எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...
என்னுடைய ஒரு பதிவில் ஒரு பதிவர் இவ்வாறு பின்னுட்டமிட்டிருந்தார்:
"குழந்தைத் திருமணம் வேறு, பொருந்தாத் திருமணம் வேறு. இரண்டாவதில் மணமகனுக்கும் மணமகளுக்கும் ரொம்ப வயது வித்தியாசம் இருக்கும். பெண்ணுக்கு 20 வயதிருக்குக்கும். அவளை அறுபது வயதுக்காரருக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் தாரமாகக் கட்டிக் கொடுப்பார்கள். அதைதான் தி.க.வினர் எதிர்த்தனர். பெரியார் (மணியம்மையை திருமணம் செய்து) எல்லா ஆதரவாளர்கள் முகத்திலும் கரியைப் பூசினார். நீங்கள் அதை இங்கு பூசி மொழுக இயலாது. எல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன."
அதற்கு நான் இட்டப் பின்னூட்டம்:
" ஐயா, பெரியாரைத் தாங்கவில்லை.இவற்றிற்கு கட்சி சார்பற்ற links தர இயலுமா? கண்டிப்பாக பார்க்கிறேன்.இத்தலைமுறையை சேர்ந்த எனக்கு அவரைப் பற்றி மேலும் தெரிய அவை வேண்டும்.
//பெண்ணுக்கு 20 வயதிருக்குக்கும். அவளை அறுபது வயதுக்காரருக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் தாரமாகக் கட்டிக் கொடுப்பார்கள். அதைதான் தி.க.வினர் எதிர்த்தனர்.//
நான் ஏற்கனவே திருமணம் என்பது சொந்த விஷயம் என்று சொல்லியிருக்கிறேன். ஒரு பெண்ணின் சம்மதத்தோடு இது நடந்தால் இதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதை எதிர்க்க தி.க விற்கோ, எந்தக் கட்சிக்கோ உரிமையில்லை. ஆனால் பணபலத்தில் ஒரு முதியவர் ஒருப் பெண்ணை அடைய நினைத்தால் அதை எதிர்க்கலாம்.
தி.க வினர் எதனை எதிர்த்தனர் என்று கொஞ்சம் தெளிவாக சொல்லுங்களேன். " என்று கேட்டிருந்தேன்.
எனக்கு பதில் வராததால் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்:
தி.க வினர் ஏன் பொருந்தாத் திருமணத்தை எதிர்த்தனர்?
தி.க வினர் பொருந்தாத் திருமணத்தை எதிர்க்கையில், பெண் சம்மதிதாலா என்பதை கருத்தில் எடுக்காமல் குருட்டுதனமாக எதிர்த்தார்களா ( அக்காலத்தில் பெண்ணின் சம்மதம் கேட்டார்களா என்று என்னைக் கேட்காதீர்கள்) ?
இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தனவா?.

5 Comments:
தலை, அமைதி அமைதி...சாந்தி சாந்தி...
By ரவி, at 10:10 AM, November 28, 2006
ஈவெராவின் திருமணம் விமர்சிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது அவரதும் மணியம்மையுடதுமான சொந்த விவகாரம். வயது வேறுபாடு அதிகம். அந்த அம்மாவும் ஒப்புக்கொண்டுதான் திருமணம் நடைபெற்றது. ஆனால் அவரது வயது குறித்து ஒரு பூசி மொழுகல் நடந்திருக்கிறது. சட்டரீதியாக சொத்துக்களை காக்கும் நடவடிக்கை. அதனைத் தொடர்ந்து ஏற்பட்டது ஒரு public image பிரச்சனை. அண்ணாவுக்கு அது முக்கியமானதாக இருந்தது. மற்றொரு அதிகார மையம் வருவதையும் அண்ணா விரும்பாமல் இருந்திருக்கலாம். தன்னை எதிர்ப்பதை ஈவெரா விரும்பவில்லை. இந்த பிரச்சனை இருவரது ஆளுமையையும் வெளிப்படுத்தியது முக்கியமானது. அவர்களது கொள்கை பிடிப்புகளின் உண்மை நோக்கங்கள் வெளியாகின. ஈவெரா எவ்விதத்திலும் ஒரு ஆழமான அல்லது புரட்சிகரமான சிந்தனையாளர் கிடையாது. அவரது அரசியல் உருப்படியாக அலசப்பட்டால், அவரது கருத்தியல் அஸ்திவாரங்கள் எது என தோண்டிப்பார்த்தால் மிக எளிதாக உடைந்துவிடும். அவரது அரசியல் ஹிட்லரின் அரசியலுக்கு எவ்விதத்திலும் மடத்தனத்திலும் வெறிபிடித்த வெறுப்பியலிலும் எவ்விதத்திலும் குறைந்தது அல்ல. அந்த ஒப்பீடும் அதனை வெளிப்படுத்துவதும் முக்கியமானது. அதோடு ஒப்பிடுகையில் அவரது காலங்கடந்ததாக கருதப்படும் திருமணம் எவ்விதத்திலும் முக்கியமானதல்ல.
By அரவிந்தன் நீலகண்டன், at 9:14 AM, December 15, 2006
திரு. நீலகண்டன்
அவரோட சொத்து அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். அதை விடுங்க.
ஒருத்தருக்கு எதிரி இன்னொருத்தருக்கு நண்பன் . ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்திற்கு (பெண்கள் உட்பட) அவர் நண்பர். ஆகவே அரசியல் மற்றும் மத அதிகார கூட்டத்திற்கு அவர் எதிரியானாதில் ஒன்றும் வியப்பில்லை. :-)
By Kans, at 9:43 AM, December 15, 2006
மன்னிக்கவும் நண்பரே நான் வேறுபடுகிறேன். சமுதாய அவலங்களை முதலாக்கி அவர் வெறுப்பியல் பிரச்சாரம் செய்த அளவுக்கு அந்த பிரச்சனைகளை ஆராய்ந்து எதிர்கொள்ளும் வழிமுறைகளை அவர் கண்டடையவில்லை. பாபாசாகேப் அம்பேத்கர் அல்லது ஐயன் காளி அல்லது நாராயணகுரு அல்லது ஐயா வைகுண்டர் போன்றவர்கள் எதிர்கொண்ட தீவிர அடக்குமுறைகளை ஈவேரா எதிர்கொண்டதேயில்லை. அவர் முன்வைத்ததெல்லாம் வக்கிரம் பிடித்த இனவெறி வெறுப்பியலைதான். அன்றி வேறில்லை.
By அரவிந்தன் நீலகண்டன், at 10:01 AM, December 15, 2006
// பாபாசாகேப் அம்பேத்கர் அல்லது ஐயன் காளி அல்லது நாராயணகுரு அல்லது ஐயா வைகுண்டர் போன்றவர்கள் எதிர்கொண்ட தீவிர அடக்குமுறைகளை ஈவேரா எதிர்கொண்டதேயில்லை.//
1) அடக்குமுறைகளை அனுபவித்தவர்தான் போராட வேண்டுமா? வெளியாட்கள் போராடக்கூடாதா? (பாரதியை கூட அப்படி ஒதுக்க முடியும்)
2) அடக்குமுறைகளை இருந்தன என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
3) //அவர் வெறுப்பியல் பிரச்சாரம் செய்த அளவுக்கு// -- உங்கள் நிலையிலிருந்து கூறுகிறீர்கள் (அதாவது படித்து, உலக அனுபவம் கொண்டு). ஆனால் படிப்பறிவற்ற சமுதாயத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் தான் சரிப்பட்டு வரும்
By Kans, at 10:14 AM, December 15, 2006
Post a Comment
<< Home