Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Friday, March 30, 2007

சடாயு - ம,ம - லாஸ்ட் பார்ட்டு

பூங்காவில் அவருடைய பதிவுகளை தேர்ந்தெடுக்க சம்மதம் தெரிவிக்கப்போவதில்லை என்னும் "வீரமான" முடிவை சடாயு எடுக்க நினைக்கிறாராம். அதற்கு காவி கூட்டணிகள் "என்ன ரோஷம், என்ன ரோஷம்" என்று ஆரவாரம் செய்கிறது. சிரிப்புதான் வருகிறது. தமிழ்மணத்தின் முகப்பில் வரும் பப்ளிசிட்டி வேண்டும், பின்னூட்ட திரட்டலில் தமிழ்மணம் மூலம் பப்ளிசிட்டி வேண்டும், ஏதோ போனால் போகிறதென்று பூங்காவில் பதிவகளை போட அனுமதிக்க மாட்டாராம்.
நஷ்டம் சிறிதுமின்றி ரோஷப்பட (அல்லது அது போல் நடிக்க) இவரிடம் கற்றுக்கொள்ளலாம்.


நான் இந்த பிரச்சனையைப் பற்றி பதிவிட காரணம்:
தமிழ்மணத்தில் உட்கார்ந்து கொண்டு அதனை மிக அருவருப்பாக திட்டுவது எனக்கு என்னவோ வீட்டுக்குள் எச்சில் துப்புவது போன்று அசிங்கமான செயலாக தோன்றியதால் எழுந்த எதிர்வினை.

தமிழ்மணம் ஏதேனும் தவறு செய்திருந்து இவர்கள் கோபப்பட்டால் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் இவர்களின் அரசியல் கொள்கைக்கு மாறான எதிர்கருத்து சொன்னவுடனே "தேசத்துரோகி" என்று தமிழ்மணத்தை முத்திரை குத்த தயாராகும் இவர்களின் குதர்க்க சிந்தனை கேவலமானது.

என் கருத்தை சொல்லிவிட்டேன்.
விலகுவதும் விலகாததும் அவர்(களி)ன் வெட்கம்/மானம் தொடர்புடைய செயல்.


முற்றும்

Labels: ,

Thursday, March 29, 2007

சடாயுவை மன்னிப்போம் மறப்போம் !

அறிவு பிறழ்ந்துவிட்டால் யோசிக்க முடியாது, உளறத்தான் முடியும். அதனால் சடாயுவை மன்னிக்கலாமென்பது என் கருத்து.

பிராமனீயத்தை தூக்கிப் பிடிக்க BJP யில் தான் இருக்க வேண்டுமென்று இல்லை. குலக்கல்வி திட்டம் கொண்டுவந்த ராஜாஜியும், "தேவதாசிகள்" என்னும் கொடிய வழக்கம் ஒழிந்தால் இந்தியப்பாரம்பரியம் நலியும் என்று சொன்ன சத்தியமூர்த்தியும் (பார்ப்பனர்கள்) காங்கிரஸில் இருந்தார்கள். இதை உணராமல் உளறும் சடாயுவை மன்னிப்போம்.


//இந்திய தேசியத்திற்கு எதிரான கருத்துக்களைத் தானாகவும், பொறுக்கி எடுத்தும் மீண்டும் மீண்டும் வெளீயிட்டு வருவதைக் காண்கிறேன். குறிப்பாக கடந்த இதழ் ஆசிரியர் குழு எழுதியிருப்பது அக்மார்க் இந்திய தேசவிரோதக் கருத்துக்கள்.//

(Italics ல் உள்ளது சடாயுவின் வாதம்)

பிராமனீயத்தை எதிர்த்தால் தேச துரோகமாமே???
ஹிந்துத்துவம் என்பது ஒரு மத-அரசியல்-கோட்பாடு.
கம்யூனிசம், Capitalism, Socialism என்பது போல் அதுவும் ஒரு அரசியல்-கோட்பாடு. அது மட்டுமே இந்திய நாட்டை/மக்களை Represent செய்ய முடியாது. ஆதலால் ஹிந்துத்துவத்தை எதிர்ப்பது இந்தியாவை எதிர்ப்பதாகாது. ஆகவே ஆசிரியர் குழு ஹிந்துத்துவத்தை பற்றி கூறினால் அது இந்தியாவை பற்றி கூறுவதாகாது. இதை உணராமல் உளறும் சடாயுவை மன்னிப்போம்.


//இன்று இந்தியாவில் தான் தமிழர்கள் சகல உரிமைகளுடனும், வசதிகளுடனும், வாய்ப்புகளுடனும் திகழ்கிறார்கள், உலகில் வேறெங்கும் அல்ல. //

எப்படி இப்படி கூசாமல் பொய் சொல்லமுடிகிறதென்று தெரியவில்லை.
1) வீரப்பன் வேட்டையென்று தமிழக பகுதிகளில் கன்னட வெறியர்கள் செய்த கொலை/கற்பழிப்பு போன்றவை தெரியவில்லையா?
2) தமிழக (இந்திய) மீனவர்கள் சிங்களவர்களால் 10,20 என கொல்லப்படும்போது வாய் மூடியிருக்கும் இந்திய அரசை என்ன சொல்வீர்கள்?
3) மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு தமிழச்சிகள் கடத்தப்படுவதும்,
மும்பை மிட்டய் கடைகளில் தமிழ் பாலகர்கள் அடிமைகளாக தினம் 20 மணி நேரம் வேலையில் வாடுவதும் தெரியவில்லையா?

இது போல் ஆயிரம் சொல்லலாம், ஆனால் கண்ணை மூடி வெறும் ஹிந்துத்துவம் மட்டும் பார்க்கும் சடாயுவுக்கு இதெல்லாம் தெரியாது .

//இதற்காக பூங்கா ஆசிரியர் குழுவை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்மணத்தில் தங்கள் பதிவுகளை இட்டு வரும் இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ள பதிவர்கள் அனைவரும் பூங்கா மற்றும் அதன் ஆசிரியர் குழு என்ற பெயரில் இப்படி எழுதிய புல்லுருவிகளை //

திரும்பவும் இந்தியாவின் பெயரில் ஒட்டிக்கொண்டு பிராமணீயத்தை தாங்கிப்பிடிக்கும் வாதமிது.



//தமிழ்மணம் வலைத்திரட்டி தொகுத்து அளிப்பதாகக் கூறும் பூங்கா என்ற வலையிதழ் (முள்காடு என்ற பெயர் தான் இதற்குப் பொருத்தமாக இருக்கும்) //

சடாயு, உங்களை யாரும் தமிழ்மணத்தில் இழுத்துப்பிடித்து வைத்திருக்கவில்லை. ஓசி விளம்பரத்திற்கு, நீதான் உள்ளே இருக்கிறீர். முள்ளாய் உணர்ந்தால் தமிழ்மண பட்டையை உமது Templateல் இருந்து நீக்கும். அது எளிதும் கூட. (அதெல்லாம் மானமுள்ளவர்கள் செய்வது).


ஜடாயுவின் பதிவின் பின்னூட்டங்களில் இந்திய-தேசியத்தையும் பிராமணீயத்தையும் குழப்பி "தமிழ்மணம்" ஒரு அருவருப்பான வலைதிரட்டி என்று முடிவுகட்டியுள்ளார்கள். பார்ப்போம், இந்த வெட்கம், மானமுடைய மானஸ்த்தர்கள் எல்லோரும் எப்பொழுது தமிழ்மணத்திலிருந்து வெளியேறுவார்களென்று...