Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Wednesday, January 24, 2007

யாரெல்லாம் அர்சகர்களாகக் கூடாது?

யாரெல்லாம் அர்சகர்களாகக் கூடாது?

1) தமிழை நீச பாஷை என்பவர்களும்,
2) தமிழர்களின் கடவுள்களான மாரியம்மன் போன்றவற்றை கீழ்த்தரமான கடவுள்கள் என்று திமிரில் இருப்பவர்களும்,
3) சமஸ்கிருதத்தில் மட்டும் அர்ச்சிப்பவர்களும்,
4) வர்ண பேதத்தை தூக்கிப் பிடிப்பவர்களும்,
5) தாங்கள் நடத்தும் கல்லூரியில் பிராமண மாணவர்களுக்கு தனி ஹாஸ்டலும் மற்றவர்களுக்கு தனி ஹாஸ்டலும் கொடுப்பவர்களும்
(இந்தக் கல்லூரி தமிழ்நாட்டில் தான் உள்ளது, பெயர் சொல்லுங்கள் பார்க்கலாம்?)
6) தமிழர்களின் உழைப்பிலும் வரிப்பணத்திலும் கோயில் கட்டிவிட்டு, அதில் தமிழைத் தடுக்கும் சிதம்பர தீட்சிதர்களும்,
7) அப்படி தடுக்கும் சிதம்பர தீட்சிதர்களுக்கு "Private Property" என்று சப்பைக்கட்டு கூறுபவர்களும்,
8) இதையெல்லாம் மறைத்து, ஹிந்து மதம் சமத்துவமானதென்று கூறுபவர்களும் அர்ச்சகர்களாகக் கூடாது.

நண்பர் ஹரிஹரன் கொடுத்த லிஸ்ட்"க்கும், என்னுடைய இந்த லிஸ்ட்"க்கும் ஒரு பெரிய வித்தாயசமுண்டு.
ஹரிஹரன் கொடுத்த லிஸ்ட்"ல் உள்ளவர்கள் யாரும் இதுவரை கோயில் அர்சகர்களாக ஆனதில்லை.
ஆனால் நான் கொடுத்த லிஸ்ட்"ல் உள்ளவர்கள் அனைவரும் காலம் காலமாக் தமிழர்களுக்கு அர்ச்சகர் "தொண்டு" செய்து வருபவர்கள்.

Thursday, January 18, 2007

ஹிந்துத்வா காவலரும், நடிகர் வடிவேலுவும்

1) தெரிஞ்சிக்கோங்க:
வீர ஸ்வர்கார் - ஹிந்துத்வா விதை துவிய சுதந்திர வீரன் என்பதால் சாதரண ஸ்வர்காராக இருந்தவர் "வீர ஸ்வர்காராக" அழைக்கப்படுகிறார். அந்தமான் சிறைத் தண்டனையிலிருந்து தப்பிக்க மன்னிப்புக் கோரி ஆயிரம் கடிதம் ப்ரிட்டிஷ்காரர்களுக்கு எழுதினாலும் அவர் "வீரமானவர்". சிறையிலிருந்து வெளி வருவதற்காக 5 வருடம் ப்ரிட்டிஷ் ஆட்சிக்கு துணை புரிந்தாலும் (அதாவது சுதந்திரத்திற்குப் போராடும் மற்றவர்களைக் காட்டிக் கொடுத்தாலும்) அவர் "வீரமானவர்". தூக்கு கயிறுக்குப் பயப்படாத வாஞ்சிநாதன், பகத் சிங் போன்றோர் எவ்வளவு வீரமானவர்களோ அவ்வளவு வீரமானவர் சிறைக்கு பயப்படும் எங்கள் ஸ்வர்க்கார். அதனால்தான் அவருடைய பெயரில் "வீர" அடைமொழி சேர்த்திருக்கிறோம். இதை நாங்கள் திரும்பத் திரும்ப சொல்லுவோம், சரியா...


2) சிரிச்சிக்கோங்க:நடிகர் வடிவேலு




படம் தெரியவில்லையென்றால் இந்த லின்க்கை
உபயோகிக்கவும்: http://www.youtube.com/watch?v=hN6XC_WK9HI
இப்பதிவில் இருக்கும் இரு பகுதிகளுக்கும் தொடர்பில்லை...

Saturday, January 13, 2007

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ஆன்மா/Soul/Rebirth போன்ற தத்துவங்கள் எல்லா மதங்களிலும் உண்டு. ஆனால் அதனை புரிந்துகொள்ளாமல், ஒருவர் ஆன்மா பற்றி பேசிவிட்டதாலேயே அவர் ஹிந்து மதத் தத்துவத்தை (மட்டும்) ஒத்துக்கொண்டதாக பிட்டு ஓட்டுபவர்களுக்கும்,

தமிழ்மண நண்பர்கள்/நிர்வாகிகளுக்கும்,

அரசியல் பேசா நண்பர்களுக்கும்,

அரசியல் மட்டும் பேசும் என்னைப் போன்றோர்கும்,

படித்துவிட்டு பின்னூட்டம் போடாதவர்களுக்கும்,

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Saturday, January 06, 2007

இதெல்லாம் வேணுமைய்யா...

வேறென்னையா வேணும்னு ஒருத்தரு WishList கேட்டிருக்காரு.
என்னோட List :
1) இந்தியாவில் கிட்டத்தட்ட 60 வருடம் கழித்து ஜனாதிபதியாகவோ, நீதிபதியாகவோ வந்த ஒரு சிலரைக் காட்டி ஒடுக்கப்பட்ட மொத்த சமூகமும் தற்பொழுது பாற்கடலில் மிதப்பதாக படம் போடக்கூடாது.

2) வெளிநாட்டிற்குப் போய் மதவெறியைத் தூண்டும் RSSக்கு திருட்டுத்தனமாக பணம் அனுப்புறதை நிறுத்தனும் (காமெடி என்னவென்றால், RSSக்கு திரட்டப்படும் நிதியின் பெயர் "India Development and Relief Fund " . தைரியமிருந்தால் "Hindu Development and Relief Fund" என்று திரட்ட வேண்டியதுதானே? )

3) கோயில் எனப்படுவது மன அமைதி தரும் இடமாக அமைய வேண்டும். அங்கு ஏற்றத்தாழ்வு இருந்தால் நிச்சயம் கீழ் ஜாதி என முத்திரை குத்தப்பட்டவர்களால் பெருமையுடன் கோயிலுக்கு செல்ல முடியாது.

இப்போதைக்கு இவ்வளோதான்.
படிக்கிற உங்களுக்கு ஏதாவது தோன்றினா, பின்னூட்டமா போடுங்க...