ஒரு திருட்டுக் கும்பல் தியாகியாகிறது
நீங்கள் ஒரு திருட்டோ, அல்லது வேறு ஒரு அசிங்கமான காரியம் செய்து கையும் களவுமாக மாட்டியாச்சு.
உங்கள் திருட்டை கண்டுபிடிச்சவரும் உங்கள் வேலை போய்விடக்கூடாதென்று போலீஸுக்கு போகாமல் உங்களை சும்மா விடுகிறார்.
திருடிய நீங்கள் இப்போது என்ன பண்ணனும்?
மனம் திருந்தனுமா... சேச்சே அதெல்லாம் மனுசங்க செய்யறது.
1) போலீஸுக்குப் போகாமல் தங்களுக்குள் பேசி முடித்ததை "கட்ட பஞ்சாயத்து" என்று சொல்லனும்.
(போலீஸுக்குப் போயிருந்தால் வேலைசெய்யுமிடத்திலும் சமுதாயத்திற்கும் உங்கள் "அழகு" தெரிந்து நாறியிருக்கும் என்பதை மறந்து விட வேண்டும்)
2) IP கண்டுபிடிக்க தமிழ்மணமோ, தேன்கூடோ தேவையில்லை சாதரண IP tracker போதுமென்பதை மறந்துவிடவேண்டும்.
3) சம்பந்தமில்லாமல் தமிழ்மணத்தின் மீது ஏதேனும் ஒரு பழி போட்டு திசை திருப்பனும். ( ஏன் தேன்கூட்டின் மீது எழுப்பக்கூடாது என்று எனக்குத் தெரியவில்லை :-)) )
4) தமிழ்மணம் ஆதாரம் கேட்டால் குடுக்கக்கூடாது (இருந்தால்தானே குடுக்கிறதுக்கு). ஆனால் "அய்யோ பாசிசம்" என்று அலற வேண்டும்.
இதுதான் "Algorithm of becoming a அல்டிமேட் தியாகி"
அப்புறமென்ன நீங்கள் தியாகியோ தியாகி கொண்டாடிலாம்.
உங்கள் திருட்டை கண்டுபிடிச்சவரும் உங்கள் வேலை போய்விடக்கூடாதென்று போலீஸுக்கு போகாமல் உங்களை சும்மா விடுகிறார்.
திருடிய நீங்கள் இப்போது என்ன பண்ணனும்?
மனம் திருந்தனுமா... சேச்சே அதெல்லாம் மனுசங்க செய்யறது.
1) போலீஸுக்குப் போகாமல் தங்களுக்குள் பேசி முடித்ததை "கட்ட பஞ்சாயத்து" என்று சொல்லனும்.
(போலீஸுக்குப் போயிருந்தால் வேலைசெய்யுமிடத்திலும் சமுதாயத்திற்கும் உங்கள் "அழகு" தெரிந்து நாறியிருக்கும் என்பதை மறந்து விட வேண்டும்)
2) IP கண்டுபிடிக்க தமிழ்மணமோ, தேன்கூடோ தேவையில்லை சாதரண IP tracker போதுமென்பதை மறந்துவிடவேண்டும்.
3) சம்பந்தமில்லாமல் தமிழ்மணத்தின் மீது ஏதேனும் ஒரு பழி போட்டு திசை திருப்பனும். ( ஏன் தேன்கூட்டின் மீது எழுப்பக்கூடாது என்று எனக்குத் தெரியவில்லை :-)) )
4) தமிழ்மணம் ஆதாரம் கேட்டால் குடுக்கக்கூடாது (இருந்தால்தானே குடுக்கிறதுக்கு). ஆனால் "அய்யோ பாசிசம்" என்று அலற வேண்டும்.
இதுதான் "Algorithm of becoming a அல்டிமேட் தியாகி"
அப்புறமென்ன நீங்கள் தியாகியோ தியாகி கொண்டாடிலாம்.
11 Comments:
kans நீங்களும் இது குறித்துப் பதிவா ?
you too ......
:)
By கோவி.கண்ணன், at 12:24 PM, April 21, 2007
அன்னாத்தே, தேன்கூடு நிர்வாகிகள் பெரியார், இடஒதுக்கீடு, பூணூல் என்று ஏதாவது எழுதியிருக்கின்றார்களா? தமிழ்மணம் நிர்வாகிகள் எழுதிவிட்டார்களே, அது ஒன்று போதாதா? அவார்கள் கூப்பாடு போட. பருப்புகளின் ஒற்றுமையை பார்த்தாவது தமிழர்கள் திருந்தட்டும்.
By அருண்மொழி, at 10:46 PM, April 21, 2007
// கோவி.கண்ணன் said...
kans நீங்களும் இது குறித்துப் பதிவா ?
you too ......
:) //
இப்பதிவிற்கும் தமிழ்மணத்தில் நடக்கின்ற எதற்கும் தொடர்பில்லை என தெரிவித்துக்கொள்கிறேன் :-)
By Kans, at 12:33 AM, April 22, 2007
அருண்மொழி
தாதஸ்து... தாதஸ்து !
By Kans, at 12:45 AM, April 22, 2007
கலி முத்தீடுத்து...
அதான் இப்டியெல்லாம் பதிவு போட்றேள்....
ஹி..ஹி...
By பங்காளி..., at 1:28 AM, April 22, 2007
//பங்காளி... said...
கலி முத்தீடுத்து...
அதான் இப்டியெல்லாம் பதிவு போட்றேள்....
ஹி..ஹி...
//
பங்காளி
அளவில்லா காமெடி நடக்குது தமிழ் பதிவுலகில் :-)
By Kans, at 12:56 AM, April 23, 2007
ஓடோடி வந்து "-" குத்தும் காவி அன்பர்களே, தைரியமிருந்தால் உங்கள் பக்க "நியாயத்தை" சொல்லுங்கள் :-)
By Kans, at 12:58 AM, April 23, 2007
nalla pathivu!!!
By gulf-tamilan, at 2:21 PM, April 23, 2007
//gulf-tamilan said...
nalla pathivu!!!
//
நன்றி gulf-tamilan
By Kans, at 1:08 AM, April 24, 2007
என்னை பொருத்தவரை, சரியோ தவறோ... ஒரு சாராரை நீக்கியது/அவர்களாகவே நீங்கியது, தமிழ்மணத்திற்கு பின்னடைவே...
இருவரும் தமிழ்மணத்தில் இருந்ததால் தான் என் போன்றோர் இருசாராரின் கருத்துக்களையும் அறிய முடிந்தது....சில விரும்பத்தகாத விஷயங்கள் நடந்திருந்தாலும் அதை தமிழ்மணம் சரியாக Handle செய்யவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது...
இதுவரை பலவிஷயங்கள் விவாதிக்கப்பட்டு வந்தன.. பல அரிய கருத்துக்கள் அறிய வந்தன..அவசரபடாமல்...உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் ஏற்பட்டு இருக்கும் இழப்பு புரியும்.. இனி ஒரு பக்க வாதங்களே தமிழ்மணத்தில் இருக்கும், அதற்கு எதிர்கருத்தோ விவாதங்களோ இருக்கப்பொவதில்லை..
விவாதங்கள்/எதிர்கருத்துக்கள் இல்லாமல் எந்தக் கருத்தும்/வாதமும் முழுமை அடைய போவதில்லை...
இப்பொழுதே. கடந்த சில நாட்களாக வாசகர் பரிந்துரை பக்கம் சென்று பார்த்தால்.. திராவிட பதிவுகளும், இஸ்லாமிய பதிவுகளும் தான் பெரும்பான்மையாக உள்ளன.. ஒரு பக்க கருத்துக்களே முதன்மை பெறுவது ஆரோக்கியமற்ற சூழல்.
உங்களுடைய வாதங்களை சோதனைக்குட்படுத்தி எதிர் தரப்பினர் பலருடன் விவாதித்து முடிவில் நீங்கள் உங்கள் கருத்தில் வெற்றி பெறும் போது கிடைக்கும் சந்தோஷம், பெருமை, கவுரவம் இனி உமக்கு வாய்க்கப்போவதரிது...
இதை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒரு பக்க ஆட்டமே வெற்றி என நினைத்தால் சொல்வதுற்கு ஏதுமில்லை...நன்றி
By Anonymous, at 3:06 PM, April 25, 2007
அன்புள்ள அனானி,
உங்கள் கருத்துக்களை பாசிச கூச்சல்களின் மத்தியில் அழகாகவும் அமைதியாகவும் சொன்னதற்கு நன்றி.
பிரச்சனை எப்படி தொடங்கியது?
ஒரு பதிவர் மற்றொரு பெண்பதிவரின் பேரில் ஆபாசப் பதிவு தொடங்கியதால் வந்தது.
அதனை மறைக்க ஆபாசப் பதிவருடைய நண்பர்கள்/ஒத்த அரசியல் சார்புடையவர்கள் புது பிரச்சனையை கிளப்பினார்கள்.
IP details ஐ கண்டுபிடிக்க தமிழ்மணம்/தேன்கூடு தேவையில்லை. இது தெரிந்தும் ஆபாச பதிவு எழுதிய ஜயராமனைப் பற்றி கருத்து சொல்லாமல், திசை திருப்பும் நோக்கோடு தமிழ்மணம் திரட்டியை உள் இழுக்கிறார்கள். இதிலிருந்தே அவர்கள், தங்கள் சார்பு நபர்களுக்காக எப்படி வேண்டுமானாலும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராக உள்ளார்கள் என்பது புரிகிறது.
தமிழ்மணத்தை மட்டும் ஏன் குறி வைக்க வேண்டும்? "தேன்கூடு" என்னும் திரட்டியை ஏன் கேள்வி கேட்பதில்லை?
மேலும், தமிழ்மணம் அதன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு ஆதாரம் கேட்டும், அதற்கு நேரம் கொடுத்தும்தானே ஒருவரை விலக்கியது?
சுமத்தப்பட்ட குற்றம் உண்மையென்றால், அதற்கான ஆதாரங்கள் தராமல் ஏன் கூச்சலிட வேண்டும்?
பார்ப்பனீயத்தைப் பற்றி கருத்து சொல்வதால், "பூங்கா" இதழ் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று சொல்லியது ஆரோக்கியமான செயலா? அதனைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
//இதுவரை பலவிஷயங்கள் விவாதிக்கப்பட்டு வந்தன.. பல அரிய கருத்துக்கள் அறிய வந்தன..அவசரபடாமல்...உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் ஏற்பட்டு இருக்கும் இழப்பு புரியும்.. இனி ஒரு பக்க வாதங்களே தமிழ்மணத்தில் இருக்கும், அதற்கு எதிர்கருத்தோ விவாதங்களோ இருக்கப்பொவதில்லை..
விவாதங்கள்/எதிர்கருத்துக்கள் இல்லாமல் எந்தக் கருத்தும்/வாதமும் முழுமை அடைய போவதில்லை...
//
Right wing எல்லோரும் கிளம்பவில்லை. வெறும் இரண்டு பேரே நீக்கப்பட்டனர். ஒருவர் தானாக விலகினார்.
இந்த மூன்று பேரைத்தவிர எத்தனையோ Right wing எழுத்தாளர்கள் தமிழ்மணத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் எழுதியும், கமெண்ட் அளித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள். அவர்களின் கருத்தும் தமிழ்மணத்தில் ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது.
//உங்களுடைய வாதங்களை சோதனைக்குட்படுத்தி எதிர் தரப்பினர் பலருடன் விவாதித்து முடிவில் நீங்கள் உங்கள் கருத்தில் வெற்றி பெறும் போது கிடைக்கும் சந்தோஷம், பெருமை, கவுரவம் இனி உமக்கு வாய்க்கப்போவதரிது...//
கருத்து விவாதத்திற்கும், சுயபரிசோதனைக்கும் எப்பொழுதுமே தயார்.
ஆனால் "அவன் ஆபாசமாய் எழுதினாலும் என் மத/அரசியல் சார்புடையவன், அதனால் என்னுடய ஆதரவு அவனுக்குத்தான்" என்று இருப்பவர்களிடம் எப்படி ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்க்கமுடியும்?
பொய் குற்றச்சாட்டுக்கள் எழுப்பி, ஆதாரம் கேட்டால் "பாசிசம்" என்று முத்திரை குத்துபவர்கள் உண்மையை எழுதுவார்களென்று நான் நம்பவில்லை.
By Kans, at 4:54 AM, May 03, 2007
Post a Comment
<< Home