Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Tuesday, October 16, 2007

F**K you Rajini

2000- 3000 வருடங்களுக்கு முன் யாரோ ஒரு வடநாட்டவன் எழுதிய கற்பனைக் கதையால் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு வளர்ச்சிப்பணி பாதிக்கிறது, இதற்காக ரஜினி "வடநாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்து" என்று சொல்கிறார். "வட நாட்டு தலைவர்கள்" என்பது இங்கு "வட நாட்டு இந்து மத தலைவர்கள்" என்று அர்த்தம் இங்கு. இந்த "வட நாட்டு மத தலைவர்கள்" என்ன தமிழக வளங்களுக்கு லைசென்ஸ் வாங்கியுள்ளார்களா?ராமர் பாலத்தை "ஆதாம் பாலம்" (Adams Bridge) என்றும் கூறுவார்கள். இதற்காக வாடிகனுக்கும் போய் பேச்சு வார்த்தை நடத்தனுமா?
நல்லா இருங்கப்பா


கங்கை நதியும் இந்து ஆன்மீகத்தில் அதிகம் போற்றப்படுகிறது. அதற்காக அந்த நதி மீது ஒவ்வொரு பாலமும், அணையும் கட்டும் பொழுது இந்த மதக்கூத்தாடிகளைக் கேட்டார்களா?

60 வயதில் 20 களோடு ஆட்டம் போட கோடிக்கணக்கில் தமிழ் மக்கள் அள்ளிக்கொடுத்தால் இதுவும் பேசும் இன்னமும் பேசும்.
(இந்த முட்டாளெல்லாம் ஆட்சிக்கு வந்தால்???
சோ வின் ஆட்டுவிப்பில் ஆடும் காவி பொம்மையாக இருக்கும்)

related: http://eyekans.blogspot.com/2007/10/blog-post.html

Friday, October 05, 2007

அரக்கனா கலீலியோவா?

மதம் எந்த அளவுக்கு கண்ணை மறைக்கும் என்பதற்கு கலீலியோ- சர்ச் வழக்கை உதாரணம் கூறலாம். இது கிறித்துவத்தில் ஒரு கரும்புள்ளி. ஆனால் கிறித்துவம் 400 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் வளராத காலத்தில் இந்த நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால் அறிவியல் வளர்ந்த இன்றைய சூழ்நிலையில் இந்துமதத்தினர் தானாக வளர்ந்த ஒரு "Geographical Structure"ஐ யாரோ ஒரு புராண கால கதாநாயகன் கட்டினான் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், அத்தகைய எதிர்ப்புகள் அறிவியல் பூர்வமாக முறியடிக்கப் படும் போது, வேறு காரணங்கள் (environmental, economical, security)
கூறுவதும் நடந்து வருகிறது. அந்த எதிர்ப்பும் பலிக்கத போது, அடுத்த கட்டமாக "ஆமாம், இது ஆதரமற்ற நம்பிக்கைதான், ஆனால் இது என் மத நம்பிக்கை - அதனால் நீ அதனை இடிக்கக்கூடாது" என்று வாதிக்கின்றனர்.
இத்தகைய "மத ஆர்வலர்கள்"தான் "சதி", "தீண்டாமை", "தேவதாசி" ஆகிய வழக்கங்களையும் கடந்துபோன நூற்றாண்டுகளில் ஆதரித்தனர் என்பது உண்மை.

இவர்களின் எதிர்ப்பை மீறி கலைஞர் தன்னுடைய கொள்கையில் தளராமல் சேது சமுத்திர திட்டத்தை ஆதரிக்கின்றார். இது பலரின் வயிறெரிச்சலை அதிகப்படுத்தியுள்ளது. சிலர் "voluntary retirement" பற்றி கூட பேசுகிறார்கள் :) ...
(அதே போல் உமாபாரதி என்னும் ஒரு காவியுடை அரைவேக்காட்டுப் பெண், சேது சமுத்திர திட்டத்தில் வேலை செய்யும் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த போது அவரை எதிர்த்து வழக்கு போடாத "ட்ராபிக் ராமசமி"களும், நீதி வழங்காத "நீதிபதிகளும்", கருணாநிதி போராட்டம் அறிவித்த பின் ஓடோடி போய் நடு இரவில் வழக்கு போட்டு தடையுத்தரவு வாங்குவது தமிழகத்தில் சகஜம்ப்பா.)

இந்நிலையில் எதிர்காலம் இந்த சேது சமுத்திர கூத்தைப் பற்றி என்ன கூறும்? எந்த சித்தாந்தம் ஜெயிக்கிறது என்பதைப் பொறுத்து பதில் மாறும்.

திராவிட உணர்வுகளும், பகுத்தறிவும் அழிந்துவிட்டு இந்தியா பழையபடி இந்து நாடாக மாறினால் கருணனிதி ஒரு அரக்கனாக சித்தரிக்கப் படுவார். அவரின் "அரக்க குனங்கள்" பற்றியும், அவரை எதிர்து போராடி எப்படி இந்து மதம் வெற்றி பெற்றது என்றும் கட்டுக்கதைகள் எழுதப்படும்.(இந்தியா இந்து நாடாக மாற வாய்ப்புகள் இன்னும் இருக்கிறது - சனாதான தருமம் என்று அந்தக் கருமம் மறுபடி உள்ளே வர பார்க்கிறது).

பகுத்தறிவு நிலைபெற்றிருந்தால், கிறித்துவதிதிற்கு ஒரு கலிலீயோ சண்டை போல், சேது சமுத்திரம் இந்து மததின் ஒரு கரும்புள்ளியாக பார்க்கப்படும்.

Friday, June 08, 2007

தினமலர் + அனானி = அடப்பாவிகளா...

ஓசை செல்லா "கிறுக்குத் தமிழனுக்கு என்றே ஒரு சூப்பர் ஸ்டார்!" பதிவில் அனானியா வந்த பின்னூட்டம் ஒன்று இந்தப் பதிவை எழுத தூண்டியது. அந்த அனானியின் கருத்தைப் பார்ப்போம்:

"ஒரு பக்கம் இந்த சினிமா மோகத்தில் கிறங்கிப்போயிருக்கும் கும்பல்; இன்னொரு பக்கத்தில், மஞ்சதுண்டு, மரம்வெட்டி, மதுரையை எரித்த அழகிரி போன்ற ரெளடிப் பசங்களுக்கு கோவிந்தா போட்டபடி ஓசி பிரியாணி/சாராயத்துக்காக ஆலாப்பறக்கும் கும்பல்.இன்னொரு பக்கம் உலகத்திலேயே மூத்த குடி தமிழ்க்குடி;தமிழ் செம்மொழி என்று அலட்டிக்கொள்ளும் கும்பல் தங்களை தாங்களே பாக்வேர்ட் என்று வர்ணித்துக்கொண்டு கீழ்த்தரமா சலுகைகளை திருடிக்கொண்டு போகும் க்ரீமி லேயர் ஓ பி சி கும்பல்.மொத்தத்தில் ஒட்டு மொத்தமா தமிழ் கும்பலே கேவலமான கும்பல்.தமிழ்நாடே துர்நாற்றமடிக்கும் நாடு."


-ஒரு பக்கம் இந்த சினிமா மோகத்தில் கிறங்கிப்போயிருக்கும் கும்பல் -- ஒத்துக்கலாம்

- மஞ்சதுண்டு,மரம்வெட்டி,மதுரையை எரித்த அழகிரி போன்ற ரெளடிப் பசங்களுக்கு கோவிந்தா போட்டபடி ஓசி பிரியாணி/சாராயத்துக்காக ஆலாப்பறக்கும் கும்பல் -- ஒத்துக்கலாம் - அழகிரிய கண்டிப்பா "கவனிக்கனும்". ஆனா தர்மபுரில உயிரோட 3 பெண்கள எரிச்ச நம்ம "புரட்சி" அம்மா ஜெயலலிதாவ உட்டுடாரே, சரி மறந்திருப்பாரு பாவம் (எதிர்கட்சியா இருக்கும்போதே போலீசையே உயிரோடு எரிக்க அதிமுக ஆளுங்கள தவிர வேற யாருக்கு ரௌடியிஸம் வரும்னெல்லாம் கேட்கக்கூடாது)

-தங்களை தாங்களே பாக்வேர்ட் என்று வர்ணித்துக்கொண்டு கீழ்த்தரமா சலுகைகளை திருடிக்கொண்டு போகும் க்ரீமி லேயர் ஓ பி சி கும்பல். --- ம்ம்ம் விவாதிக்க வேண்டிய விஷயம்

- இன்னொரு பக்கம் உலகத்திலேயே மூத்த குடி தமிழ்க்குடி;தமிழ் செம்மொழி என்று அலட்டிக்கொள்ளும் கும்பல் -- அடங்....

அழகிரி/ஜெயலலிதா செய்யற ரௌடியிஸமும், "தமிழ்மொழி ஒரு செம்மொழி" அப்படின்னு தமிழுக்காக போராடரவங்களும் ஒன்னு அப்படின்னு சொல்லும் உன்னோட அறிவ நினைச்சு நினைச்சு புல்லரிக்குது !!!

அப்படி என்ன உனக்கு தமிழ் மேல எரிச்சல்? அப்ப உன் தாய்மொழிய மதிக்காம வேற எந்த மொழிக்கு விசுவாசமா இருக்கிற?

2300 வருசம் தொன்மையான தமிழ் மொழி உனக்கு மூத்தகுடியில்லையா? செம்மொழியில்லையா?

ஏம்பா அனானி, இந்த வரி எழுதும்போது மூளைய கழட்டி வைச்சுட்டியா, இல்ல தமிழ "நீச பாஷை" அப்படி சொல்லற ஆரிய காஞ்சி மட கும்பல சேர்ந்தவனா நீ?

இன்னும் தமிழையும் தமிழர்களையும் கீழாக பார்க்கும் ஆரிய மனப்பானமையே எனக்கு இந்த அனானியின் பதிலில் தெரிகிறது.

ஏதோ "ஆரியம்" என்கிற சதி இப்போ இல்லாதது போலவும், அதனால் "திராவிடம்" அப்படீங்கற பேரே கட்சிக்கு தேவையில்லை அப்படீன்னு எழுதுற தினமலர்+ ப்ளாகர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்..............

சும்மா இருக்கலாம்னு பார்த்தாலும் ஏதாவது எழுத வைச்சிடறாங்கப்பா !

Labels: ,

Saturday, April 21, 2007

ஒரு திருட்டுக் கும்பல் தியாகியாகிறது

நீங்கள் ஒரு திருட்டோ, அல்லது வேறு ஒரு அசிங்கமான காரியம் செய்து கையும் களவுமாக மாட்டியாச்சு.
உங்கள் திருட்டை கண்டுபிடிச்சவரும் உங்கள் வேலை போய்விடக்கூடாதென்று போலீஸுக்கு போகாமல் உங்களை சும்மா விடுகிறார்.

திருடிய நீங்கள் இப்போது என்ன பண்ணனும்?
மனம் திருந்தனுமா... சேச்சே அதெல்லாம் மனுசங்க செய்யறது.

1) போலீஸுக்குப் போகாமல் தங்களுக்குள் பேசி முடித்ததை "கட்ட பஞ்சாயத்து" என்று சொல்லனும்.
(போலீஸுக்குப் போயிருந்தால் வேலைசெய்யுமிடத்திலும் சமுதாயத்திற்கும் உங்கள் "அழகு" தெரிந்து நாறியிருக்கும் என்பதை மறந்து விட வேண்டும்)
2) IP கண்டுபிடிக்க தமிழ்மணமோ, தேன்கூடோ தேவையில்லை சாதரண IP tracker போதுமென்பதை மறந்துவிடவேண்டும்.
3) சம்பந்தமில்லாமல் தமிழ்மணத்தின் மீது ஏதேனும் ஒரு பழி போட்டு திசை திருப்பனும். ( ஏன் தேன்கூட்டின் மீது எழுப்பக்கூடாது என்று எனக்குத் தெரியவில்லை :-)) )
4) தமிழ்மணம் ஆதாரம் கேட்டால் குடுக்கக்கூடாது (இருந்தால்தானே குடுக்கிறதுக்கு). ஆனால் "அய்யோ பாசிசம்" என்று அலற வேண்டும்.

இதுதான் "Algorithm of becoming a அல்டிமேட் தியாகி"
அப்புறமென்ன நீங்கள் தியாகியோ தியாகி கொண்டாடிலாம்.

Friday, March 30, 2007

சடாயு - ம,ம - லாஸ்ட் பார்ட்டு

பூங்காவில் அவருடைய பதிவுகளை தேர்ந்தெடுக்க சம்மதம் தெரிவிக்கப்போவதில்லை என்னும் "வீரமான" முடிவை சடாயு எடுக்க நினைக்கிறாராம். அதற்கு காவி கூட்டணிகள் "என்ன ரோஷம், என்ன ரோஷம்" என்று ஆரவாரம் செய்கிறது. சிரிப்புதான் வருகிறது. தமிழ்மணத்தின் முகப்பில் வரும் பப்ளிசிட்டி வேண்டும், பின்னூட்ட திரட்டலில் தமிழ்மணம் மூலம் பப்ளிசிட்டி வேண்டும், ஏதோ போனால் போகிறதென்று பூங்காவில் பதிவகளை போட அனுமதிக்க மாட்டாராம்.
நஷ்டம் சிறிதுமின்றி ரோஷப்பட (அல்லது அது போல் நடிக்க) இவரிடம் கற்றுக்கொள்ளலாம்.


நான் இந்த பிரச்சனையைப் பற்றி பதிவிட காரணம்:
தமிழ்மணத்தில் உட்கார்ந்து கொண்டு அதனை மிக அருவருப்பாக திட்டுவது எனக்கு என்னவோ வீட்டுக்குள் எச்சில் துப்புவது போன்று அசிங்கமான செயலாக தோன்றியதால் எழுந்த எதிர்வினை.

தமிழ்மணம் ஏதேனும் தவறு செய்திருந்து இவர்கள் கோபப்பட்டால் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் இவர்களின் அரசியல் கொள்கைக்கு மாறான எதிர்கருத்து சொன்னவுடனே "தேசத்துரோகி" என்று தமிழ்மணத்தை முத்திரை குத்த தயாராகும் இவர்களின் குதர்க்க சிந்தனை கேவலமானது.

என் கருத்தை சொல்லிவிட்டேன்.
விலகுவதும் விலகாததும் அவர்(களி)ன் வெட்கம்/மானம் தொடர்புடைய செயல்.


முற்றும்

Labels: ,

Thursday, March 29, 2007

சடாயுவை மன்னிப்போம் மறப்போம் !

அறிவு பிறழ்ந்துவிட்டால் யோசிக்க முடியாது, உளறத்தான் முடியும். அதனால் சடாயுவை மன்னிக்கலாமென்பது என் கருத்து.

பிராமனீயத்தை தூக்கிப் பிடிக்க BJP யில் தான் இருக்க வேண்டுமென்று இல்லை. குலக்கல்வி திட்டம் கொண்டுவந்த ராஜாஜியும், "தேவதாசிகள்" என்னும் கொடிய வழக்கம் ஒழிந்தால் இந்தியப்பாரம்பரியம் நலியும் என்று சொன்ன சத்தியமூர்த்தியும் (பார்ப்பனர்கள்) காங்கிரஸில் இருந்தார்கள். இதை உணராமல் உளறும் சடாயுவை மன்னிப்போம்.


//இந்திய தேசியத்திற்கு எதிரான கருத்துக்களைத் தானாகவும், பொறுக்கி எடுத்தும் மீண்டும் மீண்டும் வெளீயிட்டு வருவதைக் காண்கிறேன். குறிப்பாக கடந்த இதழ் ஆசிரியர் குழு எழுதியிருப்பது அக்மார்க் இந்திய தேசவிரோதக் கருத்துக்கள்.//

(Italics ல் உள்ளது சடாயுவின் வாதம்)

பிராமனீயத்தை எதிர்த்தால் தேச துரோகமாமே???
ஹிந்துத்துவம் என்பது ஒரு மத-அரசியல்-கோட்பாடு.
கம்யூனிசம், Capitalism, Socialism என்பது போல் அதுவும் ஒரு அரசியல்-கோட்பாடு. அது மட்டுமே இந்திய நாட்டை/மக்களை Represent செய்ய முடியாது. ஆதலால் ஹிந்துத்துவத்தை எதிர்ப்பது இந்தியாவை எதிர்ப்பதாகாது. ஆகவே ஆசிரியர் குழு ஹிந்துத்துவத்தை பற்றி கூறினால் அது இந்தியாவை பற்றி கூறுவதாகாது. இதை உணராமல் உளறும் சடாயுவை மன்னிப்போம்.


//இன்று இந்தியாவில் தான் தமிழர்கள் சகல உரிமைகளுடனும், வசதிகளுடனும், வாய்ப்புகளுடனும் திகழ்கிறார்கள், உலகில் வேறெங்கும் அல்ல. //

எப்படி இப்படி கூசாமல் பொய் சொல்லமுடிகிறதென்று தெரியவில்லை.
1) வீரப்பன் வேட்டையென்று தமிழக பகுதிகளில் கன்னட வெறியர்கள் செய்த கொலை/கற்பழிப்பு போன்றவை தெரியவில்லையா?
2) தமிழக (இந்திய) மீனவர்கள் சிங்களவர்களால் 10,20 என கொல்லப்படும்போது வாய் மூடியிருக்கும் இந்திய அரசை என்ன சொல்வீர்கள்?
3) மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு தமிழச்சிகள் கடத்தப்படுவதும்,
மும்பை மிட்டய் கடைகளில் தமிழ் பாலகர்கள் அடிமைகளாக தினம் 20 மணி நேரம் வேலையில் வாடுவதும் தெரியவில்லையா?

இது போல் ஆயிரம் சொல்லலாம், ஆனால் கண்ணை மூடி வெறும் ஹிந்துத்துவம் மட்டும் பார்க்கும் சடாயுவுக்கு இதெல்லாம் தெரியாது .

//இதற்காக பூங்கா ஆசிரியர் குழுவை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்மணத்தில் தங்கள் பதிவுகளை இட்டு வரும் இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ள பதிவர்கள் அனைவரும் பூங்கா மற்றும் அதன் ஆசிரியர் குழு என்ற பெயரில் இப்படி எழுதிய புல்லுருவிகளை //

திரும்பவும் இந்தியாவின் பெயரில் ஒட்டிக்கொண்டு பிராமணீயத்தை தாங்கிப்பிடிக்கும் வாதமிது.



//தமிழ்மணம் வலைத்திரட்டி தொகுத்து அளிப்பதாகக் கூறும் பூங்கா என்ற வலையிதழ் (முள்காடு என்ற பெயர் தான் இதற்குப் பொருத்தமாக இருக்கும்) //

சடாயு, உங்களை யாரும் தமிழ்மணத்தில் இழுத்துப்பிடித்து வைத்திருக்கவில்லை. ஓசி விளம்பரத்திற்கு, நீதான் உள்ளே இருக்கிறீர். முள்ளாய் உணர்ந்தால் தமிழ்மண பட்டையை உமது Templateல் இருந்து நீக்கும். அது எளிதும் கூட. (அதெல்லாம் மானமுள்ளவர்கள் செய்வது).


ஜடாயுவின் பதிவின் பின்னூட்டங்களில் இந்திய-தேசியத்தையும் பிராமணீயத்தையும் குழப்பி "தமிழ்மணம்" ஒரு அருவருப்பான வலைதிரட்டி என்று முடிவுகட்டியுள்ளார்கள். பார்ப்போம், இந்த வெட்கம், மானமுடைய மானஸ்த்தர்கள் எல்லோரும் எப்பொழுது தமிழ்மணத்திலிருந்து வெளியேறுவார்களென்று...

Tuesday, February 27, 2007

க்வாட்டர் கொண்டாட்டம் - 25வது பதிவு

வாங்க வாங்க !!!

என்னை பதிவு எழுத தூண்டியது எது என்று "திரும்பிப் பார்க்கும்" பதிவுங்கோவ் !
எனது 25வது பதிவும் கூட...
(டேய் அடங்குடா, பெரிய Leo Tolstoy ரேஞ்சுக்கு எழுதுற நினைப்பா? அப்படின்னு கல் வீசக் கூடாது ஆமா)

Serious Stuff starts...

ஜாதியின் பெயரால் அடக்குமுறைகளும், கீழ் ஜாதியினருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுதல் போன்றவை கடந்தகாலத்தில் நிகழ்ந்துள்ளன. "சரி, தவறு நிகழ்ந்துவிட்டது, இனி ஒற்றுமையாய் இருப்போம்" என்று கூறுவதற்கு பதிலாக "அவை நடக்கவேயில்லை" என்று சாதிப்பதையும், மேற்கொண்டு மக்களை அடிமையாகவே வைத்திருக்க புது கட்டுக் கதைகள் வலையுலகத்தில் (படித்தவர்களே) எழுதுவதையும் பார்த்து எரிச்சலடைந்தேன்.

"என்னையா புரட்சியாளன் மாதிரி பேசறே?" என்று கேட்கிறீர்களா?

நான் ஒன்றும் புரட்சியாளன் அல்ல, சாதாரணமானவனே. ஆனால் கடந்த கால தவறுகளையும், படிப்பினைகளையும் மறக்க விரும்பாதவன். மதத்தின் பெயரால் வலையுலகத்தில் பொய்யாய் பல எழுதப்படுகிறது. அவற்றிர்க்கு எதிர்வாதங்களை (Counter-argument) எழுத தொடங்கப்பட்டதே என்னுடைய Kans என்னும் இந்தப் பதிவு.

அப்படி நான் எழுதியவற்றில் குறிப்பிட விரும்பும் பதிவுகள்:

1. என் முதல் பதிவு
2. நிறைய பதிவர்களோடு வாதாடிய இந்தப் பதிவு
3. இன்னும் பதில் கிடைக்காத கேள்விகள் கொண்ட இந்தப் பதிவு
4. என் முதல் Video பதிவு
5. ராமர் பாலம் - இந்தப் பதிவிற்குத்தான் நான் அதிகம் உழைத்தது. (மொத்தமாக 4-5 மணிநேரங்கள் ஆகியிருக்கும்)
அதற்கு வந்த Comments நிறைய உற்சாகத்தைத் தந்தது.
6. நான் எழுதியுள்ள ஒரே நகைச்சுவைப்பதிவு

இந்த 25வது பதிவோடு சிறு இடைவெளி (2 வாரம்) எடுத்துக்கொள்ள எண்ணுகிறேன்.

சில காலம் கழித்து சந்திப்போம் நண்பர்களே.

Bye
உங்கள் நண்பன் கண்ஸ் - Kans

Labels:

சமஸ்கிருதத்தால் தமிழும் தமிழர்களும் பெற்றவை

(மொழி அரசியல் பற்றிய விவாதம்)

சமஸ்கிருதமும் தமிழும் மிகப் பழமையான மொழிகள்
வெறுமனே கண்மூடித்தனமாக "தமிழ் (மட்டும்) வாழ்க" என்பதிலோ குருட்டுத்தனமாக "சமஸ்கிருதம் ஒழிக" என்பதிலோ எனக்கு உடன்பாடில்லை.

1932 வரை மருத்துவக்கல்லூரியில் சேர வேண்டுமானால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பது ஒரு விதி (Rule).
இது எதற்கு? யார் இதனால் பயன் பெறுவார்கள்? கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். தினம் தினம் தோட்டத்தில் வேலை செய்யும் விவசாயி தன் மகனுக்கு சமஸ்கிருதம் சொல்லித்தர முடியுமா? அதே போல் ஒரு செருப்பு தைக்கும் ஆள், தன் மகளுக்கு சமஸ்கிருதம் சொல்லித் தர முடியுமா? ஆனால் சமஸ்கிருத அர்ச்சகர் தன் பிள்ளைகளுக்கு எளிதாக சொல்லித் தரமுடியும். அர்ச்சகர்கள் அனைவரும் பிராமணர்கள். இப்பொழுது புரிந்ததா? இதுவும் Reservation, But in reverse.

அக்காலத்தில் எத்தனை எத்தனை தமிழர்களுக்கு இப்படி வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும்?
நினைத்தாலே வயிறு குளு குளு என்று இருக்கிறது...
இன்று நான் சுயமாக சம்பாதிப்பது எனது கல்வியறிவினால் தான். இந்தக் கல்வியறிவும், வேலையும், பொருளாதார வாய்ப்புகளும் எனக்கு ஜாதி/சமஸ்கிருதம் காரணம் காட்டி எனக்கு மறுக்கப்பட்டிருந்தால்?????

குருட்டுத்தனமாக "சமஸ்கிருதம் ஒழிக" என்று எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எப்படியெல்லாம் நாம் ஒடுக்கப்பட்டோம் என்று தெளிவாகப் புரிந்துகொண்டு பிறகு எதிர்க்க வேண்டும். நான் சொல்வது சரியா?

குறிப்பு:
யாரேனும் "மருத்துவக் கல்லூரிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்" என்னும் சட்டம் யாருடைய முயற்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது?
யாருடைய முயற்சியால் நீக்கப்பட்டது? என்பதை தேதிவாரியாக(Timeline) அறிந்துகொள்ள தொடுப்பு (Link) தர முடியுமா?

Labels: ,