Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Tuesday, October 16, 2007

F**K you Rajini

2000- 3000 வருடங்களுக்கு முன் யாரோ ஒரு வடநாட்டவன் எழுதிய கற்பனைக் கதையால் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு வளர்ச்சிப்பணி பாதிக்கிறது, இதற்காக ரஜினி "வடநாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்து" என்று சொல்கிறார். "வட நாட்டு தலைவர்கள்" என்பது இங்கு "வட நாட்டு இந்து மத தலைவர்கள்" என்று அர்த்தம் இங்கு. இந்த "வட நாட்டு மத தலைவர்கள்" என்ன தமிழக வளங்களுக்கு லைசென்ஸ் வாங்கியுள்ளார்களா?ராமர் பாலத்தை "ஆதாம் பாலம்" (Adams Bridge) என்றும் கூறுவார்கள். இதற்காக வாடிகனுக்கும் போய் பேச்சு வார்த்தை நடத்தனுமா?
நல்லா இருங்கப்பா


கங்கை நதியும் இந்து ஆன்மீகத்தில் அதிகம் போற்றப்படுகிறது. அதற்காக அந்த நதி மீது ஒவ்வொரு பாலமும், அணையும் கட்டும் பொழுது இந்த மதக்கூத்தாடிகளைக் கேட்டார்களா?

60 வயதில் 20 களோடு ஆட்டம் போட கோடிக்கணக்கில் தமிழ் மக்கள் அள்ளிக்கொடுத்தால் இதுவும் பேசும் இன்னமும் பேசும்.
(இந்த முட்டாளெல்லாம் ஆட்சிக்கு வந்தால்???
சோ வின் ஆட்டுவிப்பில் ஆடும் காவி பொம்மையாக இருக்கும்)

related: http://eyekans.blogspot.com/2007/10/blog-post.html

Friday, October 05, 2007

அரக்கனா கலீலியோவா?

மதம் எந்த அளவுக்கு கண்ணை மறைக்கும் என்பதற்கு கலீலியோ- சர்ச் வழக்கை உதாரணம் கூறலாம். இது கிறித்துவத்தில் ஒரு கரும்புள்ளி. ஆனால் கிறித்துவம் 400 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் வளராத காலத்தில் இந்த நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால் அறிவியல் வளர்ந்த இன்றைய சூழ்நிலையில் இந்துமதத்தினர் தானாக வளர்ந்த ஒரு "Geographical Structure"ஐ யாரோ ஒரு புராண கால கதாநாயகன் கட்டினான் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், அத்தகைய எதிர்ப்புகள் அறிவியல் பூர்வமாக முறியடிக்கப் படும் போது, வேறு காரணங்கள் (environmental, economical, security)
கூறுவதும் நடந்து வருகிறது. அந்த எதிர்ப்பும் பலிக்கத போது, அடுத்த கட்டமாக "ஆமாம், இது ஆதரமற்ற நம்பிக்கைதான், ஆனால் இது என் மத நம்பிக்கை - அதனால் நீ அதனை இடிக்கக்கூடாது" என்று வாதிக்கின்றனர்.
இத்தகைய "மத ஆர்வலர்கள்"தான் "சதி", "தீண்டாமை", "தேவதாசி" ஆகிய வழக்கங்களையும் கடந்துபோன நூற்றாண்டுகளில் ஆதரித்தனர் என்பது உண்மை.

இவர்களின் எதிர்ப்பை மீறி கலைஞர் தன்னுடைய கொள்கையில் தளராமல் சேது சமுத்திர திட்டத்தை ஆதரிக்கின்றார். இது பலரின் வயிறெரிச்சலை அதிகப்படுத்தியுள்ளது. சிலர் "voluntary retirement" பற்றி கூட பேசுகிறார்கள் :) ...
(அதே போல் உமாபாரதி என்னும் ஒரு காவியுடை அரைவேக்காட்டுப் பெண், சேது சமுத்திர திட்டத்தில் வேலை செய்யும் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த போது அவரை எதிர்த்து வழக்கு போடாத "ட்ராபிக் ராமசமி"களும், நீதி வழங்காத "நீதிபதிகளும்", கருணாநிதி போராட்டம் அறிவித்த பின் ஓடோடி போய் நடு இரவில் வழக்கு போட்டு தடையுத்தரவு வாங்குவது தமிழகத்தில் சகஜம்ப்பா.)

இந்நிலையில் எதிர்காலம் இந்த சேது சமுத்திர கூத்தைப் பற்றி என்ன கூறும்? எந்த சித்தாந்தம் ஜெயிக்கிறது என்பதைப் பொறுத்து பதில் மாறும்.

திராவிட உணர்வுகளும், பகுத்தறிவும் அழிந்துவிட்டு இந்தியா பழையபடி இந்து நாடாக மாறினால் கருணனிதி ஒரு அரக்கனாக சித்தரிக்கப் படுவார். அவரின் "அரக்க குனங்கள்" பற்றியும், அவரை எதிர்து போராடி எப்படி இந்து மதம் வெற்றி பெற்றது என்றும் கட்டுக்கதைகள் எழுதப்படும்.(இந்தியா இந்து நாடாக மாற வாய்ப்புகள் இன்னும் இருக்கிறது - சனாதான தருமம் என்று அந்தக் கருமம் மறுபடி உள்ளே வர பார்க்கிறது).

பகுத்தறிவு நிலைபெற்றிருந்தால், கிறித்துவதிதிற்கு ஒரு கலிலீயோ சண்டை போல், சேது சமுத்திரம் இந்து மததின் ஒரு கரும்புள்ளியாக பார்க்கப்படும்.