Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Sunday, February 11, 2007

சில சந்தேகங்கள்

(இந்த வேதாளத்தின் சந்தேகங்களை தீர்க்கவில்லையென்றால், உங்கள் கணிணியின் Mouse, பக்கத்து வீட்டு Mouseஉடன் ஓடிப் போய் விடும் ஜாக்கிரதை !)

- ஒரு நாத்திகரும் (Atheist) ஒரு ஆத்திகரும் சேர்ந்து ஒரு திட்டம் செயற்படுத்தினால், நாத்திகரை கொள்கை விட்டு விலகுவதாகக் குறை கூறும் சிலர், ஏன் ஆத்திகரை கொள்கை விட்டு விலகுவதாக கேள்வி கேட்பதில்லை? ஆத்திகரும்தானே தன் கருத்துக்கு எதிர்கருத்தோடு உள்ள ஒருவரோடு சேர்கிறார்? (இரண்டு பேரும் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்தால் போதும் என்பது என் நிலை)

- அந்த திட்டத்திற்கு ஒத்துழைக்காத ஜெயலலிதா போன்ற ஆத்திக தலைவர்களை ஒரு விமர்சனம்கூட செய்யாதவர்களுக்கு கருணாநிதியை விமர்சனம் செய்ய தகுதி உண்டா?


RSS அரை டிராயர்களுக்கு சில கேள்விகள் :

- இந்தியாவில் சமணம் (Jainism) , புத்தம் (Buddhism), சீக்கிய மதம்(Sikhism), இந்துத்வம் (Hiduism) போன்று 4 மதங்கள் தோன்றியிருந்தாலும் இந்துத்வம் மட்டுமே இந்தியாவின் மதமென்று ஏன் உரிமை கொண்டாடுகிறீர்கள்?

- கிறித்துவர்கள் "யேசு மட்டுமே கடவுள்" என்று சொன்னால் குதிக்கும் நீங்கள், ஏன் "கிருஷ்ணர்/விஷ்னு மட்டுமே கடவுள்" என்று மற்ற இந்து மத கடவுள்களையே கும்பிட மறுக்கும் வைஷ்னவர்களையோ (ஐய்யங்கார்களையோ) இல்லை "சிவன் மட்டுமே கடவுள்" என்று நிலைப்பாடு உடைய சைவர்களையோ கேள்வி கேட்பதில்லை?

- ஒரு RSS நண்பர் ஒரு காமெடியான தத்துவம் கூறினார்: "இந்து மதத்தின் படி நாத்திகரும் இந்துக்களே" என்பது. பல கேள்விகள் இது தொடர்பாக:
--- பிறப்பால் முஸ்லிமாகவோ, கிறிஸ்டியனாக உள்ள ஒருவர் நாத்திகரானால் அவரும் ஹிந்துவா?
--- நாத்திகரும் இந்து என்றால், ஏனைய்யா பெரியாரை எதிர்க்கிறீர்கள்? அவரைக் கொல்ல "சத்ரு சம்ஹார" யாகம் வேறு.

காமெடி காமெடி, ஐயோ ஐயோ!!

Labels: , , ,

3 Comments:

  • தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை, சிந்திக்க தூண்டும் கருத்துக்கள், செவிட்டில் அறையும் வினாக்கள்?, வாழ்த்துக்கள், தொடரட்டும் தங்களின் மேலான பணி, நாகூர் இஸ்மாயில்

    By Blogger nagoreismail, at 3:16 AM, February 11, 2007  

  • வருகைக்கு நன்றி நாகூர் இஸ்மாயில்.

    //செவிட்டில் அறையும் வினாக்கள்//

    பதில் தான் யாரிடமிருந்தும் இன்னும் வரவில்லை...

    By Blogger Kans, at 6:45 AM, February 11, 2007  

  • யாராவது பதில் சொல்லுங்கப்பா :-)

    By Blogger Kans, at 10:10 AM, February 13, 2007  

Post a Comment

<< Home