க்வாட்டர் கொண்டாட்டம் - 25வது பதிவு
என்னை பதிவு எழுத தூண்டியது எது என்று "திரும்பிப் பார்க்கும்" பதிவுங்கோவ் !
எனது 25வது பதிவும் கூட...
(டேய் அடங்குடா, பெரிய Leo Tolstoy ரேஞ்சுக்கு எழுதுற நினைப்பா? அப்படின்னு கல் வீசக் கூடாது ஆமா)
Serious Stuff starts...
ஜாதியின் பெயரால் அடக்குமுறைகளும், கீழ் ஜாதியினருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுதல் போன்றவை கடந்தகாலத்தில் நிகழ்ந்துள்ளன. "சரி, தவறு நிகழ்ந்துவிட்டது, இனி ஒற்றுமையாய் இருப்போம்" என்று கூறுவதற்கு பதிலாக "அவை நடக்கவேயில்லை" என்று சாதிப்பதையும், மேற்கொண்டு மக்களை அடிமையாகவே வைத்திருக்க புது கட்டுக் கதைகள் வலையுலகத்தில் (படித்தவர்களே) எழுதுவதையும் பார்த்து எரிச்சலடைந்தேன்.
"என்னையா புரட்சியாளன் மாதிரி பேசறே?" என்று கேட்கிறீர்களா?
நான் ஒன்றும் புரட்சியாளன் அல்ல, சாதாரணமானவனே. ஆனால் கடந்த கால தவறுகளையும், படிப்பினைகளையும் மறக்க விரும்பாதவன். மதத்தின் பெயரால் வலையுலகத்தில் பொய்யாய் பல எழுதப்படுகிறது. அவற்றிர்க்கு எதிர்வாதங்களை (Counter-argument) எழுத தொடங்கப்பட்டதே என்னுடைய Kans என்னும் இந்தப் பதிவு.
அப்படி நான் எழுதியவற்றில் குறிப்பிட விரும்பும் பதிவுகள்:
1. என் முதல் பதிவு
2. நிறைய பதிவர்களோடு வாதாடிய இந்தப் பதிவு
3. இன்னும் பதில் கிடைக்காத கேள்விகள் கொண்ட இந்தப் பதிவு
4. என் முதல் Video பதிவு
5. ராமர் பாலம் - இந்தப் பதிவிற்குத்தான் நான் அதிகம் உழைத்தது. (மொத்தமாக 4-5 மணிநேரங்கள் ஆகியிருக்கும்)
அதற்கு வந்த Comments நிறைய உற்சாகத்தைத் தந்தது.
6. நான் எழுதியுள்ள ஒரே நகைச்சுவைப்பதிவு
இந்த 25வது பதிவோடு சிறு இடைவெளி (2 வாரம்) எடுத்துக்கொள்ள எண்ணுகிறேன்.
சில காலம் கழித்து சந்திப்போம் நண்பர்களே.
Bye
உங்கள் நண்பன் கண்ஸ் - Kans
Labels: சுய விளக்கம்