Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Wednesday, December 20, 2006

Hats off Shanti

Sorry for posting in English.
Today I am posting from a place where I could not type in tamil.(I was not active in internet for past few days)
Shanti soundararajan - She is from a poor family which lives on daily wages.By birth she is female, but has not reached pubetry - that is none of her fault(Probably her family coul not afford medical treatment for it - If any docotors are reading this, they can say whether such a treatment exists.)She did not do any malpractice like taking drugs.But the only mistake she did was to run and get a medal for her country.

Whats sad is the sarcastic way people deal with this issue. Dont they realise that they are arrogantly teasing a person's medical condition?Is this how they treat a person who is marginalised?

If Heroes are the people who face adversity with grit, then she is a real life hero.With so much hinderances of poverty and medical condition, if she could win, then hats off to her.The tamil community which pours crores on mumbai actresses can afford to honor a real star by providing 15 lakhs.

Saturday, December 16, 2006

தமிழ்மணம்/தமிழன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

வணக்கம்
கடந்த சில வருடங்களாக தமிழ் உபயோகிக்காமல் மறந்துவிடும் போலிருந்ததால் ப்ளாக் எழுத வந்தவன் நான்.
அதனால் என் தமிழில் நிறைய பிழைகள் இருக்கின்றன. அதனை நிவர்த்தி செய்யவும் வழிகள் இப்பொழுது இல்லை.

நான் அடிக்கடி செய்யும் பிழைகளின் பட்டியல்:
1) வல்லினம் மிகுதலில் குழப்பம்
(அதாவது க்/ச்/த்/ப் போன்ற எழுத்துக்கள் தோன்றும் இடங்கள்
உ.ம்: "கடைக்கு போ" - இது சரியா,
இல்லை "கடைக்குப் போ" இது சரியா? )

2) ன/ண குழப்பம்

3) ல/ள குழப்பம்

இந்த இலக்கண Rules பற்றி யாராவது பதிவு எழுதியிருக்கிறீர்களா?
எழுதியிருந்தால் தொடுப்பு (links) தர முடியுமா?
அதை தமிழ்மணத்திலும் ஒரு Permanent Link ஆக வைக்க இயலுமா?
அப்படி செய்தால் புதிதாக தமிழில் எழுத ஆரம்பிக்கும் அனைவரருக்கும் உபயோகமாயிருக்கும் என்பது என் கருத்து.
தவறுகளை சீக்கிரம் திருத்திக்கொள்ளவும் உபயோகமாயிருக்கும்.

நன்றி.

Friday, December 15, 2006

சரியா சொன்னாங்கப்பா....s

Mr.Dondu பதிவில் பெரியார் சிலை தொடர்பாக வஜ்ரா இட்ட பின்னூட்டம்:
//
அன்று தான் நம்மிடம் power இல்லை. இந்து தர்மம் இன்னல்களைத் தாண்டி வாழும் என்று நம்பிக்கைக் கொடுத்துக் கொண்டிருந்தோம். இன்றும் அதே பல்லவியைப் பாடவேண்டியதில்லை.

இழிவு படுத்தினால் தகுந்த பதிலடி கொடுக்க நிறையவே ஆள் இருக்கிறார்கள். நாம் இப்படி பயந்து பயந்து வாழத்தேவையில்லை.
//

இதே பதிலடியை பயமில்லாமல் அப்படியே சிதம்பரத்தில் தமிழை இழிவுபடுத்தியத்திய ஆட்களிடமும் நாம் காட்டியிருக்க வேண்டுமோ??

சிலையாவது கோவிலுக்கு வெளியே (அனுமதி பெற்று),
அர்ச்சனையோ கோவிலுக்கு உள்ளே....

யார் கேட்பார்கள்??????
(Private property பஜனை தொடங்கட்டும்...)

"Private property பஜனை தொடங்கட்டும்..." என்பதை திட்டி ஒரு அனானி கேவலமாகப் பின்னூட்டமிட்டுள்ளது. அவனுக்கு புரியவில்லை போலும். அவனுக்காக மேலும் சிறிது விளக்கம்:
சிதம்பர கோவிலில் தமிழ் வேண்டுமென்றபொழுது, அது "Private property", சட்டத்தை மதித்து பிரச்சனை செய்யாதே என்று ஒரு கோஷ்டி அறிவுரை செய்தது. அதே போல், இப்பொழுது நாங்கள் சொல்கிறோம் "பெரியார் சிலைக்கு சட்ட அனுமதி" வாங்கியாயிற்று, சட்டத்தை மதித்து நீயும் பிரச்சனை செய்யாதே.


Friday, December 08, 2006

இது ஒரு கதை

கண்களெல்லாம் மிளகாய்ப் பொடியால் எரிந்து கொண்டிருந்தது அவனுக்கு, ஆனால் சந்தோசமாக இருந்தான்.
காரணம் கோவிலுக்குள் சென்றதுதான். அவன் வம்சத்திலேயே கோயிலுக்குள் நுழைந்த முதல் மனிதன் அவன்தான்.
அதனால் சந்தோசமாக உணர்ந்தான். கூட்டமாக கோவிலுக்குள் நுழைய முயற்சிக்கையில் யாரேனும் தடுப்பார்களென்று எதிர்பார்த்ததுதான். போலீஸ் கொண்டு தடுப்பார்களென்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் மிளகாய்பொடி தூவி, அதுவும் பெண்கள் தடுப்பார்களென்று அவன் சிறிதும் எதிபார்க்கவில்லை. அவர்கள் வந்து சென்றபின் "தீட்டு" என்று கோவிலைக் கழுவி விட்டதாகக் கூட கேள்விப்பட்டான். தனக்குள் சிறித்துக்கொண்டான். மிளகாய்ப்பொடி எரிச்சல் கழுவினால் போய்விடும். ஆனால் அந்த ஈரோட்டுக் கிழவனோடு சேர்ந்து போராடி பெற்ற வழிபாட்டு உரிமையை யாராலும் இனி பிடுங்கிவிட முடியாது.

மகனுக்கு பக்தி அதிகம். தினம் கோவிலுக்கு செல்வான். ஒரு நாள் அவன் தந்தை அவர் எப்படி கோவிலுக்குள் முதன் முறை சென்ற பொழுது "வரவேற்கப்பட்டார்" என்பதை விளக்கினார். மகன் ஆச்சரியத்தோடும், மரியாதையோடும் தன் தந்தை சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

பேரனுக்கு தாத்தாவின் அனுபவம் பற்றி தெரியாது. அப்பாவை விட பக்தி அதிகம். வெறியும் உண்டு. அவன் ஊருக்கு வந்த காவியுடை பெரியவர் பேசிய பேச்சில் நரம்பெல்லாம் சூடேறி விட்டது அவனுக்கு. அவன் சொல் பேச்சு கேட்கும் நண்பர்களைக் கூட்டிக் கொண்டு செல்கிறான் ஸ்ரீரங்கம் நோக்கி கையில் சுத்தியலோடு. அவனுக்கு நீங்கள் யாரேனும் சொல்லுங்களேன் அவன் தாத்தாவின் அனுபவத்தைப் பற்றி.