Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Saturday, January 06, 2007

இதெல்லாம் வேணுமைய்யா...

வேறென்னையா வேணும்னு ஒருத்தரு WishList கேட்டிருக்காரு.
என்னோட List :
1) இந்தியாவில் கிட்டத்தட்ட 60 வருடம் கழித்து ஜனாதிபதியாகவோ, நீதிபதியாகவோ வந்த ஒரு சிலரைக் காட்டி ஒடுக்கப்பட்ட மொத்த சமூகமும் தற்பொழுது பாற்கடலில் மிதப்பதாக படம் போடக்கூடாது.

2) வெளிநாட்டிற்குப் போய் மதவெறியைத் தூண்டும் RSSக்கு திருட்டுத்தனமாக பணம் அனுப்புறதை நிறுத்தனும் (காமெடி என்னவென்றால், RSSக்கு திரட்டப்படும் நிதியின் பெயர் "India Development and Relief Fund " . தைரியமிருந்தால் "Hindu Development and Relief Fund" என்று திரட்ட வேண்டியதுதானே? )

3) கோயில் எனப்படுவது மன அமைதி தரும் இடமாக அமைய வேண்டும். அங்கு ஏற்றத்தாழ்வு இருந்தால் நிச்சயம் கீழ் ஜாதி என முத்திரை குத்தப்பட்டவர்களால் பெருமையுடன் கோயிலுக்கு செல்ல முடியாது.

இப்போதைக்கு இவ்வளோதான்.
படிக்கிற உங்களுக்கு ஏதாவது தோன்றினா, பின்னூட்டமா போடுங்க...

4 Comments:

  • இந்தியாவில் அறுபதாண்டுகளில் இதுவரை ஜனாதிபதிகளாக வந்தவர்களில் இந்தியர் மொத்தமே 10 பேர் தானுங்களே.

    இதுவரையில் இந்திய ஜனாதிபதிகள்

    முதல் மவுண்ட் பேட்டன்
    மூன்றாவது ஜாகீர் உசேன்
    ஐந்தாவது பக்ருதீன் அகமது
    ஏழாவது கியானி ஜெயில் சிங்
    பதினொன்றாவது அப்துல் கலாம்

    என்று ஜனாதிபதி இந்தியர்களான் பத்தில் நான்கு பேர் இந்துக்கள் அல்லாதவர்கள்.


    ஆறாவது ஜனாதிபதி சஞ்சீவரெட்டி பிற்படுத்தப்பட்டவர்.

    பத்தாவது ஜனாதிபதி கேஆர் நாராயணன் தாழ்த்தப்பட்டவர்.

    ராதா கிருஷ்ணன், வெங்கட் ராமன், சஞ்சீவரெட்டி, கேஆர் நாராயணன், அப்துல் கலாம் என்று 50% தென்னிந்தியர்கள் ஜனாதிபதியாக இருந்திருக்கின்றார்கள். பார்ப்பன, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, முஸ்லீம் என குறை சொல்ல என்ன இருக்கிறது?

    ஆர் எஸ் எஸுக்கு அனுப்பிய பணத்தில் 83% பழங்குடிகளுக்கான திட்டங்களுக்குச் செலவழித்திருக்கின்றார்கள். 10 சதவீதம் இந்து, ஜைன, இதர செக்கூலர் மதத் திட்டங்களுக்குச் செலவழித்திருக்கின்றார்கள்.

    சுகாதாரம், மீட்பு,நிவாரணப் பணிக்கு 25% செலவழித்திருக்கின்றார்கள்.
    இந்தியா என்பதும் ஹிந்து என்பதும் ஒன்றே எப்படி அனுப்பினால் என்ன?

    கூட்டம் வரும் கோவிலுக்கு கூட்டத்தினைக் கட்டுப்படுத்த டிக்கட் சமாச்சாரங்கள் என்பவை மன அமைதி குலைக்கிறதாக ஆவதில்லை.

    எந்தக் கோவிலிலும் கும்பிடுபவர் பார்த்தாலே அன்றி ஜாதி யார் பார்க்கின்றார்கள். என்னமோ ஜாதிபார்த்து டிக்கட் போடுவது மாதிரி சொல்கின்றீர்கள்.

    என்னமோ போங்க. குறை மட்டுமே காண்பதிலேயே சுகம் காண்பது பெரிய குறை என்பதை அறியாமலேயே இப்படியும் பதிவுகள் போடுங்கள்.

    அறுபதாண்டுகளில் ஆயிரமாண்டுகள் அடிமைத்தனம் தாண்டி இவ்வளவுக்கு மேலேறி வந்திருக்கின்றோம் என சந்தோஷமில்லை என்றாலும் குறைமட்டுமே ஏன் கூறுவானேன். உண்மைகள் எப்படி இருக்கின்றன என்பதை ஒப்பிடுங்கள்.

    http://www.answers.com/topic/president-of-india

    By Blogger Hariharan # 03985177737685368452, at 8:29 AM, January 06, 2007  

  • ஐயா, ஜனாதிபதி என்பது ஒரு அலங்காரப் பதவி.
    உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் Statistics யும், LIC போன்ற நிறுவனங்களின் Statistics யும் வெளியிட்டீர்களானால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் :-) .

    இந்தியாவிற்கு என்று சொல்லி நிதி திரட்டிவிட்டு, ஏன் ஒரு குறிப்பிட்ட மதவாத அரசியல் கட்சிக்கு மட்டும் அதை தர வேண்டும்? காங்கிரஸ்ஸுக்கும் கொஞ்சம் தர வேண்டியதுதானே?


    //ஆர் எஸ் எஸுக்கு அனுப்பிய பணத்தில் 83% பழங்குடிகளுக்கான திட்டங்களுக்குச் செலவழித்திருக்கின்றார்கள்.//
    83% இல்லை, 69%...
    அதுவும், எளிதில் உணர்ச்சிவசப்படும் தாராசிங்குகளை உருவாக்கத்தான். --In 2000, around $1.7 million was channelled to Sangh Parivar organisations such as the Vanvasi Kalyan Ashram (VKA), which has been linked with anti-minority violence. -- இது அந்த செய்தியின் ஒரு பகுதி.

    //இந்தியா என்பதும் ஹிந்து என்பதும் ஒன்றே //
    இது மிகவும் அபாயமான Statement.
    அப்படியானால் மற்ற மதத்தினரும், மத நம்பிக்கையற்றவர்களும் இந்தியாவில் இரண்டாம் தர குடிமக்களா?

    //எப்படி அனுப்பினால் என்ன?//
    செய்வதை தெளிவாக சொல்லி நிதி திரட்ட வேண்டியதுதானே, ஏன் இத்தனை ஒளிவு மறைவு?

    //அறுபதாண்டுகளில் ஆயிரமாண்டுகள் அடிமைத்தனம் தாண்டி இவ்வளவுக்கு மேலேறி வந்திருக்கின்றோம் என சந்தோஷமில்லை என்றாலும் குறைமட்டுமே ஏன் கூறுவானேன். //

    அடிமைத்தனம் தாண்டியது உண்மை.
    அது பெரியார் போன்ற புரட்சியாளர்களால் மத கட்டமைப்புகளிடமிருந்து கிடைத்த சுதந்திரம்.

    By Blogger Kans, at 10:14 AM, January 06, 2007  

  • //அடிமைத்தனம் தாண்டியது உண்மை.
    அது பெரியார் போன்ற புரட்சியாளர்களால் மத கட்டமைப்புகளிடமிருந்து கிடைத்த சுதந்திரம்.//

    நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு இருக்கிறது :-))

    By Blogger Hariharan # 03985177737685368452, at 12:23 AM, January 07, 2007  

  • //நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு இருக்கிறது :-)) //

    எனக்கு நகைச்சுவையுணர்வும் இருக்கிறது, யாரால் எது நடந்தது என்னும் விழிப்புணர்வும் இருக்கிறது.
    ஆயிரம் ஆதாரம் இருந்தும் நம்ப மறுத்தால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

    BTW, என்னுடைய மற்ற கேள்விகளுக்கு பதில் என்னவோ?

    By Blogger Kans, at 10:57 AM, January 07, 2007  

Post a Comment

<< Home