Comment செய்ய வேண்டாமென்று சொன்னது போல் ஞாபகமில்லை.

    By Blogger Kans, at 12:49 PM, November 24, 2006  

  • "கும்மியதாக நான் நினைக்கவில்லை.
    அவர்களின் மனதின் மேலும் இருளான பாகங்களை காட்டியதாகத்தான் நான் நினைக்கிறேன்."
    எக்ஸாட்லி. உங்களைப் பற்றியும் அப்படித்தான் நான் நினைக்கிறேன். அதிலும் முக்கியமாக உங்கள் திருமண விஷயத்தில் ஜாக்கிரதையாகப் பேசியதிலிருந்து. அவரவர் கருத்து அவரவருக்கு.

    மற்றப்படி இண்டர்வியூ பேனலில் பாரபட்சமாக நடந்து கொள்வது என்பதெல்லாம அனுமானத்தின் அடிப்படையில் எழும் கேள்விகள். அந்த அபிமானம் ஒரே மொழி பேசுபவன் விஷயத்திலும் வரலாம். ஆகவே மொழிப்பற்றும் கூடாது என்பீர்களா? கட்சியில் இவ்வளவு பேர் இருந்தாலும் தன் பிள்ளையைத்தான் மந்திரியாக்குவார் தலைவர், அதில் பிரச்சினை இல்லையென்று கூட ஒரு கட்சியின் கொபசெ ஒரு முறை கூறினார். ஆகவே குடும்பப் பற்றும் இருக்கக் கூடாது. அதே போல திருமணம் என்பதில் அநீதி என்று மனதுக்குப்பட்டாலும் தாய் தந்தையர் கூறுவதை மீறாது கலப்புத் திருமணத்தைத் தவிர்க்க வேண்டியிருகும், ஆகவே குடும்பப் பற்றும் கூடாது. என்ன சார் நீங்கள்? எல்லோரும் பாவம் இல்லையா. அதற்கு அவரவர் தத்தம் வழியில் சென்றுகொள்ளட்டுமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    By Blogger dondu(#11168674346665545885), at 1:20 PM, November 24, 2006  

  • //"கும்மியதாக நான் நினைக்கவில்லை.
    அவர்களின் மனதின் மேலும் இருளான பாகங்களை காட்டியதாகத்தான் நான் நினைக்கிறேன்."எக்ஸாட்லி. உங்களைப் பற்றியும் அப்படித்தான் நான் நினைக்கிறேன். //

    Super- "ஜாதி எனக்கு ஆதாயம் ஆதலால் ஜாதி வேண்டும்" என்ற நிலைப்பாடும், "ஜாதி சமுதாயத்தை சீரழித்தது போதும், அவை கொஞ்சம் கொஞ்சமாகவேனும் அழியனும்" என்ற நிலைப்பாடும் ஒன்றா? :-)))))
    ஜாதி அழிய வேண்டுமென்ற என் நிலை
    உங்களுக்கு மேலும் இருளாக தோன்றுகிறதா?
    :-))

    //அதிலும் முக்கியமாக உங்கள் திருமண விஷயத்தில் ஜாக்கிரதையாகப் பேசியதிலிருந்து.//
    ஜாக்கிரதையாகப் பேசவில்லை எது நடப்பதற்கு அதிக Probability இருக்கிறதோ அதைப் பேசினேன்.

    //மற்றப்படி இண்டர்வியூ பேனலில் பாரபட்சமாக நடந்து கொள்வது என்பதெல்லாம அனுமானத்தின் அடிப்படையில் எழும் கேள்விகள். //
    :-)

    //அந்த அபிமானம் ஒரே மொழி பேசுபவன் விஷயத்திலும் வரலாம். ஆகவே மொழிப்பற்றும் கூடாது என்பீர்களா? கட்சியில் இவ்வளவு பேர் இருந்தாலும் தன் பிள்ளையைத்தான் மந்திரியாக்குவார் தலைவர், அதில் பிரச்சினை இல்லையென்று கூட ஒரு கட்சியின் கொபசெ ஒரு முறை கூறினார். ஆகவே குடும்பப் பற்றும் இருக்கக் கூடாது. அதே போல திருமணம் என்பதில் அநீதி என்று மனதுக்குப்பட்டாலும் தாய் தந்தையர் கூறுவதை மீறாது கலப்புத் திருமணத்தைத் தவிர்க்க வேண்டியிருகும், ஆகவே குடும்பப் பற்றும் கூடாது. என்ன சார் நீங்கள்? //
    நீங்கள் வட்டதை விரித்து சொல்கிறீர்கள். reverseல் குறுக்கி சொன்னால், நான் ஜாதிப் பற்று உடையவன்,என் ஜாதி உயர்வு, ஐயங்கார் பிரிவு மேலும் உசத்தி, அதுவும் --கலைப் பிரிவு தான் எல்லவற்றையும் விட உயர்ந்தது என்று போய்க்கொண்டே இருக்கலாம். அப்பொழுது எங்கே நிறுத்துவது?
    ஒரு மனிதனை மனிதனாக மதிக்கும் வட்டத்தில் நிறுத்தினால் போதும்.


    சரி,
    உங்களுடைய ஜாதிப்பற்று வெளியாள் ஒருவனுடைய Opportunity ஐ பாதிக்காது என்று உறுதியளிக்க முடியுமா? --> இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்களேன்...

    By Blogger Kans, at 1:40 PM, November 24, 2006  

  • நான் இருளடைந்த பாகங்கள் என்று கூறுவது நீங்கள் மட்டும் ஊருக்கு உபதேசம் செய்வீர்கள் ஆனால் உங்களை எதிர்த்து நீங்கள் எவ்வாறு என்று கேள்வி கேட்கக்கூடாது என்ற மனநிலையைத்தான். எல்லாம் அவரவர் பார்வைக்கோணம்.

    நான் இண்டர்வியூ எடுத்ததைப் பற்றிப் பதிவே போட்டுள்ளேன், முடிந்தால் போய்ப் பார்க்கவும். கண்டிப்பாக அது சாதி அபிமானத்தால் பாதிக்கப்ப்டவில்லை. அதை நீங்கள் நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.

    "நான் ஜாதிப் பற்று உடையவன்,என் ஜாதி உயர்வு, ஐயங்கார் பிரிவு மேலும் உசத்தி, அதுவும் --கலைப் பிரிவு தான் எல்லவற்றையும் விட உயர்ந்தது என்று போய்க்கொண்டே இருக்கலாம். அப்பொழுது எங்கே நிறுத்துவது?"
    அப்படியெல்லாம் எங்கே நான் சொன்னேன்? நீங்களாக அனுமானம் செய்து கொண்டால் நான் என்ன செய்ய முடியும்.

    முதலில் வேட்பாளரின் சாதி பார்த்து தொகுதிக்கு அவரை செலக்ட் செய்யும் கட்சியினரைத் திருத்துங்கள். இந்த ஏரியாவில் இன்னின்ன சாதிக்காரர்கள் இருக்கிறார்கள், ஆகவே இன்னின்ன கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் எனக் கூறும் அனாலிசஸ்களை நிறுத்தவும். முக்கியமாக அவ்வாறு கருத்துப் பரிமாற்றம் நடக்கும் உங்கள் கட்சித் தலைமையகங்களில் இக்கருத்தைக் கூறிப் பாருங்கள். ஆட்டோ உங்கள் வீட்டுக்குப் போகும் உங்களை சுமந்து கொண்டு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    By Blogger dondu(#11168674346665545885), at 1:52 PM, November 24, 2006  

  • திரு Dondu,

    //"நான் ஜாதிப் பற்று உடையவன்,என் ஜாதி உயர்வு, ஐயங்கார் பிரிவு மேலும் உசத்தி, அதுவும் --கலைப் பிரிவு தான் எல்லவற்றையும் விட உயர்ந்தது என்று போய்க்கொண்டே இருக்கலாம். அப்பொழுது எங்கே நிறுத்துவது?"
    அப்படியெல்லாம் எங்கே நான் சொன்னேன்? நீங்களாக அனுமானம் செய்து கொண்டால் நான் என்ன செய்ய முடியும்.//
    நீங்கள் சொன்னதாக நான் சொல்லவில்லை. வட்டத்தைக் குறுக்க ஆரம்பித்தால் முடிவில்லை என்பதற்கு உதாரணம் அது.

    //அந்த அபிமானம் ஒரே மொழி பேசுபவன் விஷயத்திலும் வரலாம். ஆகவே மொழிப்பற்றும் கூடாது என்பீர்களா? கட்சியில் இவ்வளவு பேர் இருந்தாலும் தன் பிள்ளையைத்தான் மந்திரியாக்குவார் தலைவர், அதில் பிரச்சினை இல்லையென்று கூட ஒரு கட்சியின் கொபசெ ஒரு முறை கூறினார். ஆகவே குடும்பப் பற்றும் இருக்கக் கூடாது. அதே போல திருமணம் என்பதில் அநீதி என்று மனதுக்குப்பட்டாலும் தாய் தந்தையர் கூறுவதை மீறாது கலப்புத் திருமணத்தைத் தவிர்க்க வேண்டியிருகும், ஆகவே குடும்பப் பற்றும் கூடாது. என்ன சார் நீங்கள்? //
    இது நான் கூறவில்லை ஆனால் என்னுடைய வாதத்தை extend செய்து கூறினீர்கள் அல்லவா, அது போல் உங்கள் வாதத்தை extend செய்து வந்ததுதான் "ஐயங்கார், --கலை" என்னும் Statement.

    //முதலில் வேட்பாளரின் சாதி பார்த்து தொகுதிக்கு அவரை செலக்ட் செய்யும் கட்சியினரைத் திருத்துங்கள். //
    இது எல்லாமே Demand and Supply தான். மக்கள் ஜாதியை ஒரு பொருட்டாக மதிக்கவில்லையென்றால் அடுத்த தேர்தலிலேயே அரசியல் கட்சிகள் திருந்திவிடும். ஆனால், உங்களைப் போல் ஜாதிப் பற்றோடு இருந்தால், ("ஒருவன் தன் சாதியில் பற்றுடையவனாக இருப்பானேயானின்" -- உங்கள் வக்கியம்தான் இது) அரசியல் கட்சிகள் 10,000 வருடமானாலும் திருந்தமாட்டார்கள்.
    ஒருத்தன் ஜாதிப்பற்றோடு இருந்தால் தவறில்லை என்று சொன்னீர்கள் அல்லவா, அந்தப் பற்றால் அரசியல் எப்படி கீழ் சென்றுள்ளது பாருங்கள்.

    நீங்கள் இன்னும் என்னுடய சில கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை.

    By Blogger Kans, at 2:27 PM, November 24, 2006  

Post a Comment

<< Home