சிரிப்பு - பதிவர்களை நாய் துரத்தினால்...
நம் வலைப் பதிவர்கள் சிலரை நாய் துரத்தினால் அதற்கு அவர்கள் எப்படி React செய்வார்களென்று யோசித்ததில் வந்த வினையே இந்த நகைச்சுவைப் பதிவு. இது வரை வெறும் அரசியல் பதிவுகளே எழுதிய நான், ஒரு மாற்றத்திற்காக ஒரு நகைச்சுவைப் பதிவு எழுதியுள்ளேன். சிரிச்சுட்டு போங்க...
கைப்புள்ளை:
கைப்புள்ளையை நாய் துரத்துவதும், நாய் கைப்புள்ளையை துரத்துவதும் வீர விளையாட்டில் ஜகஜமென்பதால் சும்மா விட்டுவிடுகிறார். ஆனால், ஓடித்தப்பிகையில் அவர் முள் புதருக்குள் விழுந்ததையோ, வேட்டி காணாமல் போனதையோ ஊருக்குள்ள யாருக்கும் சொல்ல வேண்டாமென்று சங்கத்து சிங்கங்களுக்கு அன்புக் கட்டளை போட்டுவிடுகிறார்.
பொன்ஸ்:
"நல்ல வேளை, துரத்தியது நாயாக இருந்ததால் தப்பித்தோம்,
யானையாக இருந்தால் என்னாயிருக்குமோ" என்று சந்தோஷப்படுகிறார்.
குழலி:
"இந்த அபிமன்யுவை எதிர்கொள்ள என் ஏகலைவனை அனுப்புவேன்" என்று சொல்லி, தன் வீட்டில் கன்றுகுட்டி அளவில் இருக்கும் ராஜபாளைய நாயை அவிழ்த்துவிடுகிறார். துரத்திய தெருநாய் பயந்து திரும்பி ஓடிவிடுகிறது.
டோன்டு:
"சமீபத்தில் (1965ல்) செய்த போண்டாவைத்தானே அந்த நாய்க்கு போட்டேன், அதற்கு ஏன் துரத்த வேண்டும்?" என்று கேட்கிறார். அதற்கு "1965 என்பது சமீபமென்று உங்களுக்குத் தெரியும், ஆனால் நாய்க்குத் தெரியாதே" என்று யாரோ பின்னூட்டம் போடுகின்றார்கள்.
ஜடாயு:
நாயின் உரிமையாளர் யாரென்று பார்க்கிறார். உரிமையாளர் ஹிந்துவென்றால், சும்மா விட்டுவிடுகிறார். முஸ்லிமென்றால் "ஹிந்துவைத் துரத்திய ஜிகாதி நாய்" என்று பதிவு போடுகின்றார்.
பெண் போல் வலைப்பதிவு எழுதும் ஒருவர்:
நாயால் துரத்தப்பட்ட இவர், தன் வலைப்பதிவில் "நேற்று என்னை நாய் துரத்தியது" என்று ஒற்றைவரி பதிவு போடுகிறார். அதற்கு "Be careful ma", "அச்சச்சோ", "Take care di", "நாய் தப்பியதா?" என்று 368 வழிசல் பின்னூட்டங்கள் வருகின்றன.
விடாதுகருப்பு:
துரத்திய நாயைப் பார்த்து ஆந்திரா மிளகாயை விட காரமாய் திட்டுகிறார். நாய் வாலை சுருட்டிக் கொண்டு திரும்பி ஓடிவிடுகிறது.
இரவுக்கழுகார்:
எல்லோரையும் துரத்திய நாய் இவரை மட்டும் கடித்துவிடுகிறது (இதற்காக உஷாரான சிலரும் ;-), மற்றும் பலரும் சந்தோஷப்படுவீர்களென்று நினைக்கிறேன்). இரவுக்கழுகார், "நாம் நிறைய பதிவர்கள் பற்றி எழுதியிருக்கிறோம், யார் நம் மேல் நாய் ஏவிவிட்டார்கள்?" என்று குழம்பி போயுள்ளதாக கடைசியாக ஜூனியர் Kans ஸிடமிருந்து வந்த சில குறுஞ்செய்திகள் (SMS ) தெரிவிக்கின்றன.
செந்தழல் ரவி:
"பைட்டிங் செய்தால் வேலை கிடைக்காது" என்று பதிவு போடுகிறார். அதைப் படித்த நாய் துரத்துவதையும் கடிப்பதையும் நிறுத்திவிடுகிறது. :-)
(உங்கள் பெயர் இதில் இருப்பது பிடிக்கவில்லையென்றால் பின்னூட்டமிடுங்கள், நீக்கிவிடுகிறேன்...)

41 Comments:
நல்லா கலாய்ச்சிருக்கீங்க....
By ஜி, at 11:19 PM, February 01, 2007
அது சரி!
உங்களை நாய் துரத்தினால் எப்படி react' செய்வீர்கள்?
அதையுமல்லவா போட்டிருக்க வேண்டும்!
By SP.VR. SUBBIAH, at 11:53 PM, February 01, 2007
டோண்டு, ஜடாயு, பெண் போல் எழுதும் பதிவர் சூப்பர்...
இரவுக்கழுகாரும் சூப்பர்..:)))
By ரவி, at 11:54 PM, February 01, 2007
//பெண் போல் வலைப்பதிவு எழுதும் ஒருவர்:
நாயால் துரத்தப்பட்ட இவர், தன் வலைப்பதிவில் "நேற்று என்னை நாய் துரத்தியது" என்று ஒற்றைவரி பதிவு போடுகிறார். அதற்கு "Be careful ma", "அச்சச்சோ", "Take care di", "நாய் தப்பியதா?" என்று 368 வழிசல் பின்னூட்டங்கள் வருகின்றன.//
எனக்கென்னமோ இந்த விஷயத்த யாரும் எடுக்கச் சொல்வாங்கன்னு தோணல :))))))
By சென்ஷி, at 4:17 AM, February 02, 2007
எங்கள் பாகச தல பாலாவை லிஸ்டில் சேர்க்காததை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஏன் எங்கள் தலையை நாய் துறத்தவே துறத்தாதா?
பாகச தலையின் மானம்காக்கும் படை,
பாகச,
சென்னை.
By அருள் குமார், at 5:06 AM, February 02, 2007
Enungganna.. iRainEsan, nalladiyaar, suvanappriyan ivargalai naay thuRaththinaal enna pannuvaangannu pOtteenganna athuvum nallarukkumilla
By Anonymous, at 5:51 AM, February 02, 2007
//S. அருள் குமார் said...
எங்கள் பாகச தல பாலாவை லிஸ்டில் சேர்க்காததை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஏன் எங்கள் தலையை நாய் துறத்தவே துறத்தாதா?
பாகச தலையின் மானம்காக்கும் படை,
பாகச,
சென்னை. //
அய்யய்யோ அருளு கலக்கிட்டப்போ.
நான் கூட மறந்தேபோயிட்டேன்.
அதானே, தலய நாய் துரத்துறத பத்தி உடனே பதிவுல தலய நாய் துரத்துனத எழுதனும் பாகச சார்புல வேண்டி விரும்பி கேட்டுக்கறேன்...:)
பாகச டெல்லி கிளை
சென்ஷி
By சென்ஷி, at 6:27 AM, February 02, 2007
/ எங்கள் பாகச தல பாலாவை லிஸ்டில் சேர்க்காததை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஏன் எங்கள் தலையை நாய் துறத்தவே துறத்தாதா?
பாகச தலையின் மானம்காக்கும் படை,
பாகச,
சென்னை./
பாலாவை நாய் துரத்த நாயைப் பார்த்து பாலா சொல்கிறார் ; "இப்படி ட்ரெஸ் இல்லாம அம்மணமா வர்றியே ச்சீ ச்சீ போ போ நீ A நாய்்"
நாய் விடாமல் துரத்துகிறது. கிட்டே நெருங்கியதும் "இது உச்சக்கட்டம்இது உச்சக்கட்டம்" என்று சமுதாயத்தைப் பார்த்து கோபப்படவுமஅவர் மேல்் பரிதாபப்பட்டு நாய் ஓடிவிடுகிறது.
பாகச வெளியிலிருந்து ஆதரவு கொடுப்போர் சங்கம்,
பெங்களூர்.
By Unknown, at 6:28 AM, February 02, 2007
//நல்லா கலாய்ச்சிருக்கீங்க....
By ஜி//
வாங்க ஜி,
நன்றி
-------------------------
//அது சரி!
உங்களை நாய் துரத்தினால் எப்படி react' செய்வீர்கள்?
அதையுமல்லவா போட்டிருக்க வேண்டும்!
By SP.VR.சுப்பையா//
ஐயா வாங்க.
உங்களை மாதிரி பெருந்தலைகளெல்லாம் வந்தது ரொம்ப சந்தோஷம்.
என்னோட Reaction ஆ? திரும்பிப் பார்க்காம ஓடறதுதான், வேறென்ன ...
By Kans, at 6:46 AM, February 02, 2007
//டோண்டு, ஜடாயு, பெண் போல் எழுதும் பதிவர் சூப்பர்...
இரவுக்கழுகாரும் சூப்பர்..:)))
By செந்தழல் ரவி//
அண்ணா, உங்க லிஸ்டில் உள் குத்து ஏதும் இல்லையே?
By Kans, at 6:47 AM, February 02, 2007
//
//பெண் போல் வலைப்பதிவு எழுதும் ஒருவர்:
நாயால் துரத்தப்பட்ட இவர், தன் வலைப்பதிவில் "நேற்று என்னை நாய் துரத்தியது" என்று ஒற்றைவரி பதிவு போடுகிறார். அதற்கு "Be careful ma", "அச்சச்சோ", "Take care di", "நாய் தப்பியதா?" என்று 368 வழிசல் பின்னூட்டங்கள் வருகின்றன.//
எனக்கென்னமோ இந்த விஷயத்த யாரும் எடுக்கச் சொல்வாங்கன்னு தோணல :))))))
By சென்ஷி//
சரியா சொன்னீங்க சென்ஷி :))
உங்க பேருக்கு என்ன அர்த்தம்?
By Kans, at 6:47 AM, February 02, 2007
//ஏன் எங்கள் தலையை நாய் துறத்தவே துறத்தாதா?
By S. அருள் குமார்//
வாங்க அருள்,
சொல்லறதைப் பார்த்தா நீங்களே ஒரு நாய் ரெடி பண்ணி வெச்சிருப்பீங்க போல இருக்கு.
அடடா, உங்களுக்கு எவ்ளோ பாசம் உங்க தல மேல...
By Kans, at 6:48 AM, February 02, 2007
//Enungganna.. iRainEsan, nalladiyaar, suvanappriyan ivargalai naay thuRaththinaal enna pannuvaangannu pOtteenganna athuvum nallarukkumilla
vanthEri yavanan//
வருக vanthEri,
நான் அடிக்கடி படிக்கும் வலைப்பதிவர்களைப் பற்றி எழுதினேனென்று வைத்துக்கொள்ளுங்களேன் :-)
By Kans, at 6:48 AM, February 02, 2007
//பாலாவை நாய் துரத்த நாயைப் பார்த்து பாலா சொல்கிறார் ; "இப்படி ட்ரெஸ் இல்லாம அம்மணமா வர்றியே ச்சீ ச்சீ போ போ நீ A நாய்்"
நாய் விடாமல் துரத்துகிறது. கிட்டே நெருங்கியதும் "இது உச்சக்கட்டம்இது உச்சக்கட்டம்" என்று சமுதாயத்தைப் பார்த்து கோபப்படவுமஅவர் மேல்் பரிதாபப்பட்டு நாய் ஓடிவிடுகிறது.//
அருட்பெருங்கோ, இதுதான் இந்த மாத சிறந்த பாகச பின்னூட்டம்..
சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சுப்பா.....
:)))))))))))))))))))))))))))
சென்ஷி
By சென்ஷி, at 6:59 AM, February 02, 2007
அருட்பெருங்கோ, சென்ஷி, அருள்குமார், இங்கே பாகச கிளை ஆரம்பிச்சுட்டீங்க போல இருக்கு, நடத்துங்க, நடத்துங்க !!!
By Kans, at 7:27 AM, February 02, 2007
//ஏன் எங்கள் தலையை நாய் துறத்தவே துறத்தாதா?//
அதானே!
//பாகச வெளியிலிருந்து ஆதரவு கொடுப்போர் சங்கம்,
பெங்களூர்.//
ஹலோ, வெளியில இருந்து ஆதரவு கொடுக்கலாம். வெளியூருல இருந்துமா? அடடா! எங்க தலையோட புகழ் தமிழகம் தாண்டியும் பரவுதா?
By சீனு, at 7:31 AM, February 02, 2007
//ஏன் எங்கள் தலையை நாய் துறத்தவே துறத்தாதா?//
அப்படியே நாய் கட்டிச்சாலும், 'நாய் கடிச்ச 100 கடியில, டாப் டென் எதுன்னு ஒஎஉ போட்டி வெப்பாரு. சிங்கம்ல எங்க தல'...
By சீனு, at 7:33 AM, February 02, 2007
senshe பெயர் காரணம்
சென் - senthil
she - அது நாந்தான் என் பேருல முதல் மூணு எழுத்து.. :))
சென்ஷி
By சென்ஷி, at 7:41 AM, February 02, 2007
//ஹலோ, வெளியில இருந்து ஆதரவு கொடுக்கலாம். வெளியூருல இருந்துமா? அடடா! எங்க தலையோட புகழ் தமிழகம் தாண்டியும் பரவுதா? //
என்ன பேச்சு இது சின்ன புள்ளத்தனமா..?
டெல்லியில் பாகச ஆரம்பிச்சு 2 மாசம் ஆகப்போகுது. நேரமில்லாததால சரியா சங்கத்துக்கு யாரும் வர்றதில்ல.
சென்ஷி
பாகச கிளை செயலாளர்
டெல்லி
By சென்ஷி, at 7:45 AM, February 02, 2007
யானை என்னைத் துரத்துவதா!, யானை துரத்தினால், ஓரமாக ஒதுங்கி நின்று அதன் மேல் ஏறி உட்கார்ந்து உங்களைத் துரத்த வந்துடுவோம்ல! :)))
By பொன்ஸ்~~Poorna, at 8:09 AM, February 02, 2007
வாங்க பொன்ஸ்,
Lara Croft ரேஞ்சுக்கு Athlete வேலையெல்லாம் செய்வீங்க போல இருக்கு...
By Kans, at 8:20 AM, February 02, 2007
:)
ரெம்ப ரசிச்சேன்..
esply Dondu
By சிறில் அலெக்ஸ், at 9:24 AM, February 02, 2007
இந்த பக்கம் வந்ததில் மகிழ்ச்சி சிறில்,
//ரெம்ப ரசிச்சேன்..
esply Dondu //
மிக்க நன்றி
By Kans, at 9:34 AM, February 02, 2007
LOL.. Here is Appaavi's Countdown:
Top#1.பெண் போல் வலைப்பதிவு எழுதும் ஒருவர்
2.ஜடாயு
3.கைப்புள்ளை
4.டோன்டு
5.இரவுக்கழுகார்
6.செந்தழல் ரவி
7.பொன்ஸ்
8.விடாதுகருப்பு
9.குழலி
By Anonymous, at 9:45 AM, February 02, 2007
// பெண் போல் வலைப்பதிவு எழுதும் ஒருவர்:
நாயால் துரத்தப்பட்ட இவர், தன் வலைப்பதிவில் "நேற்று என்னை நாய் துரத்தியது" என்று ஒற்றைவரி பதிவு போடுகிறார். அதற்கு "Be careful ma", "அச்சச்சோ", "Take care di", "நாய் தப்பியதா?" என்று 368 வழிசல் பின்னூட்டங்கள் வருகின்றன. //
சூப்பருங்க .... :)
By Yogi, at 9:47 AM, February 02, 2007
துரத்திய நாயைப் பார்த்து டோண்டு கூறுகிறான், "என்ன ஜிம்மி, என்ன கோபம். ஒரு வடை போறலையா? இப்படித்தேன் இஸ்ரவேலர் ஒருத்தர் சமீபத்துல 1973 யோம் கிப்பூர் யுத்தத்தின் போது..."
நாய் வாலை காலுக்கடியில் சுருக்கிக் கொண்டு கீ கீ கீ என்று கத்திக் கொண்டே அப்பால் ஓடுகிறது.
இஸ்ரேலைப் பற்றிப் பேச அடுத்து யார் மாட்டுவார் என்று பார்க்கிறான் டோண்டு. அதோ, தூரத்துலே வரது kans-தானே? மாட்டினாருடா மனுஷன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
By dondu(#11168674346665545885), at 10:35 AM, February 02, 2007
வாங்க அப்பாவி,
Countdown போடுமளவிற்கு ரசித்ததில் மகிழ்ச்சி :-)
By Kans, at 10:45 AM, February 02, 2007
வருக பொன்வண்டு
//சூப்பருங்க .... :) //
நன்றிங்க...
By Kans, at 10:46 AM, February 02, 2007
வருகைக்கு நன்றி டோண்டு...
உங்களுடைய "ஜாதி-தெருப்பெயர்" பதிவு நன்றாக இருந்தது. அதைப் பற்றிக் கூட பேசலாம். ஆனால் இது நகைச்சுவைப் பதிவு. அதனால் அரசியலை வேறு பதிவில் வைத்துக்கொள்ளலாம்.
By Kans, at 10:56 AM, February 02, 2007
>> ஜடாயு:
நாயின் உரிமையாளர் யாரென்று பார்க்கிறார். உரிமையாளர் ஹிந்துவென்றால், சும்மா விட்டுவிடுகிறார். முஸ்லிமென்றால் "ஹிந்துவைத் துரத்திய ஜிகாதி நாய்" என்று பதிவு போடுகின்றார். >>
:))))
nallA kalAsittinga!
By நியோ / neo, at 1:44 PM, February 02, 2007
/அடடா! எங்க தலையோட புகழ் தமிழகம் தாண்டியும் பரவுதா? /
////என்ன பேச்சு இது சின்ன புள்ளத்தனமா..?////
அதானே!!
பா.க.ச.
அமெரிக்கா கிளை
By சேதுக்கரசி, at 11:53 PM, February 02, 2007
பா.க.ச.வின் ஆதங்கத்தைத் தீர்த்துவைத்த அருட்பெருங்கோவுக்கு நன்றி :)
By சேதுக்கரசி, at 11:53 PM, February 02, 2007
neo, சேதுக்கரசி வருக வருக...
By Kans, at 12:43 AM, February 03, 2007
/////
/அடடா! எங்க தலையோட புகழ் தமிழகம் தாண்டியும் பரவுதா? /
////என்ன பேச்சு இது சின்ன புள்ளத்தனமா..?////
அதானே!!
பா.க.ச.
அமெரிக்கா கிளை
/////
என்னா??? அமெரிக்காவா?????????
By சீனு, at 12:51 AM, February 03, 2007
//என்னா??? அமெரிக்காவா????????? //
என்ன இதுக்கே வாய பொளந்துட்டீங்க.
செவ்வாய் கிரகத்துல பாகச கொடி நட்டு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கறதுக்காக ஆனை தலைவி - பொன்ஸ் போகப்போறாங்க.. தெரியுமுல்ல.
வியாழன் கிரகத்த அருளுக்கிட்டயும், சூரியன்ல லக்கிலுக்கும் போறத பத்தி பேச்சு வார்த்தை நடக்குது...
சென்ஷி
By சென்ஷி, at 7:07 AM, February 03, 2007
ஆமா! இந்த விஷயம் அந்த பலி ஆட்டுக்கு (பாலா தான்) தெரியுமா சென்ஷி?
By சீனு, at 6:27 AM, February 04, 2007
//என்னா??? அமெரிக்காவா?????????//
இதுக்கே இப்படி அசந்தா எப்படி? மேல்விவரங்களுக்கு இந்த வார நட்சத்திரத்தின் பதிவைப் பாருங்க:
http://wethepeopleindia.blogspot.com/2006/11/blog-post_22.html
By சேதுக்கரசி, at 4:52 PM, February 05, 2007
//ஆமா! இந்த விஷயம் அந்த பலி ஆட்டுக்கு (பாலா தான்) தெரியுமா சென்ஷி? //
அய்யா, பலி ஆடுங்கறது ஓல்டு ஃபேஷன்... நாங்கள்லாம் அத தாண்டி ஓடிட்டிருக்கோம். சந்தேகமாயிருந்தா தலயோட லேட்டஸ்ட் பதிவ பாருங்க
சென்ஷி
By சென்ஷி, at 5:52 AM, February 06, 2007
முகம்மது யூனுஸ் (ஹாரிபாட்டர்), நாட்டாமை, முரளிமனோகர் போன்ற பதிவர்களின் பெயரையும் சேர்க்கவும் :-)
By லக்கிலுக், at 6:00 AM, February 06, 2007
நல்ல நகைச்சுவை...
By Madhu Ramanujam, at 6:02 AM, February 06, 2007
வாங்க லக்கிலுக்,
நீங்க சொன்னதில் உள்ள ஒருவர், கடி வாங்கியும் "வலிக்கவேயில்லை" என்று சொல்லுகிறாரே :) !!
வாங்க மதுசூதனன்,
முதல் முறை வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். "போப் யாரென தெரியுமா?" பதிவில் நன்றாக விளையாடியுள்ளீர்கள் :)
By Kans, at 9:38 AM, February 06, 2007
Post a Comment
<< Home