Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Saturday, April 21, 2007

ஒரு திருட்டுக் கும்பல் தியாகியாகிறது

நீங்கள் ஒரு திருட்டோ, அல்லது வேறு ஒரு அசிங்கமான காரியம் செய்து கையும் களவுமாக மாட்டியாச்சு.
உங்கள் திருட்டை கண்டுபிடிச்சவரும் உங்கள் வேலை போய்விடக்கூடாதென்று போலீஸுக்கு போகாமல் உங்களை சும்மா விடுகிறார்.

திருடிய நீங்கள் இப்போது என்ன பண்ணனும்?
மனம் திருந்தனுமா... சேச்சே அதெல்லாம் மனுசங்க செய்யறது.

1) போலீஸுக்குப் போகாமல் தங்களுக்குள் பேசி முடித்ததை "கட்ட பஞ்சாயத்து" என்று சொல்லனும்.
(போலீஸுக்குப் போயிருந்தால் வேலைசெய்யுமிடத்திலும் சமுதாயத்திற்கும் உங்கள் "அழகு" தெரிந்து நாறியிருக்கும் என்பதை மறந்து விட வேண்டும்)
2) IP கண்டுபிடிக்க தமிழ்மணமோ, தேன்கூடோ தேவையில்லை சாதரண IP tracker போதுமென்பதை மறந்துவிடவேண்டும்.
3) சம்பந்தமில்லாமல் தமிழ்மணத்தின் மீது ஏதேனும் ஒரு பழி போட்டு திசை திருப்பனும். ( ஏன் தேன்கூட்டின் மீது எழுப்பக்கூடாது என்று எனக்குத் தெரியவில்லை :-)) )
4) தமிழ்மணம் ஆதாரம் கேட்டால் குடுக்கக்கூடாது (இருந்தால்தானே குடுக்கிறதுக்கு). ஆனால் "அய்யோ பாசிசம்" என்று அலற வேண்டும்.

இதுதான் "Algorithm of becoming a அல்டிமேட் தியாகி"
அப்புறமென்ன நீங்கள் தியாகியோ தியாகி கொண்டாடிலாம்.