Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Friday, November 24, 2006

அரைத்த மாவு !!!

நண்பர்களே,
இப்பதிவு எனது முந்தைய பதிவினையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் ஆராயும் பதிவு. ( விட்டுத் தொலையேன்டா என்று சொல்லுறீங்களா? முடியாது :-) ) போன பதிவில் நான் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லவில்லையோ என்று நான் அஞ்சுகிறேன்.
அதனால் இப்பதிவை, போன பதிவின் விரிவாக்கமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஜாதி விஷயத்தில் மக்களை மூன்று வகையாக பிரிக்கலாம்:
1) உயர்ந்தவர்கள் - Idealists: ஜாதியை ஒழிக்க நினைப்பவர்கள். அதற்காக தங்களால் முடிந்த எல்லாம் செய்பவர்கள்
(கலப்புத் திருமணம் உட்பட).

2) குறுகிய மனம் கொண்டவர்கள்: ஜாதியால் தங்களுக்கு ஆதாயமிருப்பதால் அந்த கட்டமைப்பு உடைவதை விரும்பாதவர்கள்.

முதலிரண்டு வகையினரும் மக்கள் தொகையில் மிகக் குறைவு.

3) சாமானியர்கள்: உங்களையும் என்னையும் போல, தினம் வேலைக்குப் போய், உழைத்து வருபவர்கள்.
தங்கள் ஜாதியை தூக்கிப் பிடிக்க மாட்டார்கள். இவர்கள் நட்பிலும், வீட்டுக்குள் ஒருவரை அனுமதிப்பதிலும் ஜாதி பார்க்காதவர்கள். எல்லோரையும் சமமாக பார்ப்பவர்கள். ஆனால் கலப்புத் திருமணம் செய்திருக்க மாட்டார்கள்.
இவர்களே மக்கள் தொகையின் பெரும்பான்மையானவர்கள்.


ஜாதி ஒழிப்பு ஒரே நாளில் நடந்து விடாது.
A journey of 1000 miles will start with the first step என்பார்கள்.
இந்த மூன்றாம் வகை சாமானியர்கள், எல்லோரையும் சமமாக நடத்துவதன் மூலம் ஜாதி ஒழிப்பின் முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்கள். Luckylook சொன்னது போல் தங்களுக்கு ஜாதிக்குள் திருமணம் நடந்தாலும், தங்கள் பிள்ளைகள் விரும்பினால் கலப்புத் திருமணம் செய்து வைக்கும் மனப்பக்குவம் உடையவர்கள். சமுதாய மாற்றத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டதால் குறுகிய மனமுடையவர்களை விட பல மடங்கு மேலானவர்கள்.

குறுகிய மனமுடையவர்களிடம், சாமானியர்கள் யாரேனும் அவர்களுடைய narrow-mindednessஐ சுட்டினால் "நீ மட்டும் யோக்கியமா?" என்னும் தொனியில் கலப்புத்திருமண பிரச்சனையை கிளப்புவார்கள். இதன் மூலம் தங்களுடைய குறுகிய எண்ண ஓட்டத்தை நியாயப்படுத்திக்கொள்கிறார்கள். இதுவே என் போன பதிவின் கருத்து.

சில பின்னூட்டங்கள் தொடர்பாக:::

பின்னூட்டம் 1: மாயவரத்தான், "கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போகப்போறானாக்கும்!" என்று சொல்லியுள்ளார். ஒரு தவறான பழமொழி கொண்டு, சூழ்நிலையை தவறாக புரிந்துகொண்டுள்ளார்.
A journey of 1000 miles will start with the first step - இந்த பழமொழிகொண்டு புரிந்துகொள்ள முயற்சியுங்கள் மாயவரத்தான்.

பின்னூட்டம் 2: Hariharan எழுதியது "தான் பிறந்த உயர் சாதியோடு அதிகம் இணைத்துப் பெருமையடித்து அடுத்தசாதியை இழிவுபடுத்தி, அடக்கி ஆதிக்கம் செலுத்துவதை கைவிட்டு, தனிநபராக உயர் சாதியில் பிறந்தவர்கள் அக்கறையோடும் பொறுப்புணர்வோடும் இருக்கவேண்டும். உயர்சாதி என்பது ஓபிசி/எம்பிசி இவர்களையும் உள்ளடக்கியது." -- நல்ல கருத்து.

பின்னூட்டம் 3: Krishna அவர்கள் "ஏன் அனைவரும் சேர்ந்து வாழும் வழிமுறைகளை ஆராயக் கூடாது? உங்கள் வாதம் முழுவதுமே, குழு உணர்ச்சி, தன் குழுக்காகப் போராடுதல் (யாரை எதிர்த்து என்ற வினா இயல்பாகவே எழுகிறது) போன்றவற்றை பின்பற்றியிருப்பது ஒரு ஆரோக்கியமான போக்காகத் தெரியவில்லை. நாம் அனைவரும் நமக்குள்ளே போராடிக் கொண்டே இருக்க வேண்டும்? பிறகு எப்படி முன்னேறுவது? ஆங்கிலேயரோ, மொகலாயரோ வந்து மீண்டும் நம்மை அடிமைப் படுத்தும் வரையா? ஜாதி நம்மைப் பிரிக்கிறது என்பது இன்றைய கால கட்டத்தில் அபத்தமாக இருக்க வேண்டும் - அப்படி இல்லாதது வருத்தமளிக்கிறது. " என்று ஒரு நல்ல கருத்து கூறினார்.

ஆனால் "அனைவரும் அர்ச்சகராகலாம்" என்னும் சட்டத்தை பற்றி கேட்டால் "ஜாதி சார்ந்த சில தொழில்கள் என்றுமே இருந்திருக்கின்றன. இதனால் நாட்டிற்கு எந்த விதத்தில் கேடு - இதைக் கொண்டு வந்ததால் என்ன பயன் - இப்போது இது தேவையா? " என்று நழுவிவிட்டார்.

சார், "ஜாதி நம்மைப் பிரிக்கிறது என்பது இன்றைய கால கட்டத்தில் அபத்தமாக இருக்க வேண்டும் " இப்படி கூறிய Krishna "ஜாதிகள் இல்லாத சமுதாயத்தில் அனைவரும் அர்ச்சகராக என்ன தடை" என்று சொல்வார் என நான் எதிர்பார்த்தேன்.

பின்னூட்டம் 4: விடாது கருப்பு அவர்கள் கடும் சொற்கள் பயன்படுத்தியிருந்தார். அதனை Edit செய்திருந்தேன். கருப்பு அவர்களே, Edit செய்ய நேரமில்லையென்றால், நேரம் வரும் வரை பின்னூட்டம் Moderate செய்யாமல் தூங்கிக்கொண்டிருக்கும். அதனால் இனி வரும் பின்னூட்டங்களில் கடும் சொற்கள் பயன்படுத்த வேண்டாம் (என் பதிவிலாவது).

பின்னூட்டம் 5: Dondu அவர்கள் நான் திருமணமானவன் என நினைத்துக்கொண்டார். தவறு. நான் இன்னும் Bachelor தான்.

இத்தோடு இந்த விவாதத்திற்கு வணக்கம் போட எண்ணுகிறேன். காரணம், போன பதிவிலேயே இதனை போதிய அளவு கடித்து, குதறி, அலசி, ஆராய்ந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது.

3 Comments:

  • //"ஜாதி நம்மைப் பிரிக்கிறது என்பது இன்றைய கால கட்டத்தில் அபத்தமாக இருக்க வேண்டும் " இப்படி கூறிய Krishna "ஜாதிகள் இல்லாத சமுதாயத்தில் அனைவரும் அர்ச்சகராக என்ன தடை" //

    நான் நழுவவில்லை. என் கருத்தினை தெளிவாகவே பதிந்திருக்கிறேன். எங்கள் ஊரில் இருக்கும் கடைகளில் பாய் (இஸ்லாம் மத பெரியவர்) ஒருவர் சாம்பிராணி போட வருவார் - மயிலிறகு சகிதம். ஜாதி, மத வேறுபாடின்று அனைத்து கடையினரும் (எங்கள் கடை உட்பட) அவரை கடைக்குள் அனுமதித்து எங்களால் ஆன பொருளுதவி செய்வோம். அங்கு அவர் குல்லா எனக்கு உறுத்தியதில்லை. அதே போல் சிவன் கோவிலில் பூணூலும் என்னை பாதித்ததில்லை - மேல மாரியம்மன் கோவிலில் ஆடு பலியிட்டு, இரத்தம் குடிக்கும் பூசாரியும் எனக்கு உறுத்தியதில்லை. நான் கோவிலுக்குச் செல்வது இறைவனின் உருவ தரிசனத்திற்காக. எனக்கு இறைவனுனடனான ஒரே ஊடகம் என் மனது மட்டுமே. அதனால் 'other outer things have no impact on me'. பொதுப் படையான பார்வையில், பாய் மட்டுமே சாம்பிராணி போடவேண்டுமா? ஏன் ஒரு கிருத்துவ பெரியவர் போட்டால் புகை வராதா? என்று கேட்கும் கேள்வி போல தான் அர்ச்சகர் விடயமும். வேறு ஒருவர் அவ்வாறு முயன்றால், அந்தப் பெரியரே அதை எதிர்க்கலாம். உடனே அதை அவர் ஜாதி புத்தி என்பீர்களா? அவருடைய வயிற்றுப் பிழைப்பு அது. அதற்காக அவர் போராடுவார். ஏன்? அவரே கூட சில வரலாற்றுத் தகவல்களை தனக்கு உதவியாகக் கோடி காட்டலாம் (எனக்குத் தெரியவில்லை).

    என்னைப் பொருத்தவரை, ஜாதி, மத சார்பு தொழில்கள் இன்றும் இருக்கின்றன. அவை அவ்வாறு இருப்பதால், பெருவாரியான மக்களுக்கு பாதிப்பு இல்லாத வரையில் அவற்றை மாற்ற முனைவது (அதுவும் அம்மாதிரி தொழில்களை நம்ப மறுக்கும் ஒரு தலைவர்) சர்வாதிகாரமாகும். சரி, பரம்பரையாக ஏழ்மை நிலையில் இருக்கும் பலப்பல அர்ச்சகர்களின் குடும்பமும், குழந்தைகளுக்கும் வாழ வேறு ஏதாவது வழிமுறைகள், சொல்லப்பட்டனவா? கிடையாது. அவ்வளவு அலட்சியம் ஏன்? அவர்கள் ஜாதியினாலா? அவர்கள் மனிதர்கள் இல்லையா? இல்லை இந்த சமுதாயத்தில் அவர்களுக்கு இடம் இல்லையா? இதில் ஜாதியை வளர்ப்பவர் யார்?

    இதைப் போல பல 'ஏன்'கள் விடைகள் இல்லாமல் தொக்கி நிற்கும்.

    அது அர்ச்சகராயிருந்தாலும் சரி, இஸ்லாமியப் பெரியவராயிருந்தாலும் சரி, விவசாயி, செசவாளர் எவராயிருந்தாலும் சரி - ஒருவரின் வயிற்றுப் பிழைப்பை பறித்தால் அது எனக்கு ஒப்புடைமையல்ல.

    நிற்க. என் நிலையை விளக்க மட்டுமே பின்னூட்டமிட எண்ணினேன் - சற்று பெரிய பதிலாய் அமைந்துவிட்டது - மன்னிக்கவும்.

    By Blogger Krishna (#24094743), at 12:26 PM, November 24, 2006  

  • திரு. Krishna,

    //நான் கோவிலுக்குச் செல்வது இறைவனின் உருவ தரிசனத்திற்காக. எனக்கு இறைவனுனடனான ஒரே ஊடகம் என் மனது மட்டுமே. அதனால் 'other outer things have no impact on me'.//

    உயர்ந்த approach.
    எனக்குக் கூட இதே கண்ணோட்டம் தான்.

    //பொதுப் படையான பார்வையில், பாய் மட்டுமே சாம்பிராணி போடவேண்டுமா? ஏன் ஒரு கிருத்துவ பெரியவர் போட்டால் புகை வராதா? //
    நம் விவாதம் intra-religion, inter-religion அல்ல.
    கேட்கும் கேள்வியை சற்று மாற்றி நான் கேட்கிறேன்:
    இந்து மதத்தில் மட்டும் ஏன் ஒரு சமுதாயத்தினர் மட்டுமே அர்ச்சகராக இருக்க வேண்டுமென உள்ளது? Christianity & Islam ல் அப்படி உள்ளதா?

    //பரம்பரையாக ஏழ்மை நிலையில் இருக்கும் பலப்பல அர்ச்சகர்களின் குடும்பமும், குழந்தைகளுக்கும் வாழ வேறு ஏதாவது வழிமுறைகள், சொல்லப்பட்டனவா? கிடையாது. அவ்வளவு அலட்சியம் ஏன்? அவர்கள் ஜாதியினாலா? அவர்கள் மனிதர்கள் இல்லையா? இல்லை இந்த சமுதாயத்தில் அவர்களுக்கு இடம் இல்லையா? இதில் ஜாதியை வளர்ப்பவர் யார்? //
    அவர்களின் அடுத்த தலைமுறையை வேறு தொழிலுக்கு போகவேண்டாமென்று யாரும் தடுக்கவில்லையே. அப்படி போய்க்கொண்டுதானே இருக்கிறார்கள். இது அர்ச்சகர்களென்று இல்லை, எல்லா ஜாதிக்கும் பொருந்துமே.

    //அது அர்ச்சகராயிருந்தாலும் சரி, இஸ்லாமியப் பெரியவராயிருந்தாலும் சரி, விவசாயி, செசவாளர் எவராயிருந்தாலும் சரி - ஒருவரின் வயிற்றுப் பிழைப்பை பறித்தால் அது எனக்கு ஒப்புடைமையல்ல.//
    வயிற்றுப் பிழைப்பை யாரும் தட்டிப் பறிக்கவில்லையே. இப்பொழுது இருக்கும் அர்ச்சகர்களை வெளியேற்ற சொல்லுகிறதா "அனைவரும் அர்ச்சகராகலாம்" சட்டம்?

    //நிற்க. என் நிலையை விளக்க மட்டுமே பின்னூட்டமிட எண்ணினேன் - சற்று பெரிய பதிலாய் அமைந்துவிட்டது - மன்னிக்கவும். //

    ஆரோக்கியமான discussion ஆக எடுத்துக்கொள்வோம். பின்னூட்டங்களின் நீளத்தை கண்டுகொள்ளத்தேவையில்லை.

    By Blogger Kans, at 1:12 PM, November 24, 2006  

  • //Christianity & Islam ல் அப்படி உள்ளதா? //
    உள்ளது என்றே எண்ணுகிறேன். ஒரு உவமானத்திற்காக (தினகரன் & co)- அப்படி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதைப் பற்றிய கவலை இல்லை. நான் சொல்வதெல்லாம் ஒரு பாரம்பரியமான ஒரு தொழிலைப்பற்றியதேயன்றி வேறொன்றும் இல்லை.

    //அவர்களின் அடுத்த தலைமுறையை வேறு தொழிலுக்கு போகவேண்டாமென்று யாரும் தடுக்கவில்லையே.//
    தடுக்கவில்லை. ஆனால் போக முடியாது - இன்றைய இடஒதுக்கீடு முறையில் அவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள். மேலும் பெரும்பாலமானவர்கள் வறியவர்கள். மற்ற இடஒதுக்கீடு பெரும் ஜாதியினருக்கு சொல்லப்படும் பெரும்பான்மையான வாதங்கள் இவர்களுக்கும் பொருந்தும் - பொருளாதார, வாய்ப்பு, வசதிகளைப் பொறுத்த வரை. அரசு அவர்கள் வாழ வழிமுறைகளை உத்தேசித்த இதில் இறங்கியிருக்கலாம் என எண்ணுகிறேன்.

    //இப்பொழுது இருக்கும் அர்ச்சகர்களை வெளியேற்ற சொல்லுகிறதா "அனைவரும் அர்ச்சகராகலாம்" சட்டம்?//

    நேரடியாக இல்லை. மற்ற அனைத்துத் துறைகளிலும் இருக்கும் அதே பிரச்சினைதான் இங்கும். ஒரே இடத்தில் இருவருக்கு மேல் இருப்பது சாத்தியமில்லை - பொருளாதார அடிப்படையிலுருந்து மற்றும் இன்ன பிற 'operations' முறையிலிருந்தும். ஒரு க்ளார்க் போஸ்டிற்கு ஒருவருக்கு மேல் போட்டால், இருவருக்கும் நட்டம், மற்றும் கம்பெனிக்கும் நட்டம். வலியவன் எளியவனை ஏறிமிதிப்பான். இப்போது உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

    பூணூல் போட்டவராயிருப்பினும், குல்லா, சிலுவை போட்டவராயிருப்பினும் என் கருத்து நான் முதலில் கூறியதே - சமுதாயத்திற்கு உண்மையிலேயே நன்மை செய்யும் களங்களில் அரசு கவனம் செலுத்தவேண்டும். இம்மாதிரி, ஜாதி விஷயங்களிலல்ல.

    இதனுடன் முடித்துக் கொள்கிறேன். இதற்கு மேல் இதை விவாதித்தால் இணையத்தில் கிடைக்கும் பட்டம் என்ன என்பதை உணர்ந்தே இருப்பதாலும், நம் விவாதம் அந்த வட்டத்திற்கு மிக அருகில் செல்வதாலும், நன்றி.

    By Blogger Krishna (#24094743), at 2:00 PM, November 24, 2006  

Post a Comment

<< Home