Blog tracker

Kans - கண்களும் மனங்களும்

Tuesday, November 28, 2006

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...

என்னுடைய ஒரு பதிவில் ஒரு பதிவர் இவ்வாறு பின்னுட்டமிட்டிருந்தார்:
"குழந்தைத் திருமணம் வேறு, பொருந்தாத் திருமணம் வேறு. இரண்டாவதில் மணமகனுக்கும் மணமகளுக்கும் ரொம்ப வயது வித்தியாசம் இருக்கும். பெண்ணுக்கு 20 வயதிருக்குக்கும். அவளை அறுபது வயதுக்காரருக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் தாரமாகக் கட்டிக் கொடுப்பார்கள். அதைதான் தி.க.வினர் எதிர்த்தனர். பெரியார் (மணியம்மையை திருமணம் செய்து) எல்லா ஆதரவாளர்கள் முகத்திலும் கரியைப் பூசினார். நீங்கள் அதை இங்கு பூசி மொழுக இயலாது. எல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன."

அதற்கு நான் இட்டப் பின்னூட்டம்:

" ஐயா, பெரியாரைத் தாங்கவில்லை.இவற்றிற்கு கட்சி சார்பற்ற links தர இயலுமா? கண்டிப்பாக பார்க்கிறேன்.இத்தலைமுறையை சேர்ந்த எனக்கு அவரைப் பற்றி மேலும் தெரிய அவை வேண்டும்.
//பெண்ணுக்கு 20 வயதிருக்குக்கும். அவளை அறுபது வயதுக்காரருக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் தாரமாகக் கட்டிக் கொடுப்பார்கள். அதைதான் தி.க.வினர் எதிர்த்தனர்.//
நான் ஏற்கனவே திருமணம் என்பது சொந்த விஷயம் என்று சொல்லியிருக்கிறேன். ஒரு பெண்ணின் சம்மதத்தோடு இது நடந்தால் இதில் தவறேதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதை எதிர்க்க தி.க விற்கோ, எந்தக் கட்சிக்கோ உரிமையில்லை. ஆனால் பணபலத்தில் ஒரு முதியவர் ஒருப் பெண்ணை அடைய நினைத்தால் அதை எதிர்க்கலாம்.
தி.க வினர் எதனை எதிர்த்தனர் என்று கொஞ்சம் தெளிவாக சொல்லுங்களேன்.
" என்று கேட்டிருந்தேன்.

எனக்கு பதில் வராததால் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்:
தி.க வினர் ஏன் பொருந்தாத் திருமணத்தை எதிர்த்தனர்?
தி.க வினர் பொருந்தாத் திருமணத்தை எதிர்க்கையில், பெண் சம்மதிதாலா என்பதை கருத்தில் எடுக்காமல் குருட்டுதனமாக எதிர்த்தார்களா ( அக்காலத்தில் பெண்ணின் சம்மதம் கேட்டார்களா என்று என்னைக் கேட்காதீர்கள்) ?
இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தனவா?.

Friday, November 24, 2006

அரைத்த மாவு !!!

நண்பர்களே,
இப்பதிவு எனது முந்தைய பதிவினையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் ஆராயும் பதிவு. ( விட்டுத் தொலையேன்டா என்று சொல்லுறீங்களா? முடியாது :-) ) போன பதிவில் நான் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லவில்லையோ என்று நான் அஞ்சுகிறேன்.
அதனால் இப்பதிவை, போன பதிவின் விரிவாக்கமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஜாதி விஷயத்தில் மக்களை மூன்று வகையாக பிரிக்கலாம்:
1) உயர்ந்தவர்கள் - Idealists: ஜாதியை ஒழிக்க நினைப்பவர்கள். அதற்காக தங்களால் முடிந்த எல்லாம் செய்பவர்கள்
(கலப்புத் திருமணம் உட்பட).

2) குறுகிய மனம் கொண்டவர்கள்: ஜாதியால் தங்களுக்கு ஆதாயமிருப்பதால் அந்த கட்டமைப்பு உடைவதை விரும்பாதவர்கள்.

முதலிரண்டு வகையினரும் மக்கள் தொகையில் மிகக் குறைவு.

3) சாமானியர்கள்: உங்களையும் என்னையும் போல, தினம் வேலைக்குப் போய், உழைத்து வருபவர்கள்.
தங்கள் ஜாதியை தூக்கிப் பிடிக்க மாட்டார்கள். இவர்கள் நட்பிலும், வீட்டுக்குள் ஒருவரை அனுமதிப்பதிலும் ஜாதி பார்க்காதவர்கள். எல்லோரையும் சமமாக பார்ப்பவர்கள். ஆனால் கலப்புத் திருமணம் செய்திருக்க மாட்டார்கள்.
இவர்களே மக்கள் தொகையின் பெரும்பான்மையானவர்கள்.


ஜாதி ஒழிப்பு ஒரே நாளில் நடந்து விடாது.
A journey of 1000 miles will start with the first step என்பார்கள்.
இந்த மூன்றாம் வகை சாமானியர்கள், எல்லோரையும் சமமாக நடத்துவதன் மூலம் ஜாதி ஒழிப்பின் முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்கள். Luckylook சொன்னது போல் தங்களுக்கு ஜாதிக்குள் திருமணம் நடந்தாலும், தங்கள் பிள்ளைகள் விரும்பினால் கலப்புத் திருமணம் செய்து வைக்கும் மனப்பக்குவம் உடையவர்கள். சமுதாய மாற்றத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டதால் குறுகிய மனமுடையவர்களை விட பல மடங்கு மேலானவர்கள்.

குறுகிய மனமுடையவர்களிடம், சாமானியர்கள் யாரேனும் அவர்களுடைய narrow-mindednessஐ சுட்டினால் "நீ மட்டும் யோக்கியமா?" என்னும் தொனியில் கலப்புத்திருமண பிரச்சனையை கிளப்புவார்கள். இதன் மூலம் தங்களுடைய குறுகிய எண்ண ஓட்டத்தை நியாயப்படுத்திக்கொள்கிறார்கள். இதுவே என் போன பதிவின் கருத்து.

சில பின்னூட்டங்கள் தொடர்பாக:::

பின்னூட்டம் 1: மாயவரத்தான், "கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போகப்போறானாக்கும்!" என்று சொல்லியுள்ளார். ஒரு தவறான பழமொழி கொண்டு, சூழ்நிலையை தவறாக புரிந்துகொண்டுள்ளார்.
A journey of 1000 miles will start with the first step - இந்த பழமொழிகொண்டு புரிந்துகொள்ள முயற்சியுங்கள் மாயவரத்தான்.

பின்னூட்டம் 2: Hariharan எழுதியது "தான் பிறந்த உயர் சாதியோடு அதிகம் இணைத்துப் பெருமையடித்து அடுத்தசாதியை இழிவுபடுத்தி, அடக்கி ஆதிக்கம் செலுத்துவதை கைவிட்டு, தனிநபராக உயர் சாதியில் பிறந்தவர்கள் அக்கறையோடும் பொறுப்புணர்வோடும் இருக்கவேண்டும். உயர்சாதி என்பது ஓபிசி/எம்பிசி இவர்களையும் உள்ளடக்கியது." -- நல்ல கருத்து.

பின்னூட்டம் 3: Krishna அவர்கள் "ஏன் அனைவரும் சேர்ந்து வாழும் வழிமுறைகளை ஆராயக் கூடாது? உங்கள் வாதம் முழுவதுமே, குழு உணர்ச்சி, தன் குழுக்காகப் போராடுதல் (யாரை எதிர்த்து என்ற வினா இயல்பாகவே எழுகிறது) போன்றவற்றை பின்பற்றியிருப்பது ஒரு ஆரோக்கியமான போக்காகத் தெரியவில்லை. நாம் அனைவரும் நமக்குள்ளே போராடிக் கொண்டே இருக்க வேண்டும்? பிறகு எப்படி முன்னேறுவது? ஆங்கிலேயரோ, மொகலாயரோ வந்து மீண்டும் நம்மை அடிமைப் படுத்தும் வரையா? ஜாதி நம்மைப் பிரிக்கிறது என்பது இன்றைய கால கட்டத்தில் அபத்தமாக இருக்க வேண்டும் - அப்படி இல்லாதது வருத்தமளிக்கிறது. " என்று ஒரு நல்ல கருத்து கூறினார்.

ஆனால் "அனைவரும் அர்ச்சகராகலாம்" என்னும் சட்டத்தை பற்றி கேட்டால் "ஜாதி சார்ந்த சில தொழில்கள் என்றுமே இருந்திருக்கின்றன. இதனால் நாட்டிற்கு எந்த விதத்தில் கேடு - இதைக் கொண்டு வந்ததால் என்ன பயன் - இப்போது இது தேவையா? " என்று நழுவிவிட்டார்.

சார், "ஜாதி நம்மைப் பிரிக்கிறது என்பது இன்றைய கால கட்டத்தில் அபத்தமாக இருக்க வேண்டும் " இப்படி கூறிய Krishna "ஜாதிகள் இல்லாத சமுதாயத்தில் அனைவரும் அர்ச்சகராக என்ன தடை" என்று சொல்வார் என நான் எதிர்பார்த்தேன்.

பின்னூட்டம் 4: விடாது கருப்பு அவர்கள் கடும் சொற்கள் பயன்படுத்தியிருந்தார். அதனை Edit செய்திருந்தேன். கருப்பு அவர்களே, Edit செய்ய நேரமில்லையென்றால், நேரம் வரும் வரை பின்னூட்டம் Moderate செய்யாமல் தூங்கிக்கொண்டிருக்கும். அதனால் இனி வரும் பின்னூட்டங்களில் கடும் சொற்கள் பயன்படுத்த வேண்டாம் (என் பதிவிலாவது).

பின்னூட்டம் 5: Dondu அவர்கள் நான் திருமணமானவன் என நினைத்துக்கொண்டார். தவறு. நான் இன்னும் Bachelor தான்.

இத்தோடு இந்த விவாதத்திற்கு வணக்கம் போட எண்ணுகிறேன். காரணம், போன பதிவிலேயே இதனை போதிய அளவு கடித்து, குதறி, அலசி, ஆராய்ந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது.

Wednesday, November 22, 2006

ஜாதி - குறுகிய மனங்களின் தர்க்கம்

எனக்கும் என் நண்பர்களுக்கும் ஜாதியைப் பற்றி காரசாரமாக விவாதங்கள் நடக்கும்.நான் ஜாதிகள் கூடாது அனைவரும் சமம் என்று பேசினால், சில ஆட்கள் கேட்கும் முதல் கேள்வி "நீ ஜாதிகுள்ளே தான் கல்யாணம் பண்ணுவியா?" . கேட்டுவிட்டு ஏதோ மடக்கிவிட்டதாக புளங்காகிதம் வேறு. என் நெருங்கிய நண்பரே என்னைக் கேட்டதுண்டு.

ஜாதி என்பது சமுதாய அளவில் பார்க்கையில் பல கொடுமைகள் புரியும் ஒரு பழக்கம். அது பிறப்பின் அடிப்படையில் ஒருவனுக்கு வாய்ப்புகள்/மரியாதை மறுக்கப்படுதல்.

ஒருவனின் திருமணம் என்பது சொந்த விவகாரம். எத்தனையோ நண்பர்கள் முற்போக்கு எண்ணமுடையவர்களாக இருந்தாலும் கல்யாணத்தை பெற்றோர்கள் கையில் விட்டு விடுவார்கள். (சொந்த முயற்சியில் ஒன்னும் பலிக்காமல் போயிருக்கலாம் :-) ) அதனால் அவர்களுக்கு திருமணம் அவர்களின் ஜாதியிலேயே அமையும். அதற்காக அவர்கள் சமுதாய அளவில் ஜாதியை எதிர்க்கக் கூடாதா என்ன?
இப்படி குறுகிய மனதுடன் தர்க்கம் செய்பவர்களுக்கு என்ன பதில் சொல்லலாம்?

Thursday, November 09, 2006

அஞ்சலி

கரை தாண்டி இருந்தும் சகோதர
முறை தானே அவர்கள்
உறவின் செய்திகளை
"உலகச் செய்தி"யில் படிக்கையில்
உறுத்தத்தான் செய்கிறது

கணிணியில் கேட்டுக் கொண்டிருந்த
காதல் பாட்டு கசக்கிறது
ஈழத்தின் இழப்புகளைக் கேட்டு

நிறுத்திவிட்டு அழுகிறேன்
நிசப்தத்தில்...

(ஒரு இந்தியத் தமிழனாய் இருந்து
என்னால் இந்த இரங்கல்தான் தர முடிகிறது :-( .
40 பேரைக் கொன்ற இந்த செய்கைக்கும் ஒரு
காரணம் சொல்லாமலா போவார்கள் அந்த அரக்கர்கள்)

Tuesday, November 07, 2006

சினிமா - S.J. சூரியா செய்யும் அசிங்கம்

சினிமா நம் பொழுதுபோக்கின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. நமக்கு மூன்று முதல்வர்களை தந்திருக்கிறது. ஆனால் அதன் தரம் எந்த அளவில் இருக்கிறது? மணிரத்னம், பாரதிராஜா போன்றவர்கள் கூட சதையை காட்ட ஒரிரு காட்சிகள் வைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். திறமையில் அடுத்த நிலையில் இருக்கும் சிலரது சினிமாக்கள், சதையை மட்டுமே நம்பி படமெடுக்கிறார்கள். இதில் ரசிகர்கள் கேட்கிறார்கள் என்று பழி திருப்பிகிறார்கள்.

முகமே பார்க்க சகிக்காத டைரக்டர் சூர்யா, அவன் படத்தில் கதாநாயகிகளை ஆடையுரித்து படத்தை ஓட்டுகிறான். வேர்வை நாற்றத்தை Deodorant போட்டு மறைப்பதைப் போல். (அவன் அழகுக் குறைவு என்பதால் அவனைத் திட்டவில்லை, அவனை திட்ட வேண்டுமென்று அழகைக் குறை கூறகிறேன்). இதில் ஜாதி/அரசியல் சார்பாக சசிகலாவின் மனைவி... ஸாரி... கணவன் நடராஜனிடம் சரணடைந்து ஸென்சார் போர்டை ஏமாற்றுவது வேறு. இவன்களுக்கெல்லாம் திறமைக்கு பஞ்சம் வந்ததால் படத்தில் சதையை போட்டு படம் ஓட்டுகிறார்கள்.

அடுத்து, யதார்த்தை காட்டுகிறோமென்று ஒரு சப்பைக் கட்டு.
இவன்களின் படத்தைப் பார்த்து ஸெக்ஸையும், காதலையும் குழப்பிக் கொள்வதற்கு பேசாமல் Porn பார்த்து உண்மையையாவது தெரிந்து கொள்ளலாம். ஏன் ஸெக்ஸ் சம்பந்தப்பட்ட யதார்த்தங்கள் தான் இந்த மாமாக்களின் கண்களுக்குத் தெரிகிறாதா? மக்களின் எத்தனையோ துன்பங்களும் யதார்த்தம்தானே? அவற்றை காட்ட வேண்டியதுதானே?

திடீரென்று ஏன் இந்தப் புலம்பல்?
இன்று ஒரு பள்ளியின் வாசல் அருகே மிக மிக Revealing ஆன போஸ்டர் பார்த்ததால் :-( .....

Shitttt....

(Title ல் S.J. சூரியா என்று மாற்றியுள்ளேன் )

Wednesday, November 01, 2006

ஈழம் - அகராவிற்கு...

திரு. அகரா அவர்கள் மிகவும் பாசத்தோடு திரு சு.ப அவர்களுக்கு சில கேள்விகள் கேட்டுள்ளார். நான் என் பங்கிற்கு திரு. அகராவிடம் சில கேள்விகள் கேட்கிறேன்:

1) ஒரு இயக்கம் நடத்த பணம் தேவைப்படுகிறதே, அதை வரியாகத்தானே பெறனும்? A9 வழியாக எடுத்துச் செல்வது வியாபாரிகள் தானே? அவர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதி தானே வரியாக செலுத்துகிறார்கள். இதற்கு ஏன் கண்ணீர் வடிக்கிறீர்?
2) A9 பாதையை மூடிய சிங்களவனை என்னப்பா சொல்லப் போகிறீர்? இல்லை அவர்கள் நிழல்களிலிருந்துதான் எழுதுகிறீர்களோ?
3) மக்களை, சிங்கள இராணுவத்திற்கு கேடையமாக கப்பல் போக்குவரத்தில் பயன்படுத்துவது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
4) 6 லட்சம் மக்களுக்கு எல்லா உணவுகளையும் கப்பலிலே கொண்டு வர முடியுமா?
5) யுத்த காலத்தில் சிங்களவன் அவன் படைகளுக்கு உணவளிக்கதான் முன்னுரிமை தருவான், தமிழர்களுக்கா உணவு தருவான். அப்படி கனிந்த உள்ளம் சிங்களவனுக்கு இருந்திருந்தால் ஈழப்பிரச்சனையே உருவாகியிருக்காதே.
6) என்ன இருந்தாலும் புலிகள் துணையின்றி சிங்களவனின் தமிழர்-அழிப்பை எதிர்கொள்ள முடியாது. ஆதலால் புலிகளா இல்லை சிங்களவனா என்று முடிவு செய்துகொள்ளும்.

இதில் ஒரு கேள்விகேனும் பதில் சொல்வீரா?